310. இந்தக் கேள்வியுடன் நான் முடித்துக்கொள்ள வேண்டியிருக்கும் என்று நினைக்கிறேன். ஏனெனில் பதில் சொல்வதற்கு இன்னும் அநேக கேள்விகள் உள்ளன. அதிக நேரமாகிவிட்டது. இப்பொழுது நேரம் ஒரு மணிக்கு இருபது நிமிடங்கள். இங்கு இன்னும் முப்பது அல்லது ஒருவேளை நாற்பது கேள்விகள் கேட்கக்கூடும். எனக்கு உள்ள நேரத்தில் நான் இதற்கு சிறந்த முறையில் பதிலளிக்கிறேன். நான் மூன்று நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறேன். மற்ற கேள்விகளை என்னால் முடியும் போது எடுத்துக்கொள்கிறேன். பாருங்கள்? எப்பொழுது இவைகளை எடுத்துக்கொள்ள முடியுமென்று எனக்குத் தெரியவில்லை. என்னால் முடிந்தவரையில் அதை சிறப்பாக செய்வேன். நீங்கள் இவைகளை அனுபவித்து மகிழ்கின்றீர்களா? நான்... அது எனக்கும் உதவியாயுள்ளது. பாருங்கள்? இங்கு வந்து இக்கேள்விகளை முன்பு காணாமல் பொறுக்கி எடுக்கும் போது (பாருங்கள்?), உங்களால் பதில் கூற இயலாத சில கேள்விகள் கிடைத்து விடுகின்றன. நான் நம்பியிருந்தேன். நான் பொறுக்குவேன் என்று... சர்ப்பத்தின் வித்தைக் குறித்த ஒரு கேள்வி இங்குள்ளது என்று எனக்குத் தெரியும். அதை எப்படியாவது பொறுக்கி எடுத்து அதை விவரிக்க வேண்டுமென்று விரும்பினேன். பாருங்கள்? அதை எடுக்கத் தவறிவிட்டேன், எனவே நான்... ஒருக்கால் அதை அந்த விதமாக செய்வது கர்த்தருக்குப் பிரியமில்லை போலும், அது சர்ப்பத்தின் வித்தின் பேரில், இந்த ஒலிநாடாவைக் கேட்கிறவர்கள் ஒருக்கால், "நல்லது, அவர் அதற்கு பதில் கூறாமல் விட்டு விட்டார்” என்று சொல்லாதபடிக்கு, அதற்காக எத்தனை பேர் இன்னும் இரண்டு நிமிடங்கள் சகித்துக் கொள்வீர்கள்? சரி.
311. இப்பொழுது பொறுங்கள், இதற்கு முதலாவதாக நான் பதில் கூறட்டும். இங்குள்ள கேள்வி இது: "மணவாட்டியினால் அற்புதங்கள் செய்யப்படுமா? ஆம், ஐயா. அது இப்பொழுது செய்யப்பட்டு வருகிறது. அது உண்மை. பாருங்கள்? ஆனால் மகத்தான அற்புதங்களை எதிர்பார்க்காதீர்கள். மழை பெய்யாதபடிக்கு வானத்தை அடைத்தல் போன்றவைகளை. அது யூதர்களுக்கு செல்லவிருக்கிறது. பாருங்கள்? அது இங்கு சம்பந்தப்பட்டதல்ல; அது மோசேயும் எலியாவும் யூதர்களிடம் செல்லுதல், அது இந்த சபைக்கு அல்லவே அல்ல. நீங்கள் வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தின் முதல் மூன்று அதிகாரங்களைப் படியுங்கள். சபை என்னவென்று அங்கு புரிந்து கொள்வீர்கள். சபைக்கு அவ்வளவுதான். அது மணவாட்டியுடன் திரும்ப வரும்போது, அவள் திரும்ப வரும்போது... படியுங்கள்... சபையைக் குறித்து நீங்கள் அறியவேண்டுமானால், அதனுடன் சம்பந்தப்பட்டுள்ளது எதுவென்று, வெளிப்படுத்தின விசேஷம் முதல் மூன்று அதிகாரங்களைப் படித்து விட்டு, அங்கிருந்து 19ம் அதிகாரத்துக்கு சென்று அதிலிருந்து தொடங்கி படியுங்கள், அங்கு நீங்கள் மணவாட்டியை காணலாம். மற்றது யூதரைக் குறித்தது.
312. இப்பொழுது, சர்ப்பத்தின் வித்தைக் குறித்த கேள்வியை என்னால் இங்கு கண்டு பிடிக்க முடியவில்லை, ஏனெனில் (பாருங்கள்), இவை இங்கு ஒரு பெரிய குவியலாக உள்ளன. ஆனால் அந்த நபர், "அது சர்ப்பத்தின் வித்தாயிருக்குமானால்... அந்த ஸ்திரீ 'நான் கர்த்தரால் ஒரு குமாரனைப் பெற்றேன்' என்று எப்படிச் சொன்னாள்?" என்று கேட்டிருக்கிறார்.
