271. இப்பொழுது, இது நல்ல கேள்வி. இல்லையா? இதற்கு விடையளிக்க நான் கர்த்தர் பேரில் சார்ந்திருக்க வேண்டியவனாயிருக்கிறேன்; ஏனெனில் நான் இதை ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் கவனியுங்கள்! சபை காலங்கள் பிரசங்கித்த போது, யூதாஸின் பெயர் ஜீவபுஸ்தகத்தில் இருந்தது என்று நான் கூறினேன். இப்பொழுது, அது உண்மை. அது நமக்குத் தெரியும், ஏனெனில் இயேசு தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் வெளியே அனுப்பி (மத்தேயு 10ம் அதிகாரம்), அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவும் அவர்களுக்கு கட்டளையிட்டார். “இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்" என்றார். பிசாசு அவர்களுக்குக் கீழ்படிகிறதினாலே அவர்கள் சந்தோஷத்தோடு திரும்பி வந்தனர். அது சரியா? இயேசு அவர்களிடம் கூறினதாவது, அவர் அவர்களுடைய நாமங்களைக் கூறினார் (மத். 10:2-4) (அவர்கள் யாரென்றும், எத்தனை பேர் அனுப்பப்பட்டனர் என்றும்); அவர்கள் திரும்பி வந்தனர், அவரைக் காட்டிக் கொடுத்த யூதாஸ்காரியோத்தும் அவர்களில் ஒருவன்... பாருங்கள்? அவர்கள் சந்தோஷத்தோடே திரும்பி வந்தனர், ஏனெனில் பிசாசுகள் அவர்களுக்குக் கீழ்படிந்தன. இப்பொழுது, பாருங்கள், அவர்களுடைய மனப்பான்மை அங்கு தவறாயிருந்தது. பாருங்கள்? பிசாசை அசைக்க உங்களுக்கு வல்லமை இருப்பதனால் நீங்கள் சந்தோஷப்படக்கூடாது. பாருங்கள்? நீங்கள் அவ்விதம் செய்யக்கூடாது. நீங்கள் இரட்சிக்கப்படுவதற்கு போதிய கிருபை பெற்றுள்ளதால் சந்தோஷப்பட வேண்டும். பாருங்கள், பாருங்கள்? நீங்கள் சந்தோஷப்படக் கூடாது. அப்படித் தான் ஜனங்கள்...
272. வழக்கமாக, வரங்களைப் பெற்றுள்ள ஜனங்கள் வரங் கள் பெற விரும்பாதவர்கள். பாருங்கள்? பவுல் அதை விட்டு ஓடிப் போக முயன்றான், மோசேயும் கூட. அப்படிப்பட்ட பெரிய தலைவர்கள் அவர்களுடைய வேலையை விட்டு ஓடிப்போக முயல்கின்றனர்; அவர்களுக்கு முன்னால் என்ன வைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் அறிந்துள்ளனர். தேவன்.பாருங்கள், “ஓ, தேவனே, என்னை வல்லமையினால் நிரப்பும் நான் இங்கு செல்வேன், நான் பிசாசுகளைத் துரத்துவேன் என்று' சதா கூறும் ஒரு மனிதனை நீங்கள் எடுத்துக் கொள்வீர்களானால் அவன் அதை செய்யவே மாட்டான். அப்படிப்பட்ட எவனையும் நம்பக் கூடாது என்பதை தேவன் நன்கு அறிந்திருக்கிறார் பாருங்கள்? அவன் செய்யவே மாட்டான்.
273. அதனுடன் எவ்வித தொடர்பும் வைக்க விரும்பாத மனிதன் தான். பாருங்கள்? அப்படிப்பட்ட ஒருவனை தான் தேவன் எடுத்து என்றாகிலும் ஒரு நாள் எதையாகிலும் போதிக்க முடியும். பாருங்கள்?
எனவே, யூதாஸ் சந்தோஷத்தோடே திரும்பி வந்தான், அவர்கள் அனைவருமே, அவர்களுடைய பெயர்கள். அவர், "ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்கு நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் ஜீவபுஸ்தகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள்” என்றார். (லூக்.10:20). இப்பொழுது, நீங்கள் கவனிப்பீர்களானால், தானியேலின் புத்தகத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள். பாருங்கள்.
