251. அது மகிமைக்கு, பரலோகத்துக்கு, கலியாண விருந்துக்கு செல்கிறது. ஈசாக்கும் ரெபேக்காளும் அதற்கு முன்னடையாளமாயுள்ளனர், ஈசாக்கை சந்திக்க ரெபேக்காள் புறப்பட்டுச் சென்ற போது. ஆபிரகாமிடமிருந்து புறப்பட்டுச் சென்ற செய்திக்கு எலியேசர் எடுத்துக்காட்டாய் இருக்கிறான் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். ஈசாக்குக்கு மணவாட்டியை கண்டு பிடிக்க எலியேசர் புறப்பட்டுச் சென்றான். அவன் குளிர்ச்சியான சாயங்கால வேளையிலே அழகான ரெபேக்காளைக் கண்டான் தண்ணீர் குடம் சுமந்து கொண்டு வருகின்ற கறுப்பு நிறத் தோலைக் கொண்ட பெண்ணை எலியேசர், "தேவனாகிய கர்த்தாவே, என் பிரயாணத்தை வாய்க்கச் செய்து என் ஆண்டவன் ஆபிரகாமுக்கு வெற்றியைத் தருவீராக" என்று ஜெபம் பண்ணினான்.
252. ஆபிரகாம் “நீ பெலிஸ்தியரின் மத்தியில் பெண் கொள்ளாமல் என் ஜனத்தாரிடம் போ" என்றான். கிறிஸ்துவின் மணவாட்டிக்கும் கிறிஸ்துவுக்கும் இரத்த சம்பந்தமான உறவு என்பதை இது காண்பிப்பதாய் உள்ளது, ஏனெனில் ஈசாக்கும் ரெபேக்காளும் இரத்த சம்பந்தமான உறவினர்.
253. எனவே அவன் புறப்பட்டுச் சென்றான், அப்பொழுது இந்த அழகான ரெபேக்காள், வெளியே வந்து தண்ணீர் மொண்டாள். அவன், "அவள் 'ஒட்டகங்களுக்கும் குடிக்கக் கொடுப்பேன் என்று சொன்னால்' என்று ஜெபித்தான். அதன் பிறகு, நீங்கள் கவனிப்பீர்களானால், ரெபேக்காளுக்கு... முடிவான தீர்மானம் ரெபேக்காள் தான் செய்ய வேண்டும். எலியேசர் அவள் தகப்பனிடம் பெண் கேட்டான்; அவன் தாயிடமும் பெண் கேட்டான். அவர்கள் இருவருமே இணங்கவில்லை. அவள் சிறிது காலம் தங்கியிருக்க வேண்டு மென்று அவர்கள் விரும்பினர். அவன், "என் பணியில் என்னைத் தடை செய்யாதீர்கள்" என்றான்.
254. அப்பொழுது ரெபேக்காள் தான், தீர்மானத்தை தெரிவிக்க வேண்டும். அவன், "அவள் தான் பெண்; அவளே சொல்லட்டும்" என்றான்.
255. அவளைக் கேட்டவுடனே, வேகமாக அவள் மனதில் தீர்மானித்தாள். அவள், "நான் போகிறேன்" என்றாள். அவள் ஓட்டகத்தின் மேலேறி ஈசாக்கைச் சந்திக்க புறப்பட்டுச் சென்றாள்... பாருங்கள், அவள் தண்ணீர் வார்த்த அதே ஒட்டகம் அவளை தன் மணவாளனிடம் கொண்டு சென்று, அவளுடைய வெற்றி அனைத்துக்கும் காரணமாயிருந்தது. அவ்வாறே நாம் தண்ணீர் வார்த்து துதியை ஏறெடுக்கும் (ஆமென்! பாருங்கள்?) அதே ஒட்டகம், அதே வல்லமை தான் (வேதத்தில் மிருகம் வல்லமைக்கு எடுத்துக்காட்டாய் உள்ளது), தண்ணீர் ஜீவனைக் குறிக்கிறது. துதி வார்த்தைக்கு ஏறெடுக்கப்படுகிறது நாம் மணவாளனைச் சந்திக்க நம்மை மகிமையின் தேசத்துக்கு கொண்டு செல்கிறது. ஆம். ஐயா! ஆமென்!
அந்த மகிழச்சியான ஆயிரவருட அரசாட்சி நாள் வரக் காத்திருக்கிறோம். அப்பொழுது ஆசீர்வதிக்கப்பட்ட நமது கர்த்தர் வந்து, காத்திருக்கும் தம் மணவாட்டியை எடுத்துச் செல்வார்.
