301. இப்பொழுது, இது விசுவாசிகளின் மத்தியில் நடை பெறும். பாருங்கள்? ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த வரங்கள் அனைத்தும் இருக்காது, ஒரு மனிதன் இதைச் செய்வான் என்று அர்த்தமல்ல; அது ஒரு கூட்டம் ஜனங்களாயிருக்கும். உதாரணமாக இந்த சபையில் ஒரு சிறு பெண், அல்லது ஒரு சிறு பையன், அல்லது நாம் அதிகமாக நேசிக்கும் யாராகிலும் இருந்து, அவருடைய உயிர் பிரிந்துபோனது என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது முழு சபையும் ஒன்று கூடி ஜெபம் பண்ணி உபவாசித்து, “ஆண்டவரே, அந்த பிள்ளையின் மேல் இரக்கமாயிரும்” என்று விண்ணப்பிக்கும். பாருங்கள்? தேவன் அந்த பிள்ளையை உயிரோடெழுப்பக்கூடும்.
302. எத்தனை பேர் நிசாயா பிதாக்கள் இன்னும் மற்ற புத்தகங்களைப் படித்திருக்கிறீர்கள்? உங்களுக்குத் தெரியுமா, அப்படித்தான் அவர்கள் ஆதிகாலத்து சபையில் செய்து வந்தனர். அவர்கள் அனைவரும் ஒன்றுகூடி, சில நேரங்களில் போதகரையும் கூட, இன்னும் மற்றவர்களையும் உயிரோடெழுப்பின துண்டு அதை செய்வது நலமென்று தேவன் காண்பாரானால்; அவர்கள் அதை செய்தனர்.