உங்கள் பெயர் ஜீவபுஸ்தகத்தில் இருப்பதனால் (அது பரலோகத்தில் இருப்பதனால், உங்கள் பெயர் அடையாளங்கண்டு கொள்ளப்பட்டதனால்), நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள் என்று அர்த்தமல்ல. பாருங்கள்? நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெறும் வரைக்கும் இரட்சிக்கப்படவில்லை. அதை நீங்கள் ஞாபகம் கொள்ளுங்கள். நீங்கள் மறைமுகமாக (Potentially) இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள். பாருங்கள்?
274. நீங்கள் என்னிடம் ஒரு 'ஓக்' மரத்தை கேட்டு நான் உங்களுக்கு அதன் விதையைக் கொடுத்தால், மறைமுகமாக உங்களுக்கு ஒரு 'ஓக்' மரம் கிடைத்துள்ளது, ஆனால் அது இன்னும் வளரவில்லை. ஆகையால் தான் நான் நித்திய! பாதுகாப்பில், நான் விசுவாசிக்கும் விதமாக விசுவாசிக்கிறேன் நான் தானிய வயலைக் கேட்டு, தானியக் கதிர்கள் இவ்வளவு! உயரத்தில் வளர்ந்திருப்பதை நான் காணும் போது, கறைமுகமாக நான் தானியம் நிறைந்த வயலைப் பெற்றிருக்கிறேன். அது இன்னும் வளரவில்லை, ஏதாகிலும் ஒன்று நடக்கும். பாருங்கள்? இப்பொழுது, நீங்கள் நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்குதல், இவைகளின் வழியாக பரிசுத்த ஆவியின் அபிஷேகம் அடையும் பாதையில் சென்று கொண்டிருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் உண்மையான பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்றுக் கொண்டால் மட்டுமே, இராஜ்யத்தில் இருக்கிறீர்கள். நீங்கள், “சகோ. பிரன்ஹாமே, அது உண்மையா?” எனலாம்.
275. வேத வசனங்களை உங்களுக்கு அளிக்க எனக்கு நேர மில்லை. நீங்கள் வீடு திரும்பின பிறகு அதைப் பாருங்கள், ஏனெனில் எனக்குத் தெரியவில்லை... என் சிந்தை. அந்த வசனங்களை எடுக்க வேண்டுமானால் நான் என் கன் கார்டன்ஸில் தேட வேண்டும். இயேசு, இரட்சிக்கப்பட்டு பரிசுத்தமாக்கப்பட்டிருந்த பேதுருவிடம்... அவன் இயேசுவை விசுவாசித்தான், பரிசுத்தமாக்கப்பட்டிருந்தான். யோவான் 17:17. இயேசு “உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்" என்று பிதாவிடம் ஜெபம் பண்ணினார். அவரும் வசனமும் ஒன்றுதான். அவர்கள் வசனமாகிய சத்தியத்தினாலே மறைமுகமாக பரிசுத்தமாக்கப்பட்டிருந்தனர். பிறகு இயேசு யூதாஸிடம், இல்லை பேதுருவிடம், அவன் மறுதலித்த அந்த இராத்திரியில், "நீ குணப்பட்ட பின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து” என்றார். (லூக்.22:32) நீ குணப்பட்ட பின்பு.
276. அந்த மனிதன் அவரை மூன்று ஆண்டு காலமாக பின்பற்றினான். அவனுடைய பெயர் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டிருந்தது. அவன் பிசாசுகளைத் துரத்தி மகத்தான கிரியைகளைச் செய்து, பிணியாளிகளை சொஸ்தமாக்கி, இன்னும் பல்வேறு காரியங்களை... வார்த்தையைப் பிரசங்கித்து எல்லாவற்றையும் செய்த போதிலும், அவன் இன்னும் குணப்படவில்லை. பாருங்கள் அந்த நீங்கள் குணப்படுதலை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறீர்கள். பாருங்கள்?
