Q.371. அப்பொழுது முதற்கொண்டு, முதல் மூன்றரை ஆண்டுகள் இயேசுவின் ஊழியத்தின் போது
நிறைவேறினது போல் தோன்றுகிறது (நல்லது, இங்கு அதை நீங்கள் சரியாக
கூறியிருக்கிறீர்கள்) ஆனால் "வாரத்தின் நடுவில்" என்று கூறப்படுவது அந்திகிறிஸ்து தான்
செய்த உடன்படிக்கையை முறிப்பதை குறிப்பிடுவது போல் தோன்றுகிறது... (இல்லை,
அந்திகிறிஸ்து கடைசி மூன்றரை ஆண்டுகள் முடிவில் தான் தன் உடன்படிக்கையை முறிக்கிறான்.
பாருங்கள்?). தானியேலின் செய்தி ஒலிநாடாவை நான் எவ்விதம் புரிந்து கொண்டேன் என்றால், இயேசு
எருசலேமுக்குள் கி.பி. 20ம் ஆண்டில் சவாரி செய்து சென்ற போது, முதல் அறுபத்தொன்பது வாரங்கள்
முடிந்து விட்டது, எனவே அவருடைய ஊழியத்தின் அந்த மூன்றரை ஆண்டுகள் அறுபத்தொன்பது வாரங்களில்
சேர்க்கப்படும்: கடைசி முழு வாரம் அல்லது ஏழு ஆண்டுகள் இனிமேல் நிறைவேற வேண்டும், அது எடுத்துக்
கொகர்ளப்படுதலின் போது தொடங்கும். இதை தயவுகூர்ந்து எனக்கு தெளிவாக்கும்.
299. உங்களுக்குத் தெரியுமா, சகோதரனே, சகோதரியே, இந்த கேள்வியைக் கேட்டவர் யாராயிருந்தாலும் மிகவும்
அழகானது (பாருங்கள்?), ஆனால் நான் கூறினதை நீங்கள் சிறிது தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்
என்று நினைக்கிறேன். பாருங்கள்? இயேசு எருசலேமுக்கு வந்த போது (அது முற்றிலும் உண்மை), அது...
பாருங்கள்? அவர் அங்கிருந்து நேராக சென்று சிலுவையிலறையப்பட்டார். பாருங்கள்? அவர் ஒரு வாரம்
பாதியில் தீர்க்கதரிசனம் உரைத்தார் என்பது உண்மையே. அது மூன்றரை ஆண்டு காலம். இப்பொழுது, அவர்
அறுப்புண்டு போனார், அவருடைய ஆத்துமா பலியாக செலுத்தப்பட்டது. இப்பொழுது, இன்னும் வர வேண்டியது.
இந்தக் கடைசி நாட்களில் இன்னும் மூன்றரை ஆண்டுகள் யூதர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்டுள்ளது.
தற்போது, எடுத்துக்கொள்ளப்படுவதற்காக பரிசுத்தவான்களின் ஒன்று கூடுதல் உண்டாகும்.
300. இப்பொழுது இவையனைத்தையும் நான் பார்க்கப்போவதில்லை, சகோதரனே, சகோதரியே.