நல்லது, அவள் கர்த்தரால் எவ்விதம் அவனைப் பெற்றாள் என்று போன ஞாயிறு விளக்கினேன் என்று நினைக்கிறேன். அவளுக்கு அது கிடைத்திருக்குமானால், அது கர்த்தரிடமிருந்து தான் அவளுக்கு கிடைத்திருக்க வேண்டும் (பாருங்கள்?) ஏனெனில் அது கர்த்தரிடமிருந்து தான் வரவேண்டும். ஏனெனில் தேவனுடைய பிரமாணம்... அது தேவனுக்கு கீழ்படியும். நிச்சயமாக!
313. சூரியன் பிரகாசிக்க வேண்டுமென்று அவர் அதை உண்டாக்கினார்; அது பிரகாசிக்கிறது. மழை நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் பெய்ய வேண்டுமென்று அவர் தீர்மானித்தார்; அது அப்படியே நடக்கிறது. வயலில் விதைக்கப்படும் விதைகள், நல்லவையானாலும் கெட்டவையானாலும், வளர்ந்து மேலே வருகிறது; ஏனெனில் அது ஒரு விதை. ஒரு விதை நடப்பட்டால்...
இந்த சர்ப்பம் தன் விதையை நடக்கூடிய ஒரே வழி, அந்த மிருகம் மட்டுமே மானிட வர்க்கத்துக்கு அடுத்தபடியாக இருந்தது. ஏனெனில் மானிடவர்க்கத்தின் தோற்றத்தின் போது, தேவன் பூமியின் மேல் அசைவாடின போது... அவர் பறவைகளைத் தோன்றச் செய்தார். பறவைகளிலிருந்து அவர் வெவ்வேறு ஜீவராசிகளுக்கு வந்தார். பிறகு வாலில்லாக் குரங்கு (Chimpanzee), வாலில்லாக் குரங்கிலிருந்து சர்ப்பம்.
314. அவர் இந்த சந்ததியை குழப்பும் வகையில் அந்த சர்ப்பத்தை மாற்றிப் போட்டார் (அது அவ்விதம் செய்யப்பட வேண்டியதாயிருந்தது; இவர்கள் ஏதோ ஒரு மிருகத்தைப் போல் காணப்படும் ஒரு எலும்பைக் கண்டு பிடிக்க முயற்சி செய்து வருகின்றனர். அது பாதி மனிதனும் பாதி மிருகமுமாயிருந்தது), அங்கிருந்து தான் மனிதன் தோன்றினான் என்று கூறுவதற்கு அவர்கள் வாலில்லாக் குரங்குக்குப் பிறகு இதை இழந்து போயினர், குரங்குக்கு அறிவு கிடையாது. அதற்கு ஆத்துமா கிடையாது. அதனால் சிந்திக்க முடியாது. அது... அதனால்... சத்தம் மட்டுமே உண்டாக்க முடியும். குதிரை "கீ, “ஹா' என்று அப்படி ஏதோ ஒரு சத்த மிட்டு கனைக்கிறது. நாயிடம், "இங்கு வா, ஃபீடோ, ஒரு வித்தை (rick) காட்டு. இதைத் தாண்டு" என்றால் தாண்டும். மற்றும் அது போன்று பழக்கு வைத்தால், அது உணர்ச்சியினாலும், கேட்பதனாலும், அப்படிப்பட்ட காரியங்களினாலும் செயல் புரிகிறது. ஆனால் அவைகளால் சிந்தித்து புரிந்து கொள்ள முடியாது. அவை நிர்வாணமாயுள்ளன என்பது அவைகளுக்குத் தெரியாது. அவைகளுக்கு ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வித்தியாசம் தெரியாது. அவைகளுக்கு எந்தவித பிரமாணமும் கிடையாது. பாருங்கள்? அவைகளால் அதை செய்ய முடியாது. மனிதன் ஒருவன் மட்டுமே.
மானிட வர்க்கத்துக்கு அடுத்தபடியாக இருந்தது சர்ப்பமே. பூமியிலுள்ள எல்லா மிருகங்களைக் காட்டிலும் அது மிகவும் தந்திரமுள்ளதாய் இருந்ததாக வேதம் உரைக்கிறது. மிகவும் சாமர்த்தியமுள்ளது, அதற்கு ஏறக்குறைய ஒரு ஆத்துமா இருந்தது. அதற்கு ஆத்துமாவுக்காக ஒரு இடம் இருந்தது. ஆனால் அது என்ன செய்தது? தேவனை வஞ்சிக்க எண்ணி தன்னை சாத்தானுக்கு விற்றுப்போட்டது தேவனை வஞ்சிக்க முயன்று. இவ்வளவு தூரம் நான் சொன்னதை எத்தனை பேர் புரிந்து கொண்டீர்கள்?