277. குழந்தையானது... முட்டைக்கும் ஆண் அணுவுக்கும் இடையே அந்த செயல் நடந்த பிறகு... ஆனால் அவர்கள். அந்த செயல் நடந்த பிறகு குழந்தை மறைமுகமாக உள்ளது. அதன் பிறகு உடல் வளர்கிறது. இரண்டாம் கட்டம்; ஆனால் அந்த குழந்தை இங்கு பிறக்க வேண்டும், அப்பொழுது அது ஜீவ சுவாசத்தைப் பெறுகிறது. அதுவரைக்கும் அது ஜீவ சுவாசத்தை பெறவில்லை. ஆனால் நீங்களோ, "ஓ, அது உயிரோடிருக்கிறது" என்கிறீர்கள் இல்லை, அது இல்லை! அந்த சிறு நரம்புகள் தசைகளை அசைச்கின்றன. பாருங்கள்? குழந்தை பிறக்கும் வரைக்கும் ஜீவனைப் பெற்றிருக்கவில்லை. நீங்கள் குதிக்கலாம், அசைக்கலாம், ஆனால் நீங்கள் பெற்றிருக்கவில்லை... பாருங்கள், பாருங்கள்? நீங்கள் பிறக்க வேண்டும். நான் கூறுவது விளங்குகிறதா? சரி.
278. இப்பொழுது, இப்பொழுது, அவர் கேட்டிருப்பது.. “யூதாஸின் பெயர் ஜீவபுஸ்தகத்தில் இருந்ததாக கூறியிருக்கிறீர்கள் இருப்பினும் அவன் பாதாளத்துக்குச் சென்று இழக்கப்பட்டான் என்று நாமறிவோம். ஒரு நபரின் பெயர் ஜீவபுஸ்தகத்தில் இருக்கும்போது, அவன் எப்படி இழக்கப்பட முடியும்?” இந்த அருமையான நபருக்கு நான் இன்னும் ஒரு சிறு காரியத்தை இங்கு கூறட்டும்.
279. இப்பொழுது கவனியுங்கள், வேதம் உரைக்கிறது, தானியேல் கண்டபோது... தானியேல் முதலாம் வெளிப்படுத்தல் புத்தகத்தை எழுதினான். நாம் கவனிப்பது என்னவெனில், தரிசனத்தில் அவன் நீண்ட ஆயுசுள்ளவர் முன்பாக கொண்டு வரப்பட்டான். அவருடைய சிரசின் மயிர் பஞ்சை போல் வெண்மையாயிருந்தது. எத்தனை பேருக்கு அது படித்தது ஞாபகமுள்ளது? நீங்கள் கவனித்தீர்களா? யோவானும் அதே காரியத்தைக் கண்டான், வெளிப்படுத்தல் முதலாம் அதிகாரத்தில் அவர் அங்கு நின்று கொண்டிருந்தார், அவருடைய சிரசின் மயிர் பஞ்சைப் போல் வெண்மையாயிருந்தது, அவருடைய பாதங்கள் அது காணப்பட்ட விதமாக இருந்தன நீண்ட ஆயுசுள்ளவர். நீண்ட ஆயுசுள்ளவர் என்றால், அவருக்கு காலம் என்பதே கிடையாது அவர் நித்தியமானவர். அவர் வந்தார். இப்பொழுது கவனியுங்கள்! பரிசுத்தவான்கள் பூமிக்கு வந்தனர், அப்பொழுது புத்தகங்கள் திறக்கப்பட்டன, ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புத்தகமும் திறக்கப்பட்டது, ஒரு புத்தகம். அவர்கள் நியாயத்தீர்ப்புக்கு வந்தனர். அவர் வந்தார், அவருடன் கோடாகோடி பேர் வந்தனர். அது சரியா? அவரைச் சேவித்தனர், மணவாட்டி , ராணியும் ராஜாவும்.