256. இதை ஞாபகம் கொள்ளுங்கள், ஈசாக்கு தன் கூடாரத்தை விட்டுப் புறப்பட்டு வந்து பிற்பகலில் வயலில் தியானித்துக் கொண்டிருந்தான். (ஆமென்!) ரெபேக்காள் வருவதை அவன் கண்ட போது... அவள் அவனை கண்டதில்லை, அவனும் அவளைக் கண்டதில்லை, அது முதற்பார்வையிலே அன்பு. அவள் அவன் மேல் அன்பு கொண்டாள். அவனும் அவள் மேல் அன்பு கொண்டான், அவள் திரையிட்டு முகத்தை மறைத்திருந்தாள். ஆமென்! ஓ, என்னே!
257. கவனியுங்கள். அவள் அவனைக் கண்டபோது, அவள் இருதயம் மகிழ்ச்சியினால் பொங்கினது. அவள் யாரை விவாகம் செய்து கொள்ளப் போகிறாள் என்று அறிந்திருக்கவேயில்லை, ஆனால் விசுவாசத்தில் புறப்பட்டுச் சென்றாள். ஆமென்! அவன் அவளை வீட்டுக்கு அழைத்துச் சென்று, விவாகம் செய்து கொண்டு, தன் தகப்பனுக்கிருந்த சர்வத்துக்கும் சுதந்தரவாளியானான். ஆமென்! ஓ, பரிபூரணமாயுள்ளது, மிகவும் பரிபூரணமாயுள்ளது. சரி.
கேள்வி: தேவன் மனிதனையும் மனைவியையும் பிரிக்கிறாரா…
258. இதை நான் படிக்காமல் விட்டு விடுவது நலம். பாருங்கள்? பாருங்கள்? நான் ஒரு வார்த்தை சொல்ல நேரிடும். பாருங்கள்? உங்கள் எல்லோரையும் எனக்குத் தெரியும், ஆனால்இது ஒலிநாடாவில் பதிவு செய்யப்படுகிறது (பாருங்கள்?), எனவே நான் விட்டு விடுவது நலம். அது எதைக் குறித்தது என்றால்... இந்த கேள்வியை எழுதின நபரே, உங்களுக்கு அது என்னவென்று தெரியும்; உங்களை நான் தனிப்பட்ட பேட்டியில் காண்பது நலம். இதை படிப்பது நன்றாயிருக்காது என்று எண்ணுகிறேன். பாருங்கள்? அந்த நபர் இந்த கேள்வியைக் கேட்டதில் எந்த தவறுமில்லை; அவர் ஒரு நியாயமான கேள்வியைத்தான் கேட்டிருக்கிறார், ஆனால் அதற்கு தனிப்பட்ட பேட்டியில் அவரைக் கண்டு விடையளிப்பது நலமென்று கருதுகிறேன். நீங்களும் அவ்வாறு கருதுகிறீர்கள் அல்லவா? அது யாராயிருந்தாலும்... அது நன்றாயிருக்கும் என்று உங்களுக்குத் தெரியும், அது யாராயிருந்தாலும்.
259. ஓ. என்னே! ஓ, நண்பர்களே, நமது நேரத்தை நாம் எப்பொழுதோ கடந்து விட்டோம். நாம் முடித்து விட்டு, பகல் உணவு அருந்தச் செல்வது நலம். நான் இன்னும் எவ்வளவு நேரம் இங்கு கழிக்கலாம் என்று நினைக்கிறீர்கள்? ஓ, என்னே, என்னே! இன்னும் சிறிது நேரம். யாருக்காகிலும் உடனே செல்ல வேண்டுமென்ற அவசியம் இருக்குமானால், உங்கள் பகல் உணவு கரிந்து போகும்படி விடாதீர்கள். நான் ஒருக்கால் ப்ளு போர் அல்லது ப்ரையார்ஸ் அல்லது வேறெந்த இடத்திலாகிலும் உணவு உண்பேன். நாம் தாமதித்து சென்றால், அவர்கள் நம்மை ஒருக்கால் தொல்லைப்படுத்த மாட்டார்கள். நீங்கள் போக வேண்டு மென்றால், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. எனக்குப் புரிகிறது. பாருங்கள்? நான் இன்னும் சிறிது நேரம் மட்டுமே எடுத்துக் கொள்வேன். இங்கு வைக்கப்பட்டுள்ள இந்த கேள்விகளுக்கு மட்டுமே நான் விடையளிக்கப் போகிறேன். அதன் பிறகு நான்... இங்குள்ளவை... எனக்கு பதினைந்து நிமிடங்கள் அல்லது சற்று அதிகமான நேரம் பிடிக்கும், அதன் பிறகு நான் உணவு உண்ண செல்லப் போகிறேன்.