261. வெளிப்படுத்தல் 16 - இல்லை, மாற்கு 13:27, சகோ. நெவில். வெளிப்படுத்தல் 20: சகோ. காப்ஸ், உங்களிடம் வேதாகமம் உள்ளதா? வெளிப்படுத்தல் 20, 7 முதல் 9 வசனங்கள் என்பது போல் தான் தோன்றுகிறது. நான் நினைக்கிறேன், நான், அவர்கள் அதை எடுத்துக் கொண்டிருக்கும் போது... இதோ, அவர் அதை எடுத்து விட்டார். வெளிப்படுத்தல், அது என்ன? மாற்கு 13:27, 13ம் அதிகாரம் 27ம் வசனம்.
அப்பொழுது அவர் தம்முடைய தூதரை அனுப்பி தாம் தெரிந்து கொண்டவர்களைப் பூமியின் கடைமுனை முதற் கொண்டு, வானத்தின் கடைமுனை மட்டுமுள்ள நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார்.
262. அது உயிர்த்தெழுதலை, மறுரூபப்படுதலை, மேலே செல்வதைக் குறித்துப் பேசுகிறது. அவர் கூட்டிச் சேர்ப்பதற்காக. தமது தூதர்களை அனுப்புவார். இந்த தூதர்கள் யாரென்று நீங்கள் எப்பொழுதாகிலும் நினைத்ததுண்டா? அவர்கள் செய்தியாளர்கள். அவர் அவர்களை கூட்டிச் சேர்ப்பார், ஒன்றாக கூட்டுவார் (பாருங்கள்?), அவர்களை பூமியின் கடைமுனை முதற்கொண்டு வானத்தின் கடைமுனை மட்டுமுள்ள திசைகளிலிருந்து கொண்டு வந்து, பூமியில் வெளிப் படுத்தப்பட்டுள்ள வார்த்தையாகிய அவர்களை ஒன்றாக கட்டி இணைப்பார். பாருங்கள்? விளங்குகிறதா? வார்த்தை உரைக்கப்பட்டது; இதோ அது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பாருங்கள்? சரி, சகோ.காப்ஸ், நாம் பார்ப்போம்.
அந்த ஆயிரம் வருஷம் முடியும் போது சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி,
263. சரி சற்று முன்பு தான் அதை விளக்கினேன், இல்லையா, அவன் எவ்வாறு ஆயிரம் வருஷம் முடியும் போது காவலிலிருந்து விடுதலையாவான் என்று?