280. உங்கள் வீட்டில் உள்ள உங்கள் சிறு ராணி யார்? அவள் உங்களுக்கு உணவு பரிமாறி சேவை செய்கிறாள். அது சரியா? (உங்களுக்கு இப்பொழுது நேரமாகிறது). அவள் உங்களுக்கு சேவை செய்கிறாள், அதுதான்... மணவாட்டியும் வார்த்தையாகிய கிறிஸ்துவுக்கு சேவை செய்கிறாள். “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்?. (மத் 4:4). பாருங்கள்: அவள் ராஜாவுக்கு வார்த்தையை அளித்து, அவள் வாழுகின்ற காலத்திற்கென வாக்களிக்கப்பட்டுள்ள அவருடைய வார்த்தையை வெளிப்படுத்துபவளாயிருக்கிறாள். ஆமென்! ஆ, நான் அப்பொழுது ஒன்றைச் சொன்னேன், நீங்கள் புரிந்து கொள்ளவில்லை, ஆனால்...
281. கவனியுங்கள்! ஓ, என்னே! அது நல்ல ஒன்று. பாருங்கள்? இந்தக் காலத்தில் வார்த்தைக்கு ஊழியம் செய்தல். அவர் வந்தார், ஆயிரமாயிரம் பேர் அவரிடம் வந்தனர்; நியாய சங்கம் உட்கார்ந்தது. புத்தகங்கள் திறக்கப்பட்டன, ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புத்தகமும் திறக்கப்பட்டது, அவர்கள் அதன்படி நியாயந்தீர்க்கப்பட்டனர். வந்தது யார்? நியாயத்தீர்ப்புக்கு வர அவசியமில்லாத மணவாட்டி. அவள் நியாயத்தீர்ப்பிலிருந்து விடுபட்டிருக்கிறாள்.
282. ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புத்தகமும் திறக்கப்பட்டது, ஜீவபுஸ்தகத்தில் பெயரெழுதப்பட்டிருக்கிறவர்கள், அந்த புத்தகத்தில் எழுதப்பட்டவைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள். யூதாஸ்காரியோத்து தன்னை விசுவாசியென்று காண்பித்துக் கொண்டான், அவனுடைய பெயர் மற்ற பெயர்களுடன் கூட ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டிருந்தது. அது சரியா? அவன் நித்திய ஜீவனைப் பெற்றுக் கொண்டதாக உரிமை கோரினான். அவனுடைய பெயர் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டிருந்தது. எனவே அவன்... அப்படியானால், அவன் ஜீவ வார்த்தையை முப்பது வெள்ளிக்காசுக்கு ஏன் காட்டிக்கொடுத்தான் என்பதற்காக நியாயத்தீர்ப்படைய வேண்டும். சில மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, இன்னும் மற்றவர்களாக இருக்க விற்றுப்போடுகிறார்கள். அவன் ஜீவபுஸ்தகத்திலுள்ள அவனுடைய பங்கை விற்றுப்போட்டான். அவன் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு, அதன் பேரில் நியாயந்தீர்க்கப்பட வேண்டும். பாருங்கள்? யூதாஸ் நியாயாசனத்துக்கு முன்பாக வர வேண்டும். அவனுடைய பெயர் ஜீவபுஸ்தகத்தில் இருந்தது, அதன் காரணமாக அவன் இரட்சிக்கப்பட்டான் என்று அர்த்தமல்ல. அவன் நியாயத்தீர்ப்பில் நிற்க வேண்டும்.
283. நித்திரையடைந்த கன்னிகைகளும் அதே காரியங்களுக்காக அங்கு நிற்க வேண்டும். கவனியுங்கள், இயேசு, “என் வசனத்தைக் கேட்டு (அதாவது அதை ஏற்றுக்கொள்கிறவன், அது பிரசங்கம் பண்ணப்படுவதைக் கேட்டு முட்டாள்தனம்' என்று சொல்லி விட்டு செல்பவன் அல்ல, பாருங்கள்?) என் வசனத்தைக் கேட்டு, என்னை (அதாவது வார்த்தையை) அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு (பாவனையாக விசுவாசிக்கிறவன் அல்ல, உண்மையாக விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி (இறந்த காலம்) ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்" என்று யோவான் 5:24ல் கூறியுள்ளார் (ஆங்கிலத்தில் "Hath passed" அதாவது. அவன் ஏற்கனவே மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டு விட்டான் என்று இறந்த காலத்தில் கூறப்பட்டுள்ளது - தமிழாக்கியோன்) பாருங்கள்? அதுதான்
284. எனவே யூதாஸின் பெயர் ஜீவபுஸ்தகத்தில் இருந்தது (அது முற்றிலும் உண்மை) ஆனால் அவன் ஆக்கினைத்தீர்ப்படைந்தான், ஏனெனில், அவன் என்ன செய்தான்? தன் பிறப்புரிமையை விற்றுப் போட்டான்.