315. சாத்தான், சர்ப்பத்துக்கு, ஏறக்குறைய ஆத்துமா இருந்தது. அவர்கள் அந்த எலும்புகளைத் தேடுவார்கள் என்று தேவன் அறிந்திருந்தார். மனிதனைப் போல் காணப்படும் எந்த ஒரு எலும்பும் பாம்பில் இப்பொழுது இல்லை. அது... அது சபிக்கப்பட்டது. அது முன்பு மனிதனைப் போல் காலூன்றி நின்றிருந்தது
316. கவனியுங்கள், அப்பொழுது அந்த வித்து அது மனித வித்துக்கு அடுத்தபடியாக இருந்தது... சாத்தான், அந்த ஆவி, அந்த ஒரு வித்து மட்டுமே ஸ்திரீயை கர்ப்பந்தரிக்கச் செய்ய முடியும் என்பதை அறிந்திருந்தான்; மனித குரங்கால் அதை செய்ய முடியாது. அவர்கள் அதை கலந்து என்னவெல்லாமோ செய்து பார்த்தனர்; ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. மனித குரங்கில் இருந்த ஜீவகிருமி ஸ்திரீயின் வயலுக்கு அந்த முட்டைக்கு வரமுடியாதென்று அவன் அறிந்திருந்தான். ஆனால் சர்ப்பத்தின் வித்து அதைச் செய்யுமென்று அவனுக்குத் தெரியும், எனவே அவன் சர்ப்பத்துடன் ஈடுபடத் தொடங்கினான்.
317. இந்த செயலைப் புரிய முடியும் என்று ஆதாம் அறிந்திருக்கவேயில்லை. பாருங்கள்? அவள் பெண்ணாக உண்டாக்கப்பட்டடிருந்தாள். நிச்சயமாக, அவள் அதற்கு பின்னால் வந்திருப்பாள். ஆனால் பாருங்கள், தம்மை இரட்சகராக காண்பிக்க வேண்டும் என்னும் தேவனின் இராஜாதிபத்தியம் அதை விளக்கியிருக்கிறேன். ஆனால் சாத்தான் இதை அறிந்திருந்தான், அவன் அவளிடம் சர்ப்பத்தின் ரூபத்தில் வந்தான். சர்ப்பம் ஒரு மிருகம். அவன் அவளை அணுகினான். அவள் முதலாவதாக சாத்தானால் கருத்தரிக்கப்பட்டாள்.
318. நீங்கள் கவனிப்பீர்களானால், இந்த செயல் இருமுறை மட்டுமே செய்யப்பட்டது. ஆனால் மூன்று பிள்ளைகள் பிறந்தனர். வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள். அவள் இரட்டை பிள்ளைகளை பிரசவித்தாள். ஒருவன் சர்ப்பத்தின் வித்து; மற்றவன் ஆபேல். அவள் தன் கணவனை வசீகரித்து ஆசை காட்டி அவனிடம் கூறினாள். பாருங்கள்? அவள் தன் கணவனிடம் அது என்னவென்று காண்பித்தாள், அதன்பிறகு அவனும் அவளுடன் கூட வாழ்ந்தான், அதன் மூலமாக அவள் இந்த பிள்ளையைப் பெற்றெடுத்தாள். இரு வெவ்வேறு நபர்களால் அவள் இரட்டை பிள்ளைகளை கருத்தரித்தாள் என்பதை உங்களுக்கு காண்பிக்க விரும்புகிறேன். அவள் ஒரு அவள் கன்னிகை.
319. அவர்களுடைய வித்து பலம் வாய்ந்தது. உதாரணமாக இங்கு பாருங்கள். ஆபிரகாம் தன் சொந்த சகோதரியை மணந்து கொண்டான். இன்று ஒருவன் தன் சகோதரியை மணந்தால், அவனுக்குப் பிறப்பது மூடப் பிள்ளைகளாக இருக்கும். பாருங்கள்? ஆனால் மானிட... இங்கு யாக்கோபு, இல்லை ஈசாக்கு, ரெபேக்காளை மணந்து கொள்கிறான், நெருங்கின உறவு, இரத்த சம்பந்தமான உறவு, ஆபிரகாமின் சகோதரனின் மகள்.
