270. இவர்கள் என்னை கடினமான கேள்வி கேட்க முடியா தென்று என்னிடம் கூறாதீர்கள். எனக்குத் தெரியாது. அதைக்குறித்து நீங்களே தீர்மானித்து கொள்ளும்படி உங்களை விட்டு விடப் போகிறேன். அதை அணிந்து கொண்டு நீங்கள் ஜனங்களுக்கு முன்பாக இங்கும் அங்கும் நடக்கக் கூடாது; அது எனக்குத் தெரியும். அந்த விதத்தில் அது சரியல்ல. ஆனால் அதை அணிந்து கொண்டு படுக்கைக்குச் செல்லும் விஷயத்தில், எனக்குத் தெரியாது. அதை நான் வேத வசனங்களைக் கொண்டு ஆதாரப்படுத்த வேண்டும்.
எனக்குத் தெரியாமலிருந்தால், நான் உண்மையுள்ளவனாயிருப்பேன் என்று உங்களிடம் கூறினேன். என் சொந்த கருத்தை அதில் நான் நுழைக்க மாட்டேன் (சரி), நீங்கள் என் சொந்த கருத்தை அறிய விரும்பினாலொழிய, அது உங்களுக்கு வேண்டுமானால், நான் உங்களிடம் கூறுவேன். பாருங்கள்?
இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள், இது கோடிக்கணக் கான மைல்கள் தவறாயிருக்கக் கூடும். இரவில் நீண்ட ஆடை (Night gown) அணிந்து கொள்வது நலமென்று கருதுகிறேன். ஆனால் உங்களால்... அது உங்களைப் பொறுத்த விஷயம். அதை என்னால் உங்களிடம் கூற இயலாது, ஏனெனில் அதை வேத வசனங்களைக் கொண்டு என்னால் ஆதாரப்படுத்த முடியாது. இப்பொழுது, இது நான் உரைப்பது, அவரல்ல, ஞாபகம் கொள்ளுங்கள். பாருங்கள்?