231. இன்று காலையில் நடந்த பேட்டிகளில் இது போன்ற சில கேள்விகள் என்னிடம் கேட்கப்பட்டன. இப்படிப்பட்டகாரியங்களைக் குறித்து நான் தனிப்பட்ட முறையில் உங்களிடம் பேசுவது நலம் (பாருங்கள்?), ஏனெனில் நான் கூற வேண்டிய சொற்களும் காரியங்களும்... இதை நான் கணவன் மனைவியிடம்...
232. இதை சரியான முறையில் செய்வதற்குரிய வாய்ப்புண்டு. இதை நான் பொதுவாக கூறுகிறேன். ஒரு ஸ்திரீயின் வாழ்க்கையில், அவள் கருத்தரிக்க இயலாத எத்தனையோ நாட்கள் உண்டு உங்களுக்குப் புரிகிறதா? சரி, ஏன்...
233. இப்பொழுது, சில நேரங்களில் வயிற்றிலுள்ள குழந்தை ஸ்திரீயின் உயிருக்கே ஆபத்து விளைவிக்க கூடும். அவளுக்கு குழந்தை உண்டானால், அது அவளைக் கொன்று விடக் கூடும். எனவே அதன்பேரில் நீங்கள் கவனமாயிருக்க வேண்டும். பாருங்கள்? எனவே அதைக்குறித்து மிகவும் கவனமாயிருங்கள். பாருங்கள், அது உயிரைத் தோன்றச் செய்தல், நீங்கள் பூமியில் எதை தோன்றச் செய்கிறீர்களோ, அதைப் பொறுத்தது.
234. உங்கள் மனைவி வியாதிப்பட்டவளாயிருந்து, அவள் கருத்தரித்தல் அவளை கொன்று விடுமானால், அதை நான் செய்யவே மாட்டேன். நீங்கள் அவ்விதம் செய்ய கர்த்தர் விரும்புவார் என்று எனக்குத் தோன்றவில்லை. இந்த காரியங்களைக் குறித்து என்னிடம் தனியே வாருங்கள், தனிப்பட்ட முறையில் பேட்டி காணுங்கள். உங்களிடம் நான் தனிப்பட்ட முறையில் பேசட்டும், (பாருங்கள்?), அப்பொழுது நான்...
235. பாருங்கள், தனிப்பட்ட நபர் ஒவ்வொருவரும், அவர்கள் என்னிடம் பொய் சொல்லுகிறீர்களா இல்லையா என்று என்னால் கூற இயலும். பாருங்கள்? அவர்கள் என்னிடம் வித்தியாசமான காரியங்களைக் கூறுகின்றனர். நான் உங்களை தனிப்பட்ட முறையில்... பாருங்கள்? ஏனெனில் நீங்கள் இவ்விதமாக தெரியப்படுத்துகிறீர்கள். உங்களுக்குத் தெரிவதில்லை. அது ஏனென்றால், ஒரு தனிப்பட்ட நபர் அதில் ஈடுபட்டிருக்கிறார், அப்படிப்பட்ட காரியங்கள்; அதை என்னால் கூற முடியும், நீங்கள் உண்மையை கூறுகிறீர்களா இல்லையா என்று. பாருங்கள்?