320. கவனியுங்கள், இப்பொழுது கவனியுங்கள் (பாருங்கள்?), மானிட வர்க்கம் மிகவும் பலமுள்ளதாயிருந்தது. இப்பொழுது, நீங்கள் கவனிப்பீர்களானால், அது எப்பொழுதுமே வழிவழியாக இரட்டை பிள்ளைகளாக இருந்து வந்துள்ளது. அங்கு... காயீனும் ஆபேலும் இரட்டை பிள்ளைகள், ஏசாவும் யாக்கோபும் இரட்டை பிள்ளைகள். இயேசுவும் யூதாஸும் ஒரே கோத்திரத்திலிருந்து, ஒரே சபையிலிருந்து வந்தவர்கள். பரிசுத்த ஆவியும் அந்திகிறிஸ்துவும் கூட இரட்டை பிள்ளைகளே, "கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக மிகவும் நெருக்கமாக இருக்கும். நீங்கள் புரிந்து கொண்டீர்களா? சரி.
321. இதை நீரூபிக்க, நீங்கள் யூதா நிரூபத்தை எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். அது 17ம் வசனம் என்று நினைக்கிறேன், அல்லது 14ம் வசனம்... இப்பொழுது, இப்பொழுது, இதைக் கவனியுங்கள். நான் முடித்து விடுகிறேன். கவனியுங்கள், மற்றெல்லாவற்றையும் விட்டு விட்டு, இதை சரியாக பொருத்த முதலாவதாக அவர், “உன் வித்துக்கும் (சர்ப்பத்தின் வித்துக்கும்) அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்" என்றார் (ஆதி.3:15). பாருங்கள்? அவளுக்கு வித்து இருக்கவில்லை. எனவே அவள் பெற்றுக் கொண்ட வித்து சாத்தானின் வித்தே. காயீன் சாத்தானின் குமாரன். அவளுக்கு வித்து இருக்கவில்லை, எனவே அவள் அதை இன சேர்க்கையின் மூலம் பெற்றுக் கொண்டாள். அவள் அவ்விதம் பெற்றுக்கொண்ட போது, அது தேவனுடைய சத்துருவால் அவளுக்குக் கொடுக்கப்பட்டது. பிறகு, தேவன் அவளுக்கு ஒரு வித்தைக் கொடுத்த போது, அதில் இன சேர்க்கை சம்பந்தப்பட்டிருக்கவேயில்லை. உங்களுக்கு விளங்குகிறதா? அடிமைப் பெண்ணும் அவளுடைய பிள்ளையும் புறக்கணிக்கப்பட்டனர், ஏனெனில் சுயாதீனப் பெண்ணுடனும் அவள் பிள்ளையுடனும் இவர்கள் சுதந்தரவாளியாயிருப்பதில்லை.
322. கவனியுங்கள், பிறகு அவளுக்கு ஒரு வித்து கொடுக்கப்பட்டது, அது கிறிஸ்து. அவளுடைய முட்டை... இப்பொழுது, பிராடெஸ்டெண்டுகள் அது கன்னியின் மூலம் பிறந்த 'ஹிமோக்ளோபின்' என்று நம்புகின்றனர். அது சிருஷ்டிக்கப்பட்ட தேவனுடைய இரத்தம் என்றும் அதில் கிருமிகள் உண்டாயிருந்தன என்றும், ஆனால் முட்டை அவளுடையது என்றும் அவர்கள் நம்புகின்றனர். இல்லை, ஐயா! உணர்ச்சி இல்லாவிட்டால், அந்த முட்டை அந்த குழாயின் வழியாக கருப்பைக்குள் வர முடியாது. அப்படியானால் ஆவியாகிய தேவன் ஒரு ஸ்திரீயுடன் இன் சேர்க்கையில் ஈடுபட்டார் என்று நீங்கள் கூறுவது போல் ஆகிவிடுகிறது. அது எப்படி முடியும்? அது முழுவதும் தேவனுடைய சிருஷ்டிப்பினால் உண்டான பொருட்கள் முட்டை, கிருமி இரண்டுமே.
323. அவர் தேவனுடைய குமாரன், மரியாளின் குமாரன் அல்ல. அவர் அவளை "தாய்" என்று ஒரு போதும் அழைக்கவில்லை. “ஸ்திரீ" என்றுதான் அழைத்தார். அவர் அவளை ஒரு போதும் "தாய்" என்று அழைக்கவில்லை. அவள் அவருடைய தாய் அல்ல. அது தேவனுடைய குமாரன், தேவன் ஒருவரே. புரிந்து கொண்டீர்களா?