ஏசா தேவனுடைய வாக்குத்தத்தத்தைப் பெற்றிருந்த குடும்பத்தில் பிறந்தான். மூத்தவனுக்கு தான் சேஷ்ட புத்திரபாகம் கொடுக்கப்பட்டிருந்தது. எத்தனை பேருக்கு அது தெரியும்? தேவனுடைய வாக்குத்தத்தத்தின் மூலம், ஏசாவின் பெயர் சேஷ்ட புத்திரபாகம் பெற்றிருந்தவரின் பெயர்கள் அடங்கிய புத்தகத்தில் இருந்தது. (அது சரியா?), ஆனால் அவனோ ஒரு பானை கூழுக்காக அதை மாற்றிக்கொண்டான். பசியாயிருந்த அவனுடைய வயிற்றை நிரப்புவதற்கென்று, அவனுடைய ஆகாரச் சீட்டுக்காக அவன் தன் சேஷ்ட புத்திரபாகத்தை மாற்றிக் கொண்டான். அதன் விளைவாக அவன் மனந்திரும்புவதற்கு எந்த வாய்ப்பும் கிடைக்காமல் போயிற்று.
285. தேசத்தை வேவு பார்க்க சென்றவர்கள் திரும்பி வந்து யோசுவாவும் காலேபும் கொண்டு வந்த திராட்சை பழங்களையும் தின்றனர். இருப்பினும், அவர்கள் என்ன செய்தனர்? தங்கள் சேஷ்ட புத்திரபாகங்களை விற்றுப் போட்டனர்.
286. இயேசு கூறினார் இல்லை, கிறிஸ்துவின் ஏவுதலினால் பவுல் 6ம் அதிகாரத்தில், "ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம் ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசி பார்த்தும் மறுதலித்துப் போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புவதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம்" என்று உரைத்திருக்கிறான். (எபி.6:4-6). அவர்கள் "தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து, தங்களைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவர்கள்" (எபி.10:29). அந்த நபர் திரும்பி வருவது கூடாத காரியம்.
287. யோசுவாவும் காலேபும் தவிர, மற்றவர் ஒவ்வொருவரும் வனாந்தரத்தில் மரித்து அழிந்து போயினர். அவர்கள் விசுவாசிகளே, அவர்களுடைய பெயர்கள் புத்தகங்களில் இருந்தன.
288. பவுல் இங்கு பேசுகையில், ஒரு மனிதன் இரட்சிக்கப்பட்டு, பரிசுத்தமாக்கப்படும் கட்டத்தை அடைந்து (இரத்தம் பரிசுத்தம் செய்கிறது; எபி.13:12-13. இரத்தம் பரிசுத்தம் செய்கிறதாக உரைக்கிறது), அதன்பிறகு பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்னும் வாசல் வரைக்கும் வந்து, பிரக்கியாதியின் (பேர்புகழின்) காரணமாகவோ அல்லது ஸ்தாபனத்தின் காரணமாகவோ அதற்குள் நடக்க மறுத்தால், "அந்த மனிதன் இழக்கப்படுவான், அவன் இழக்கப்படுவான்" என்று உரைக்கிறான் (பாருங்கள்?); ஏனெனில் அவனை அந்த இடத்துக்கு அழைத்து வந்து அதை அவனுக்குக் காண்பித்த கிருபையின் ஆவியை அவன் நிந்தித்து. அங்கிருந்து திரும்பி நடந்து சென்று விடுகிறான். அவன் கிறிஸ்துவின் சிலுவை மரணத்தினால் சிந்தப்பட்ட உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்று எண்ணுகிறான். ஏனெனில் அந்த இரத்தம்தான் அவனை இரட்சித்து, நீதிமானாக்கி, பரிசுத்தப்படுத்தி, அவனை பரிசுத்த ஆவியின் அபிஷேகம் வரைக்கும் கொண்டு வந்தது. அவனோ அதை விட்டு விலகி, நடந்து சென்று விடுகிறான்.
