297. இல்லை, இல்லை, இல்லை, இல்லை, இல்லை, இல்லை, இல்லை, இல்லை, இல்லை! நீங்கள் அதை தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் (பாருங்கள்?) முழு வாரம் அல்லது கடைசி ஏழு வருடங்கள் அல்ல. இயேசு இவ்வுலகில் வந்த போது அந்த வாரம் தொடங்கினது அவன், "மேசியா, அதிபதி, வந்து தீர்க்கதரிசனம் உரைப்பார், அந்த வாரத்தின் நடுவில் அவர் அறுப்புண்டு போவார்" என்றான். இயேசு சரியாக மூன்றரை ஆண்டு காலம் பிரசங்கித்தார், அது ஏழு நாட்களாகிய வாரத்தின் நடுவில். பாருங்கள்? இன்னும் மூன்றரை ஆண்டுகள் மீதமுள்ளது.
298. இப்பொழுது, மோசேயும் எலியாவும் பூமிக்கு வரும் போது அது வெளிப்படுதல் புத்தகத்திலும் சகரியாவிலும் காணப்படுகிறது... (சகோ. கூமர், உங்கள் கேள்வியும், சகோதரி கூமரின் கேள்வியும் அதன் பேரில்தான்). இப்பொழுது, அவர்கள்... சகரியா 4ம் அதிகாரத்திலும், வெளிப்படுத்தல் 11ம் அதிகாரத்திலும் இந்த இரு ஒலிவ மரங்கள் அது மோசேயும், எலியாவும் அவர்கள் பூமிக்கு வரும்போது சரியாக 1260 நாட்கள் தீர்க்கதரிசனம் உரைப்பார்கள். அது என்ன? சரியாக மூன்றரை ஆண்டு காலம். அது சரியாக அதே காரியம்தான். பாருங்கள்? இதை கேட்ட அருமையான நபர் யாராயிருப்பினும், மிகவும் அழகாக தாளில் எழுதப்பட்டுள்ளது, வேத சம்பந்தமான தலைப்பு, கோடுகள் இங்கேயும் மற்றவைகளும், அது மிகவும் அழகாயுள்ளது. இது ஒரு நல்ல கேள்வி, ஆனால் நான் கூறினதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை. அந்த முழு வாரமும் இப்பொழுது முடிவடையும் என்று நான் ஒரு போதும் நினைத்ததேயில்லை. மேசியா அறுப்புண்டு போகிறார். இதை நான் இங்கு பிரசங்கித்தது எத்தனை பேருக்கு "ஞாபகமுள்ளது? நிச்சயமாக! பாருங்கள்? ஏழு நாட்கள்."