324. இப்பொழுது, இதை நிரூபித்து ஆணித்தரமாகப் பதியவைக்க வேறொரு காரியம், யாராகிலும் உங்களிடம் இவ்விஷயத்தில் சர்ச்சை உண்டாக்குவார்களானால், யூதாவின் நிரூபத்துக்கு செல்லுங்கள், அது 17ம் வசனம் என்று நினைக்கிறேன் (அது 14ம் வசனம் அல்லது 17ம் வசனம்). அவன், "ஏனோக்கு... நான் அதைப் படிக்க வேண்டுமென்று விரும்புகிறீர்களா? உங்களுக்கு அவ்வளவு நேரம் உண்டா? அப்படியானால், அதை நான் எடுக்கிறேன். அப்பொழுது நான் அறிந்து கொள்வேன். ஏனெனில் ஒலிநாடா இங்கு ஒடிக்கொண்டிருக்கிறது, இதில் நாம் தவறு செய்யக்கூடாது. அது எந்த வசனம் என்று பார்க்கட்டும்... பதினான்காம் வசனம்.
ஆதாமுக்கு ஏழாந்தலைமுறையான ஏனோக்கும் இவர்களைக் குறித்து; இதோ... ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூடக் கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான்.
இப்பொழுது. ஆதியாகமம் 5ம் அதிகாரத்துக்குச் செல்லுங்கள், பிறகு லூக்கா சுவிசேஷத்துக்கும் செல்லுங்கள் (இதை என்னால் கண்டு பிடிக்க முடிந்தால் நலமாயிருக்கும்; இதையெல்லாம் நான் இங்கு எழுதி வைத்திருந்தேன்), அங்குள்ள வம்சவரலாற்றில் நீங்கள் காணலாம். வேதத்தில் எங்கும் சொல்லப்படவில்லை... பாருங்கள்! நோவா ஏனோக்கு ஆதாமுக்கு ஏழாந்தலைமுறையானால், வேதம், "ஆதாம், அதன் பிறகு அவனுடைய குமாரன் சேத் என்றுரைக்கிறது (ஆதி. 5:3 - லூக்.3:38). ஏனெனில் காயீன் ஆதாமின் சந்ததி அல்ல. அது “ஆதாம் சேத்தைப் பெற்றான்... என்கிறது. சேத், யாரேதைப் பெற்றான். யாரேத் பெற்றான். இப்படி வழிவழியாக ஏனோக்கு வரைக்கும். ஏனோக்கு ஆதாமுக்கு ஏழாந்தலைமுறை. தேவனுடைய வம்சவரலாற்றில் காயீன் ஒருவனாக கருதப்பட்டதாக எங்கும் கூறப்படவில்லை.
326. அது அப்படித்தானா இல்லையாவென்று நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்; அதைப் பாருங்கள், லுக்காவும் கூட ஆதாமிலிருந்து பிறந்த சந்ததியாரின் பெயரைக் குறிப்பிடுகிறான். ஒரு முறையாவது காயீனின் பெயர் கூறப்படவில்லை. ஏனோக்கு ஆதாமுக்கு ஏழாந்தலைமுறையானால் (பாருங்கள்?), காயீன் அதில் எங்கு வருகிறான். ஏனெனில் வேதம் வம்ச வரலாற்றில் ஆதாம் தன் குமாரனாகிய சேத்தைப் பெற்றான்; சேத் யாரேதைப் பெற்றான்; யாரேத் இன்னாரைப் பெற்றான் என்று வழிவழியாக உரைக்கிறது. ஒருமுறையாவது காயீனின் பெயர் கூறப்படவில்லை. அப்படியானால் அவன் ஆதாமின் குமாரனாக இருக்க முடியாது. எனவே அவன் சர்ப்பத்தின் குமாரனாக இருக்க வேண்டும். இனசேர்க்கை இல்லாமல் அவன் குமாரனாக பிறந்திருக்க முடியாது. ஆமென்! அப்படியில்லாவிட்டால், அவன் கன்னிகையின் மூலம் பிறந்திருக்க வேண்டும். அப்பொழுது அவன் தேவனுடைய குமாரனாக ஆகிவிடுவான். அவர்கள் ஒரு முறையாவது இதை தவறவிடக்கூடாதென்று விரும்புகிறேன்.
327. இப்பொழுது, இதை வெளிப்படுத்தின அதே தேவன் தான் உங்கள் விவாகமும் விவாகரத்து பிரச்சினை பற்றியும் என்னிடம் கூறினார். அவர் இந்த காரியங்களைக் கூறும் போது, என் சகோதரனே, சகோதரியே... நான் உங்கள் சகோதரன், ஒரு மனிதன். ஆனால் அவர் அதைக் கூறும் போது, அது இங்கு உள்ளே பதியும் போது, என்னால் அதை உங்களிடம் விவரிக்க முடியவில்லை. அதை நான் முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் என்னால் முடியாது. ஆனால் அது ஒரு முறையாவது தவறாய் போனதில்லை. என்னால் அதை புரிந்து கொள்ள இயலாமல் போனாலும், அதை நான் இறுகப்பற்றிக்கொண்டிருக்கிறேன்; அதன்பிறகு அவர் அதை வெளிப்படுத்தத் தொடங்குகிறார், அப்பொழுது அது என்னை திகைப்பில் ஆழ்த்துகிறது. அது அங்கேயே உள்ளது, ஆனால் அதை நான் புரிந்து கொள்ளவில்லை. உங்கள் கல்வி தள்ளிவைக்கப்படுகிறது, உங்கள் யோசனை தள்ளிவைக்கப்படுகிறது. மற்றெல்லாமே; அவ்விதமாகத்தான் காயினும் தள்ளி வைக்கப்பட்டான்.
