242. அது ஒரு மாறுதல் மட்டுமே (பாருங்கள்?), நமது சரீரங்கள்... நமது என்று நாம் சொல்வோம். அதை நான் கூறும் போது என்ன குறிப்பிடுகிறேன் என்று உங்களுக்குத் தெரிகிறதா? நான் அவபக்தியாய் இருக்க விரும்பவில்லை; நான் இந்த சபை மட்டும் என்று கூறவில்லை; ஒவ்வாரு விசுவாசியும் என்றுதான் குறிப்பிடுகிறேன்.
243. ஆபிரகாம் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரனை எதிர்நோக்கியிருந்தான். அது அவனுக்கு வாக்குத்தத்தம் பண்ணப் பட்டிருந்தது. அது சரியா? சபையும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரனுக்காக காத்திருக்கிறது. மணவாட்டி (அதுசரியா?), மணவாட்டி அந்த வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரனுக்காக காத்திருக்கிறாள்.
244. சாராளுக்கும் ஆபிரகாமுக்கும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரன் வருவதற்கு முன்பு, அவர்களுடைய சரீரங்கள் மாற வேண்டும். அது சரியா?
245. குழந்தை பெறுவதற்கு சாராள் மிகவும் வயது சென்றிருந்தாள். அவளுடைய மார்பகத்தில் பால் சுரப்பிகள் இருக்கவில்லை; அவளுடைய மார்பகம் உலர்ந்து போயிருந்தது. அவளுடைய கர்ப்பப்பை கருத்தரிக்க முடியாத நிலையில் இருந்தது; அவள் மலடியாயிருந்தாள். அவளுக்கு குழந்தை பெற முடியாது; பிரசவ வேதனையைத் தாங்கிக் கொள்ள அவளுடைய இருதயம் மிகவும் வயது சென்று பலவீனமடைந்திருந்தது. எனவே என்ன நடந்தது? தேவன் அவளை மீண்டும் இளம் பெண்ணாக மாற்றினார். அவர் ஆபிரகாமுக்கும் அதையே செய்தார். ஏனெனில் அவனுடைய சரீரம் செத்துப் போயிருந்தது என்று அவர் கூறினார். பாருங்கள்? அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரனைப் பெற்றுக் கொள்வதற்கென, அவர் அவர்களுடைய சரீரத்தை மாற்ற வேண்டியதாயிருந்தது.
246. நாமும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த சரீரங்களில், நமக்கென இன்று வாக்குத்தத்தம் பண்ணப்பட்டுள்ள குமாரனைப் பெற முடியாது; இந்த சரீரங்கள் பாவமுள்ளவை.
247. முதலாம் மனச்சாட்சி, பார்த்தல், ருசித்தல், உணருதல், முகர்தல், கேட்டல் என்னும் புலன்களைக் கொண்ட இந்த சரீரத்தை கட்டுப்படுத்துகிறது, அது நம்மெல்லாரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. நாம் அறிவைப் பயன்படுத்தி யோசிக்கிறோம், மற்றெல்லாவற்றையும் செய்கிறோம். ஆனால் மறுபடியும் பிறந்ததனால் உண்டான அந்த புது சரீரமோ (இந்த முதலாம் மனச்சாட்சி அல்ல, அது கடந்து போகும்)... அது ஜீவிக்கின்ற, உள்ளில் உள்ள ஒன்று. இதைப் புரிந்து கொண்ட ஒவ்வொருவரும் “ஆமென்" என்று சொல்லுங்கள் (சபையோர் “ஆமென்” என்கின்றனர் - ஆசி).
248. அது இந்த வெளிப்புறத்தில் உள்ள பார்த்தல், ருசித்தல், உணருதல், முகர்தல், கேட்டல் அல்ல. அதுவல்ல. அது மரணத்துக்குக் கீழ்ப்பட்டுள்ளது. அது மரித்து விடும். ஆனால் உங்களுக்குள் இருக்கும் அந்த பாகம், உள்ளே உள்ளது, அந்த நபர் மரிக்கவே முடியாது. பாருங்கள்? அந்த நபரிலிருந்துதான், இந்த புதிய பிறப்பின் மூலமாக, புது ஜீவன் தொடங்குகிறது. அது உங்கள் சாயலிலே வேறொரு நபரை, அந்த ஜீவனைச் சுற்றிலும் உண்டாக்குகிறது. உங்களுக்குப் புரிகிறதா?
249. எனவே அது இங்கு மறைவாக உள்ளது. அது என்ன? உலக தோற்றத்துக்கு முன்பு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தை. இது 'நெகடிவ்'வையே பிரதிபலிக்கிறது; ஆனால் அதுவோ 'பாஸிடிவ்வை, வார்த்தையை, பிரதிபலிக்கும். பாருங்கள்? அதே காரியம் தான் மணவாட்டி மறுரூபப்படுதலும் அதே காரியமாகத்தான் இருக்கும். உங்களுக்குள் இருக்கும் அந்த வார்த்தையைச் சுற்றிலும் ஒரு சரீரம் உருவாகும், சாராளுக்கு நேர்ந்தது போல்.
250. அதற்கு முன்பு... அவள் பெற்றிருந்த அந்த பழைய சரீரம், அந்த முதல் சரீரம், ஒரு குமாரனைப் பெறுவதற்காக மாற வேண்டியதாயிருந்தது உங்களுக்கு விளங்குகின்றதா? அந்த சரீரத்தினால் அதை செய்ய முடியவில்லை. அது போன்று நம்முடைய இந்த சரீரமும் அதை செய்ய முடியாது. குமாரனைப் பெற்றுக் கொள்ள இதுவும் அதே விதமாக மாற வேண்டும்.