289. இப்பொழுது, மாதிரியைக் கவனியுங்கள். நான் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறேன், ஆனால் பாருங்கள்! யூதாஸ்காரியோத்து அதே பாதையைத் தொடர்ந்தான். அவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து அவரை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு நீதிமானாக்கப்பட்டான். அவன் பரிசுத்தமாக்கப்பட்டு, ஆவிகளைத் துரத்த அவனுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தது. அவனுடைய பெயர் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டிருந்தது. ஆனால் அவன் பெந்தெகொஸ்தேவுக்கு, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்துக்கு, வார்த்தையின் முழுமைக்கு வந்தபோது, அவன் தன் உண்மையான நிறத்தைக் காண்பித்தான். கானானுக்குச் சென்ற வேவுகாரர்களும் அதைதான் செய்தனர்; ஏசாவும் அதைதான் செய்தான்
290. அதையே தான் சாத்தானும் ஏவாளுக்கு ஏதேன் தோட்டத்தில் செய்தான். "நிச்சயமாக தேவன் செய்ய மாட்டார்..."
அவள், "தேவன் சொல்லியிருக்கிறார்" என்றாள்.
அவன், "ஆம், அது அதை சொல்லுகிறது, இதை சொல்லுகிறது என்று எனக்குத் தெரியும். ஆனால் நிச்சயமாக..." என்றான். பாருங்கள், அதே காரியங்கள்தான் காலங்கள்தோறும் இன்று வரைக்கும்.
291. சபையானது மார்டின் லூத்தர் காலத்தில் நீதிமானாக்கப்படுதலின் வழியாகவும், வெஸ்லியின் காலத்தில் பரிசுத்தமாக்கப்படுதலின் வழியாகவும் கடந்து வந்தது. ஆனால் அது பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெறும் நேரத்தை அடையும் போது, அவர்கள் தங்கள் சுய நிறத்தைக் காண்பிக்கின்றனர், அதனுடன் அவர்கள் எந்த சம்பந்தமும் கொள்ளப் பிரியப்படவில்லை. நசரீன்கள், யாத்திரீகபரிசுத்தர், தேவசபை, இவர்கள் அனைவரும் பரிசுத்தமாக்கப்படுதலில் நம்பிக்கை கொண்டுள்ளனர். அதில் உங்கள் விரலைச் சுட்டிக்காட்ட முடியாது. அது உண்மை. ஆனால் எல்லைக் கோட்டுக்கு அது வரும் போது, புதிய பிறப்பை பெற பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள வேண்டிய அந்த கட்டத்தை அது அடையும்போது, பிசாசு என்ன செய்கிறான்? அவன் வந்து அதை திரித்து விடுகிறான். ஓ, ஜனங்களை அதிலிருந்து விலக்கிவிட தன் அதிகாரத்தில் இருக்கும் எதையும் அவன் செய்வான்.
292. அவர்கள் அதை சுற்றி வளைத்து, "நீங்கள் அந்நிய பாஷை பேச வேண்டும். உங்களுக்கு உணர்ச்சி உண்டாக வேண்டும். நீங்கள் இதை செய்ய வேண்டும்" என்று கூறுகின்றனர். நீங்கள் அதற்குள் பிறக்க வேண்டும். பரிசுத்தமாக்கப்படுதலும் பரிசுத்த ஆவியின் அபிஷேகமும் இரண்டும் ஒன்றுதான் என்று எவரும் உங்களிடம் கூற அனுமதிக்காதீர்கள். ஏனனில் அது அப்படியல்ல! நிச்சயமாக அல்ல! பின்னால் உள்ள நசரீன் "அது அப்படியல்ல" என்று கூச்சலிடுவதைக் கேளுங்கள். பாருங்கள்? அவ்விரண்டுக்கும் வித்தியாசம் உண்டு என்பதை அவர் அறிந்துள்ளார். ஏனெனில் நிச்சயமாக வித்தியாசம் உண்டு சகோ. காப்ஸ், நமது தீரமுள்ள சகோதரன். பாருங்கள்?