இப்பொழுது, நாம் ஆதியாகமத்துக்குத் திரும்பிச்சென்று அதை படிக்க நமக்கு நேரம் இருக்குமானால்... அதை நான் கண்டு பிடிக்க முடியுமா என்று பார்க்கட்டும். என்னால் கண்டு பிடிக்க முடியுமா இல்லையாவென்று நிச்சயமாக எனக்குத் தெரியவில்லை. திருமதி வுட், அதை நான் அன்றொரு நாள் உங்களுக்குள் காண்பித்துக் கொண்டிருந்தேனே, அந்த அதிகாரம் உங்களுக்கு ஞாபகமுள்ளதா? அது என்ன... அது 5ம் அதிகாரமா? 5ம் அதிகாரம், உ ஊ சரி.
ஆதாமின் வம்சவரலாறு; தேவன் மனுஷனைச் சிருஷ்டித்த நாளிலே அவனைத் தேவசாயலாக உண்டாக்கினார். அவர்களை ஆணும் பெண்ணுமாகச் சிருஷ்டித்து, அவர்களை ஆசீர்வதித்து, அவர்களைச் சிருஷ்டித்த நாளிலே அவர்களுக்கு மனுஷர் என்று பேரிட்டார்' (ஆங்கில வேதாகமத்திலே, "அவர்களுக்கு ஆதாம் என்று பேரிட்டார்' என்று எழுதப்பட்டுள்ளது. - தமிழாக்கியோன்).
ஆதாம் நூற்று முப்பது வயதான போது, தன் சாயலாகத் தன் ரூபத்தின்படியே ஒரு குமாரனைப் பெற்று அவனுக்குச் சேத் என்று பேரிட்டான் (காயீன் என்ற பெயரிட்டான்? அவனுடைய பெயர் என்ன வென்று அழைத்தான்? சேஷ்ட புத்திர பாகத்தைப் பெற்ற முதற்பேறானவன் எங்கே? அவனுடைய பெயர் இங்கு சொல்லப்படவும் இல்லை. சேத் அவன் குமாரன்).
328. நாம் இங்கு மறுபடியும் வந்து அங்கு என்ன கூறப்பட்டதென்று காண்கிறோம்... காயீன் ஆபேலைக் கொன்று போட்டதனால் ஏவாளுக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டான். நான் படிக்கையில் இதைக் கவனியுங்கள்.
ஆதாம் நூற்று முப்பது வயதான போது, தன் சாயலாகத் தன் ரூபத்தின்படியே ஒரு குமாரனைப் பெற்று அவனுக்குச் சேத் என்று பேரிட்டான்.
ஆதாம் சேத்தை பெற்றபின் எண்ணூறு வருஷம் உயிரோடிருந்து. குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
ஆதாம் உயிரோடிருந்த நாளெல்லாம் தொளாயிரத்து முப்பது வருஷம்; அவன் மரித்தான்.
சேத் நூற்றைந்து வயதான போது ஏனோசைப் பெற்றான். (இப்படி வழிவழியாக போய், ஏனோக்கு ஆதாமுக்கு ஏழாந் தலைமுறையாய் பிறக்கிறான்).
இப்பொழுது, அது லூக்காவில் எங்குள்ளது என்று எனக்கு ஞாபகமில்லை. திருமதி வுட், அந்த பாகத்தையும் கூட குறித்து வைத்திருக்கிறீர்களா? அவர்களும் நானும்... அன்றொரு நாள் அவர்களுக்கு நான் காண்பித்துக் கொண்டிருந்தேன்... என்ன சொல்லுகிறீர்கள்? (சகோ. பிரன்ஹாம் சகோதரி வுட்டுடன் உரையாடுகிறார் - ஆசி). சகோதரி வுட், நீங்கள் கூறுவது சரி. அதை நாங்கள் அவர்களுடைய வேதாகமத்தில் கோடிட்டு வைத்திருந்தோம், நான் அவர்களுக்குக் காண்பித்துக் கொண்டிருந்த போது. இதோ அது உள்ளது, வம்ச வரலாறு. சரி.
