303. சரி, இதை பெற்றிருக்கிறவர்கள். மணவாட்டிக்கு சுத்திகரிப்பு அவசியமில்லை. அவள் ஏற்கனவே சுத்திகரிக்கப்பட்டு விட்டாள். முன் காலத்தில் மரித்துப் போனவர்கள். பாருங்கள்? இங்குள்ள இந்த சபை பெற்றுள்ள வெளிச்சத்தை அவர்கள் பெற்றிருக்கவில்லை; அவர்கள் நீதிமானாக்கப்படுதல், பரிசுத்த மாக்கப்படுதல் போன்றவைகளின் கீழ் வாழ்ந்து வந்தனர். அவர்கள் பெற்றிருந்த வெளிச்சத்தில் அவர்கள் வாழ்ந்தனர். ஒருக்கால் அவர்கள் துன்பம் அனுபவித்திருக்கக் கூடும். அவர்களுடைய உபத்திரவங்கள்... ஆனால் இப்பொழுது, எடுத்துக்கொள்ளப்படுதல் நேரம் வர வேண்டிய இப்பொழுது, மணவாட்டியின் தலை பாகத்தை புறக்கணிக்கின்றவர்கள், அவர்கள் புறக்கணித்ததன் காரணமாக துன்பம் அனுபவிக்க வேண்டிய நேரம் ஒன்று வரும். ஆனால் முன் காலத்தில் இருந்தவர்களுக்கு, இன்றுள்ளது போல சுவிசேஷமானது தெளிவாக்கப்படவில்லை. பாருங்கள்? நீங்கள் அவரைத் தெளிவாக காண்கிறீர்கள். இத்தனை ஆண்டுகள் உங்களுக்கு இருந்தது உங்களுக்கு உதாரணங்கள் அளிக்கப்பட்டன, முத்திரைகள் திறக்கப்பட்டுவிட்டன, சபை காலங்கள் உங்களுக்கு முன்பாக வெளிப்படையாக வைக்கப்பட்டது, எல்லாமே அவ்விதமாக தெளிவாக்கப்பட்டுவிட்டது. அது அவ்வளவு தெளிவாயுள்ளதால், அதை நீங்கள் காணத் தவறமுடியாது. பாருங்கள்? இவையனைத்துக்கும் பிறகு, நீங்கள் முழுவதுமாக இதைப் புறக்கணிப்பீர்களானால், செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று, நீங்கள் அதற்காக துன்பம் அனுபவிக்க வேண்டும்.
304. அதை எடுத்து விட்டீர்களா, சகோ. நெவில்? அது எதைக் குறிக்கும் ஒன்று? நான் இப்பொழுது முடித்து விட்டு போய் விடுவது நல்லது. ஏனெனில் நேரம் அதிகமாகிக்கொண்டிருக்கிறது. பாருங்கள்? ஏழு, - ஏழு ஒன்பது... நாம் பார்ப்போம். ஆகிலும் அவர்கள் விரத்தராயிருக்கக் கூடாதிருந்தால் விவாகம் பண்ணக்கடவர்கள்; வேகிறதைப் பார்க்கிலும் விவாகம் பண்ணுகிறது நலம்,
305. சரி, அது அசுத்தமான வாழ்க்கை வாழ்வதைக் குறிக்கிறது. ஒரு மனிதன், ஒரு பையன், ஒரு பெண், அப்படி யாரோ ஒருவர், அவர்கள் ஒன்றாக சென்று, அவர் விவாகம் பண்ண வேண்டுமென்று அறிந்திருந்தால், நீங்கள் போய் விவாகம் செய்து கொள்ளுங்கள். நான் என்ன கூறுகிறேன் என்று உங்களுக்கு விளங்குகிறது என்று நினைக்கிறேன். பாருங்கள்? அசுத்தமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்காதீர்கள். ஏனெனில் அது சரியல்ல. பாருங்கள்? நீங்கள் கிறிஸ்தவாரயிருந்தால், அது ஒரு விதத்தில் உங்கள் சகோதரி. அது உலகமாயிருக்குமானால், அது உலகமே; நாய் நாயைத் தின்கிறது. ஆனால் நீங்கள் கூட சென்று கொண்டிருக்கிற இந்த பெண், அது உங்கள் சகோதரியும் கூட! அது வரப்போகிற உங்கள் பிள்ளைகளுக்குத் தாய். அவளுடன் அசுத்தமான வாழ்க்கை வாழாதீர்கள், நீங்கள் பண்புள்ள கிறிஸ்தவர் என்பதை அவளுக்குப் காண்பியுங்கள். நற்பண்புள்ள கிறிஸ்தவர் வாழவேண்டிய விதத்தில் வாழுங்கள். பாருங்கள்? அவளை உங்கள் சகோதரி போல நடத்துங்கள், நீங்கள் அவளை விவாகம் செய்து கொண்ட பிறகும், அதே போல் அவளை நடத்துங்கள்.
