264. எனக்குத் தெரியாது. அதை நான் தனிப்பட்ட பேட்டியில் காண்பது நலமாயிருக்கும். பாருங்கள்? இப்பொழுது, நர்ஸ் வேலை நியாயமான ஒன்று, நர்ஸ் வேலை பார்ப்பது. நான் என்ன சொல்கிறேன் என்றால்... இப்பொழுது, அந்த நபர் ஒன்றும் கூறவில்லை. அதற்கு விடையளிக்கக் கூடாது என்பதற்காக அந்த கேள்வியை நான் எறிந்து விடவில்லை, ஏனெனில் உங்கள் கேள்வி உங்களுக்கும் அல்லது என் கேள்வி எனக்கும் எவ்வளவு முக்கியம் வாய்ந்ததோ, அப்படித்தான் இந்த கேள்வியும் இந்த ஸ்திரீக்கு முக்கியம் வாய்ந்தது. பாருங்கள்? ஆனால் இப்பொழுது, அது ஒரு நர்ஸ் ஆக இருக்குமானால், நீ வேலை செய்யக் கூடாது என்பதற்காக நர்ஸ் வேலையை விட்டு நீங்கி விட்டாய்... நல்லது, நர்ஸ் வேலை பச்சாதாபத்துடன் செய்யப்படவேண்டிய ஒன்று என்பது என் கருத்து. நீங்கள் டாக்டரைப் போல் சேவை மனப்பான்மை கொண்டிருக்க வேண்டும்.
265. ஒரு டாக்டர், ஒரு நல்ல டாக்டர், நோயாளியிடம் பணம் இருந்தாலும் இல்லாமல் போனாலும், அவனுக்கு சிகிச்சை அளிப்பார், அவர்தான் உண்மையான டாக்டர். பாருங்கள்? ஒரு ஊழியக்காரன், அல்லது யாரானாலும், நாம் ஒருவருக்கொருவர் சேவை செய்து, ஒருவர் மற்றவருடைய வாழ்க்கையை சிறிது மேம்படுத்த வேண்டும் என்பது என் கருத்து.
266. நான்... இந்த சபையிலிருந்து வாரத்துக்கு நூறு டாலர் நான் ஊதியமாக பெற்றுக் கொள்ள வேண்டுமென்று அவர்கள் என்னிடம் கூறின போது, அது என்னைக் கொன்றே போட்டு விட்டது. இப்பொழுது, எனக்குத் தெரியும், திருமதி. வில்ஸனும், ஒருக்கால் அவர்களுடைய மகனும், இங்கு உட்கார்ந்திருக்கிற மற்றவர்களும், அநேக ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை ஞாபகம் வைத்திருப்பார்கள். இங்கு நான் பதினேழு ஆண்டுகள் பிரசங்கித்து, ஒரு காசு கூட வாங்கிக் கொள்ளவில்லை. நான் சம்பாதித்த சிறு தொகையும் கூட நான் இதற்கே கொடுத்து விட்டேன். பாருங்கள்? இந்த கூட்டங்களில் நான் பங்கு கொள்ள வேண்டுமானால், நான் பணத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் என்னிடம் கூறின போது, அது என்னை அழித்துவிடும் போல எனக்குத் தோன்றினது. பாருங்கள்? அதைப் பெற்றுக் கொள்வதில் தவறில்லை, ஆனால் என்னைப் பொறுத்தவரையில் (பாருங்கள்?) எனக்கு எதுவுமே, எந்த பணமுமே வேண்டாம். எனக்குத் தேவையான ஒன்றே ஒன்று உங்கள் நட்பும், நம்மிடத்தில் உள்ள தேவனுடைய கடாட்சமே.
267. உங்களை நான் நேசிக்கிறேன் (பாருங்கள்?), உங்களை நான் நேசிக்கிறேன், நீங்கள் சரியாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன், நானும்கூட சரியாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன் இப்பொழுது, நீங்கள் என்னை நம்ப வேண்டுமென்று விரும்புகிறேன், நானும் உங்களை நம்புகிறேன். நீங்கள் என்னிடம் ஒரு கேள்வியுடன் வருவீர்களானால், நான் உங்களிடம் உண்மை யுள்ளவனாயிருக்க விரும்புகிறேன். நான் உங்களிடம் கர்த்தருடைய நாமத்தில் எதையாகிலும் உரைத்தால், நான் உங்களிடம் என்ன செய்யக் கூறினேனோ, அதை நீங்கள் அப்படியே செய்ய வேண்டுமென்று விரும்புகிறேன். அதிலிருந்து சிறிதும் கூட மாறாதீர்கள், அப்பொழுது நாம் சரியாக இணைந்து செல்வோம் என்று எண்ணுகிறேன். பாருங்கள்? பிறகு, மற்றவர்கள்...
268. எனவே இப்பொழுது, அது நர்ஸ் வேலையாயிருக்கு மானால்... நான் நினைக்கிறேன், நீ உன் இருதயத்தில் நர்ஸ் ஆக. விருப்பம் கொண்டால்... எல்லோருமே நர்ஸாகி விட முடியாது. நர்ஸ் என்பவள் சாந்த குணமுள்ளவளாயும், ஜனங்களிடம் தயவாயும் நடந்து கொள்ள வேண்டும். ஓ, நான் நினைக்கிறேன், ஒரு உண்மையுள்ள நர்ஸ்... நீங்கள் எப்பொழுதாகிலும் வியாதிப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தால், உங்களை செளகரிய மாக வைத்துக் கொள்ளும் உண்மையான, நல்ல நர்ஸை நீங்கள் அப்பொழுது காணலாம்.
269. நான் சுடப்பட்ட அந்த சமயத்தில் எனக்கு ஒரு அறுவை சிகிச்சை நடந்தது; அப்பொழுது நான் மருத்துவமனைக்குச் செல்ல நேர்ந்தது. அங்கு ஒரு நர்ஸ் இருந்தாள். அவளை நான் "இனிய ஊறுகாய்" என்று அழைப்பதுண்டு. ஏனெனில் அவள் எப்பொழுதுமே வாயில் ஊறுகாயை வைத்து தின்றுக்கொண்டிருப்பாள். எல்லா நேரங்களிலும் அப்படித்தான். அப்பொழுது எனக்கு வயது பதினான்கு மட்டுமே, நான் சுடப்பட்டேன். அவள் ஒரு சிறு உருவம் படைத்தவள், அவள் கால்களில் குண்டு பாய்ந்து, இரண்டு கால்களிலுமே இப்படி மாம்சம் பிய்ந்து வந்திருந்தது. அவள் ஒரு தலையணையை இங்கேயும் ஒரு தலையணையை அங்கேயும் வைப்பாள்; அவள் எந்நேரமும் எனக்கு உதவி செய்து கொண்டேயிருப்பாள். நான் அப்பொழுது சிறு பையன், அவள் என்னிடம் தயவாயும் நல்லவளாகவும் நடந்து கொண்ட காரணத்தால், அவளை விவாகம் செய்து கொள்ளலாம் என்று எண்ணினேன். நல்லது நான்... அது... பாருங்கள். இவ்விதம் ஒரு நல்ல காரியத்தைச் செய்வது முக்கியமானது.