237. இப்பொழுது, அவர் அதை எடுக்கும்போது, வேறொரு கேள்விக்கு வேகமாக பதிலளிக்க முடியுமா என்று பார்க்கிறேன். உங்களுக்கு களைப்பாயிருக்கிறதா? நீங்கள் களைப்புற்றிருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும்.
மணவாட்டி மறுரூபப்படுதலின் இரகசியத்தை தயவு கூர்ந்து விளக்கவும். அது எப்படி எங்கே நடக்கும்? மணவாட்டி எந்த இடத்துக்கு செல்கிறாள்? இவை அருமையான கேள்விகள் அல்லவா? இவை உண்மையில் நல்ல கேள்விகள். இங்கு என்னால் நாள் முழுவதும் நின்று கொண்டு... (சகோ. பிரன்ஹாம் 361ம் கேள்விக்கு விடையளிக்கிறார் - ஆசி) இப்பொழுது ஒரு நிமிடம், வசனம்... அப்போஸ்தலர் 9ம் அதிகாரம் 7ம் வசனம் (நன்றி, சகோ. நெவில்).
அவனுடனே கூடப் பிரயாணம் பண்ணின மனுஷர்கள் சத்தத்தைக் கேட்டும் ஒருவரையும் காணாமல் பிரமித்து நின்றார்கள்.
238. நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று கண்டு கொண்டேன். பாருங்கள்? மற்ற வசனத்தில் வேறுவிதமாகக் கூறப்பட்டுள்ளது. அங்கு என்ன நடந்ததென்று எனக்குத் தெரியாது என்னால் கூற இயலாது. ஏனெனில் மற்ற வசனத்தில் அவர்கள் சத்தத்தை கேட்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஓரிடத்தில் அவர்கள் அதை காணவில்லை என்றும் மற்ற இடத்தில் அவர்கள் கண்டனர், ஆனால் சத்தத்தைக் கேட்கவில்லை என்றும் கூறுகிறது. இதை எத்தனை பேர் முன்பு வேதத்தில் கண்டிருக்கிறீர்கள்? நான் கண்டிருக்கிறேன், ஆனால் என்னால் அதை விளக்க இயலாது. பாருங்கள். எனக்குத் தெரியாது, நான் வருந்துகிறேன், என்னால் விளக்க முடியாதென்றால், என்னால் விளக்க முடியாதென்று உங்களிடம் கூற நான் போதிய அளவுக்கு உண்மையுள்ளவனாயிருப்பேன். எனக்குத் தெரியாத போது அதற்கு நான் பதில் கூற முயற்சி செய்ய மாட்டேன்.
239. என்னால் அதை விளக்க முடியாது. ஏனெனில் ஓரிடத்தில் வெளிச்சத்தைக் கண்டார்கள், ஆனால் சத்தத்தைக் கேட்கவில்லை என்றும், அப்படி ஏதோ ஒன்று: மற்ற இடத்தில் அவர்கள் சத்தத்தைக் கேட்டனர், ஆனால் வெளிச்சத்தைக் காணவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. என்னால் அதை விளக்க இயலாது. பாருங்கள்? என்ன நடந்தென்று எனக்குத் தெரியாது. கர்த்தர் எனக்கு அதை வெளிப்படுத்தும் வரைக்கும் எனக்குத் தெரிய வழியில்லை; விவாகமும் விவாகரத்தும் என்னும் விஷயத்தைக் குறித்து என்னால் உங்களால் கூற முடியாதிருந்தது போல. அவர் அதை எனக்கு வெளிப்படுத்தும் வரைக்கும் நான் அறிந்திருக்கவில்லை.
240. இன்று காலையிலும் கூட வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்த தேவனாகிய கர்த்தர் இது உண்மையென்று அறிவார் இன்று காலையில் அவர் விவாகமும் விவாகரத்தும் என்பதன் பேரில் என்னிடம் முழுவதும் கூறி முடித்து விட்டார். அது உண்மை. ஆகையால்தான், இவையெல்லாவற்றையும் ஒன்றாக கோர்க்கட்டும் என்கிறேன். ஆராய்ந்து...
241. சர்ப்பத்தின் வித்தைப் போன்ற ஒன்று எனக்கு முன்பாக வைக்கப்பட்ட போது, என்னால் அதை புரிந்து கொள்ள இயலவில்லை. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனாலும் அதை நான் பின்தொடர்ந்து கொண்டே வந்தேன். முதலாவதாக என்ன தெரியுமா... நீங்கள் தனியான ஒரு இடத்துக்குச் செல்ல வேண்டும், அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் அதை திறந்து கொடுக்கத் தொடங்குகிறார். இப்பொழுது, சர்ப்பத்தின் வித்து தவறென்று யாராகிலும் குறை கூறட்டும் பார்க்கலாம். பாருங்கள்? அவர்களால் முடியாது.