306. இதற்கு நான் இப்பொழுதே பதில் கூறி விடலாம். பெந்தெகொஸ்தே ஜனங்கள், பரிசுத்தம் ஜனங்கள், அவர்கள் விவாகம் செய்து கொண்டிருந்தபோதிலும் அவர்கள் ஆபாசமான வாழ்க்கை வாழ்வதில் எனக்கு நம்பிக்கையில்லை. அதில் எனக்கு நம்பிக்கையே கிடையாது. இல்லை, ஐயா! சில ஆபாசமான காரியங்கள், அவை மிகவும் பயங்கரமானவை... சில நேரங்களில் அப்படிப்பட்டவர்கள் இங்கு வருகின்றனர். இன்று காலையில் அல்ல, அதை நான் கூறவில்லை, ஆனால் சில நேரங்களில் நான் கலிபோர்னியாவுக்கும் வெவ்வேறு இடங்களுக்கும் சென்றிருக்கும் போது, அங்கு நான் போதகர்களை சந்திக்கிறேன். சிந்தனைகளைப் பகுத்தறிதலின் வரத்தின் மூலமாக அவர்களைக் காணும் போது, அவர்களை என் முழங்கால்களின் மேல் கிடத்தி, அவர்களுக்கு சுவிசேஷ அடி கொடுக்கலாம் போல் எனக்குத் தோன்றுகிறது. ஆம், ஐயா! என்னே, ஒரு மனிதன் தன் மனைவியிடம் ஆபாசமாக நடந்து கொள்ள முயல்வதைக் காணும்போது... நான் என்ன கூறுகிறேன் என்று விளங்குகிறதா? தேவனுடைய மனிதன் என்னும் முறையில் நீங்கள் உங்களைக் குறித்து வெட்கப்பட வேண்டுமென்று நினைக்கிறேன். நீங்கள் ஒரு கணவனாக, இனியவராக இருங்கள். அவளை எப்பொழுதும் போல மதியுங்கள். இந்த பாலுணர்ச்சி புத்தகங்களில் காணப்படும் முட்டாள்தனமான காரியங்களில் கவனம் செலுத்தாதீர்கள் நீங்கள் படிக்கும் அவ்விதமான ஆபாசமான காரியங்களில், அந்த ஆபாசமான காரியத்தை உங்கள் சிந்தையிலிருந்து எடுத்துப் போடுங்கள்.
307. நீங்கள் பரிசுத்தத்தை பெற்றுள்ளதாக கூறிக் கொள்ளும் போது, ஒரு ஆபாசமான சம்பாஷணையும் உங்கள் மத்தியில் இருக்கக்கூடாது என்று வேதம் உரைக்கிறது. இந்த சிறு மாது சிரோமணியை உங்கள் மனதுக்கு இனியவளாக நடத்துங்கள். அவளுக்கு அறுபது வயது இருக்குமானால், அப்பொழுதும் அவளிடம் அதே விதமாக இருங்கள். நீங்கள் அவளுக்கு தீரமான ஆண் நண்பனாக (boy friend) இருங்கள்; ஞாபகம் கொள்ளுங்கள். நீங்கள் அதுதான்.