293. நிச்சயமாக, நசரீன்கள். அவர்களுக்கு விரோதமாக யாரும் ஒரு வார்த்தையும் கூற இயலாது, அருமையான, மதப்பற்றுள்ள ஜனங்கள், அவர்கள் மிகவும் நல்லவர்கள். தேவ சபையினர், நசரீன்கள், சுயாதீன மெதோடிஸ்டுகள், இவர்கள் அனைவரும் உண்மையானவர்கள், ஆனால் ஆவியின் கிரியைகளுக்கு அது வரும் போது அவர்கள், "ஓ, ஓ, அது பிசாசு" என்று சொல்லி விடுகின்றனர். அவர்கள் அங்கு என்ன செய்கின்றனர்? பரிசுத்த ஆவிக்கு விரோதமாய் தேவ தூஷணம் சொல்கின்றனர். அவர்கள் அதைச் செய்யும் போது...
294. இப்பொழுது, தேவ தூஷணம் என்றால் என்ன? அதற்கு மன்னிப்பே கிடையாது. அது சரியா? ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பர்ம ஈவை ருசிபார்த்தும் (தேவனுடைய பரிசுத்தமாக் கப்படுதலை ருசிபார்த்தல்: புகை பிடித்தல், அசுத்தமான பெண்களுடன் ஈடுபாடு, அத்தகைய வாழ்க்கை அனைத்தினின்றும் விடுபடுதல்), 'பரம் ஈவை ருசிபார்த்தும் (அந்த திராட்சை குலையிலிருந்து ஒரு பாகத்தை ருசித்த அந்த வேவுகாரர்கள் போல் எல்லைக்கோடு வரைக்கும் வருவதைக் கண்டு... ஆனால் அவர்கள் என்ன செய்ய வேண்டும்? அவர்கள் தங்கள் ஸ்தாபனங்களிலிருந்து விடுபட்டு இங்கு கடந்து வரவேண்டும். 'பாருங்கள்?), பரம ஈவை ருசிபார்த்தும்; தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து, தங்களைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்று எண்ணுகிறவர்கள்.
295. பரிசுத்தமாக்கப்படுதல் என்பது, விசுவாசி என்னும் முறையில் உங்கள் பெயர் அந்த புத்தகத்தில் எழுதப்படும் போது. உங்களுடைய பெயர் அவருடைய இரத்தத்தினால் எழுதப்படுகிறது. பாருங்கள்? பரிசுத்தமாக்கப்படுதல் அதை செய்கிறது, நீங்கள் தொடர்ந்து வருகிறீர்கள். அவர் உங்களை இதுவரைக்கும் நம்பின பிறகு, நீங்கள் அங்கு அடைந்து, "நல்லது, அவருக்குத் தெரியுமா?" என்று கேட்கிறீர்கள்.
296. ஆம், அவர் அறிந்திருந்தார். நீங்கள் அதை செய்ய மாட்டீர்கள் என்று தொடக்கத்திலேயே அவர் அறிந்திருந்தார். அவர் அவனை தொடக்கத்திலிருந்தே அறிந்திருந்தார்; அவன் கேட்டின் மகன். ஆனால் இந்த காரியங்கள் நிறைவேறவேண்டும். பாருங்கள்? வார்த்தையானது நிறைவேறவேண்டும், அவை முன்னடையாளங்களாகவும் சாயல்களாகவும் இருந்த போதிலும். ஓ, என்னே! நாம் அதில் மணிக்கணக்கில் நிலைத்திருக்கலாம்.