229. நல்லது, நீங்கள் நியாயப்பிரமாணத்துக்கு கட்டுப்பட்டவர்கள் அல்ல. உதாரணமாக, இங்கு அதே காரியம்; இதை நான் இயற்கை வழியில் வேகமாக விளக்குகிறேன். உதாரணமாக, நீங்கள் தெருவில் அதிகபட்சம் மணிக்கு முப்பது மைல் வேகத்தில்தான் 'செல்ல வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது என்று வைத்துக் கொள்வோம். சரி, இப்பொழுது நான் தெருவில் மணிக்கு நாற்பது மைல் வேகத்தில் செல்கிறேன் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது நான் சட்டத்தினால் (பிரமாணத்தினால்) குற்றவாளியென்று தீர்க்கப்படுகிறேன். ஆனால் நான் தெருவில் மணிக்கு முப்பது மைல் மட்டும் செல்வேனானால், நான் பிரமாணத்தின் கீழ் இல்லை. பாருங்கள்? அதுதான் கிறிஸ்துவுக்குள் சுதந்தரம் (பாருங்கள்?) அதே காரியம்.
230. நீங்கள் செய்யாத வரைக்கும் பிரமாணத்துக்கு கட்டுப் பட்டவர்கள் அல்ல... நான் திருடாமல், பொய் சொல்லாமல், புகை பிடிக்காமல், விபச்சாரம் செய்யாமல், இவை ஒன்றையும் நான் செய்யாமலிருந்தால், நான் பிரமாணத்துக்கு கட்டுப்பட்டவன் அல்ல. பாருங்கள்? நான் நியாயப் பிரமாணத்திலிருந்து விடுதலையாக்கப் பட்டிருக்கிறேன். நான் கிறிஸ்துவுக்குள் இருக்கிறேன்...