இந்த புதிதான காரியங்கள் ஒன்றையும் நீங்கள் முயற்சி செய்ய வேண்டாம், நான் எதைக் குறித்து பேசுகிறேன் என்று நான் அறிந்திருக்கிறேன். நீங்கள் ஒரு கணவனாக, ஒரு உண்மையுள்ள சகோதரனாக, உண்மையுள்ள கிறிஸ்தவனாக இருங்கள்.
அது மோசமாக தொனிக்கிறதென்று எனக்குத் தெரியும்... ஆனால் அந்த... நீங்கள் என் பிள்ளைகள், உங்களிடம் கூற விரும்புவதைக் கூற எனக்கு உரிமையுண்டு, பாருங்கள்? நீங்கள் என் பிள்ளைகள்; நீங்கள் சரியாக வாழுங்கள்.
308. ஸ்திரீகளாகிய நீங்களும், உங்கள் கணவனிடம் சரியான விதத்தில் வாழுங்கள். கணவன்மாராகிய நீங்களும் உங்கள் மனைவிமார்களிடம் சரியான விதத்தில் வாழுங்கள். நீங்கள் மிக மிக அருமையாக இருந்து ஒருவருக்கொருவர் மதிப்பு செலுத்துங்கள். உங்கள் குடும்ப உறவு போன்றவை, அது மிகவும் பயபக்தியாயும், தேவ பக்தியுமுடையதாய், நீங்கள் ஒருவருக்கொருவர் ஒத்துப்போங்கள். நீங்கள் தள்ளியும் திணித்தும், ஆபாசமாகவும் அவலட்சணமாகவும் நடந்து கொள்ளாதீர்கள்.
309. புரிந்து கொள்ளுங்கள், உங்கள் மனைவியுடன் உரையாடுங்கள். உங்களுக்கு ஒரு சுபாவமும் அவளுக்கு வேறொரு சுபாவமும் இருந்தால் அவளிடம் அதைக் குறித்து பேசுங்கள் சகோதரியே, நீயும் அதையே அவரிடம் செய். அதேவிதமாக ஒருவரையொருவர் புரிந்து கொண்டு, உண்மையான நற்பண்புள்ள கிறிஸ்தவராகவும், உண்மையான மாதுசிரோமணியாகவும் இருந்து ஒருவருக்கொருவர் சகோதரனாயும் சகோதரியாயும் இருங்கள் நீங்கள் தேவனுடைய பிள்ளைகள் என்று எப்பொழுதும் ஞாபகத்தில் வைத்திருங்கள். நீங்கள் ராஜ குடும்பத்தில் பிறந்தவர்கள், நீங்கள் ராஜ குடும்பத்தின் இரத்தத்தைக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் இரத்தத்தைக் காட்டிலும் உயர்ந்த இரத்தம் இவ்வுலகில் எதுவுமில்லை. அது உண்மை! ராஜ குடும்பத்தின் இரத்தம் தன்னை யாரென்று காண்பிக்கும். அதுதான் அது, அது ராஜ குடும்பத்தின் இரத்தம். அதை நம்புகிறவர் எல்லோரும் "ஆமென்” என்று சொல்லுங்கள் (சபையோர் “ஆமென்” என்கின்றனர் - ஆசி). ஆம், ஐயா! நீங்கள் யாரென்று காண்பியுங்கள். நான் ராஜாவின் மகன், நான் ராஜாவின் மகன். என் மனைவி ராஜாவின் குமாரத்தி. நான் அந்த ராஜகுமாரத்தியை எப்படி நடத்துவேன்? அவள் அந்த ராஜகுமாரனை எப்படி நடத்துவாள்? நான் கூறுவது விளங்குகிறதா? நீங்கள் உண்மையுள்ளவர்களாயிருங்கள்.