329. இப்பொழுது, இங்கு 'நீங்கள் கவனிப்பீர்களானால்... லூக்கா 3ம் அதிகாரத்தில் அதையே நாம் காண்கிறோம்... “நோவா லாமேக்கின் குமாரன். லாமேக்கு மெத்தூசலாவின் குமாரன்; மெத்தூசலா ஏனோக்கின் குமாரன்; ஏனோக்கு யாரேதின் குமாரன்; யாரேத் மகலாலெயேலின் குமாரன்; மகலாலெயேல் கேனானின் குமாரன்; கேனான் ஏனோஸின் குமாரன்; ஏனோஸ் சேத்தின் குமாரன்; சேத் ஆதாமின் குமாரன்; ஆதாம் தேவனால் உண்டானவன்” (லூக். 3:36-38) காயீன் எங்கே இங்கு காணப்படுகிறான்? முதற்பேறான காயீன் எங்கே? சேஷ்ட புத்திர பாகம் அவனுக்குத்தான் சொந்தம்; அவன் எங்கிருந்து வந்தான்? அவன் சாத்தானின் வித்து, தேவனுடைய வித்தல்ல, ஆதாமின் வித்தும் அல்ல. ஏனெனில் ஆதாமின் குமாரனின் பெயர் சேத். சர்ப்பத்தின் வித்தாகிய காயீன் ஆபிரகாமின் முதற்பேறானவனை கொன்று போட்டான், அது சர்ப்பம் அவனுடைய மற்றொரு குமாரனாகிய இயேசுவை கொன்று போட்டதற்கு முன்னடையாளமாகவும் சாயலாகவும் உள்ளது. வம்ச வரலாற்றில் சேத் அவனுடைய இடத்தை எடுத்துக் கொண்டான். அது உயிர்த்தெழுதலைக் குறிக்கிறது. தேவனுடைய வம்ச வரலாறு இவ்விதம் தொடர்ந்து கொண்டே செல்லுகிறது.
330. யாராகிலும் ஒருவர் அவனை அந்த வம்ச வரலாற்றில் பொருத்தி, அவன் சர்ப்பத்தின் வித்தல்ல என்று கூறுவதைக் காண விரும்புகிறேன். அவன் தேவனுடைய வம்ச வரலாற்றில் அங்கீ கரிக்கப்படவில்லை. மனித வம்ச வரலாற்றிலும் ஆதாமின் வம்ச வரலாற்றிலும் மற்ற வம்ச வரலாற்றுகளிலும் அங்கீகரிக்கப்பட வில்லை. அது சரியா? இதை எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள். "ஆமென்" என்று சொல்லுங்கள் (சபையோர் "ஆமென்” என்கின்றனர் - ஆசி). நிச்சயமாக அவன் அதில் கிடையாது. அவன் சர்ப்பத்தின் வித்தேயன்றி ஆதாமின் வித்தல்ல.
331. ஏவாள் அவன் ஆதாமின் குமாரன் என்றாள். அவன் ஆதாமின் குமாரன் அல்ல. அவள், "கர்த்தரால் நான் ஒரு மனுஷனைப் பெற்றேன்" என்றாள். அவள் அவ்விதம் தான் கூற வேண்டும். அது ஒரு வித்து. ஆனால் அது சர்ப்பத்தின் வித்து. பாருங்கள்?
332. நடந்த இந்த இனசேர்க்கை செயலை நீக்கிப்போட, அவர் ஒரு கன்னிகையின் மூலம் வர வேண்டியதாயிருந்தது. ஆதாம் இங்கு பூமியில் வைக்கப்பட்டான். ஆனால் அவன் தகப்பனாயிருக்க வேண்டும் என்பதை அவன் ஒரு போதும் கண்டு கொள்ளவேயில்லை. நான் என்ன கூறுகிறேன் என்று உங்களுக்கு விளங்குகிறதா? சாத்தான் இதை அறிந்தவனாய். ஆதாம் ஏவாளை அடைவதற்கு முன்பு அவன் அடைந்து விட்டான். அங்கு தான் முழு காரியமும் இன்று அடங்கியுள்ளது. சகோதரனே, அதுதான் விவாகமும் விவாகரத்தும் போன்றவைகளையும் மற்றவைகளையும் இன்று பிரச்சனைக்குள் ஆழ்த்தியுள்ளது. அது மிகவும் பரிதாபகரமானது. பாருங்கள்? ஆனால் நான்... தேவன் ஒரு வழியை உண்டு பண்ணி விட்டார், அதற்காக நாம் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம்.
333. நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? அவர் அற்புதமானவர் அல்லவா? இப்பொழுது. சர்ப்பத்தின் வித்து என்பது சரியா? ஒலிநாடாவைக் கேட்கிற யாராகிலும் இதைக்குறித்து விவாதிக்க நான் பயந்து விட்டேன் என்று நினைக்கக் கூடும் என்று நான் எண்ணினேன். பாருங்கள்? அவர்கள், "பாருங்கள், அவர் இரண்டு முறை அதைக் குறித்து ஒன்றும் கூறாமல் கடந்து மற்ற கேள்விகளுக்கு போய் விட்டார். அதை விவாதிக்க அவருக்கு பயம்" என்று சொல்லக் கூடும். நாங்கள் அப்படிப்பட்டவர் அல்ல. தேவன் அதில் உள்ள வரைக்கும், அது சரியானதே.
உங்களுக்கு என்னவென்று தெரியுமா, அன்றொரு நாள் அந்த கழுகின் செட்டைகளில் உள்ள உணர்வை நான் கவனித்துக் கொண்டிருந்தேன், அது உங்களுக்குத் தெரியும். நான், “உனக்கு என்னை பயமில்லையா?” என்று நினைத்துக் கொண்டேன். நான் துப்பாக்கியை நிறுத்தி வைத்திருந்தேன். நான், "என்னால் உன்னை சுட்டு விழ்த்த முடியும்" என்றேன். அதை என்னால் சுட்டு வீழ்த்த முடியும் என்று அது அறிந்திருந்தது; நான் அந்த துப்பாக்கிக்கு அதிக தூரத்தில் இருந்தேன். நான், “உனக்கு பயமாயிருக்கிறதா?" என்றேன். அது தன் பெரிய கண்களினால் என்னை முறைத்துப் பார்த்தது. அங்கு ஒரு சிறு குரங்கு உட்கார்ந்து கொண்டு "சா, சா, சா, சா, சா; உன்னை நான் துண்டு துண்டாக கிழித்து விடுவேன் என்று சத்தமிட்டுக் கொண்டிருந்தது. அந்த கழுகு அந்த குரங்கு போட்ட சத்தத்துக்கு எந்த கவனமும் செலுத்தவில்லை. அது போடும் சத்தத்தைக் கேட்டு அதற்கு அலுத்துப்போனது. எனவே சற்று கழிந்து, அது தன் செட்டைகளை விரித்து ஒரு சுற்று சுற்றி வந்தது அதன் செட்டைகளை எவ்விதம் உபயோகிப்பது என்பதை அது அறிந்திருந்தது. அது பறந்து, கண்ணுக்கெட்டாத உயரத்துக்கு சென்று விட்டது. பாருங்கள்? அது ஒரு சிறு உருவமாக, ஒரு சிறு புள்ளி போல் ஆவதை நான் கவனித்துக் கொண்டேயிருந்தேன்.
334. சகோ. ஃபிரட், நான் உங்களுக்குக் காண்பித்தேன் என்று நினைக்கிறேன். சகோ ஃபிரட் பின்னால் உட்கார்ந்து கொண்டு "ஆமென்” என்று சற்று முன்பு சத்தமிட்ட போது, அவர் அங்கு உட்கார்ந்திருப்பதை கண்டேன். மலையின் உச்சியில் இது நடந்த இடத்தை உங்களுக்கும் சகோ. வுட்டுக்கும் அவர் இப்பொழுது எங்கிருந்தாலும் காண்பித்தேன் என்று நினைக்கிறேன். அந்த கழுகை நான் கண்டேன்... புயல் அடித்ததனால் அது இறங்கி வருவதற்கு நிர்ப்பந்தம் உண்டானது. நான் அங்கிருந்த ஒரு மரத்தின் பின்னால் நின்று கொண்டிருந்தேன்.
335. சற்று கழிந்து நான் கலைமான் வேட்டையாடினேன். அது அக்டோபர் மாதம், பனி பெய்து கொண்டிருந்தது. இங்குள்ள சகோ. ஜானும் மற்றவர்களும் சென்ற இலையுதிர் காலத்தின் போது எங்களுடன் அங்கு வந்திருந்தனர். அந்த இடம் கோரல் சிகரத்தின் உச்சியில் இருக்கிறது.
336. அங்கு நான் ஒரு மரத்தின் பின்னால் நின்று கொண்டிருந்தேன். சிறிது பனி பெய்கிறது, சிறிது மழை பெய்கிறதுமாயிருந்தது. அங்கு நான் நின்று கொண்டிருந்தேன். அது கீழே இறங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அது அங்கு பறந்து கெண்டிருந்தது. மிகப் பெரிய உருவம் படைத்த பழுப்பு நிறக் கழுகு. அது ஒரிடத்தில் உட்கார்ந்து சுற்று முற்றும் பார்த்தது நான், "நல்லது..." என்று எண்ணினேன். நான் மிகவும் நல்ல ஒரு தருணம் அனுபவித்துக் கொண்டேயிருந்தேன். நான் “கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அல்லேலூயா" என்று கூச்சலிட்டுக் கொண்டிருந்தேன். நான் மரங்களைச் சுற்றி சுற்றி வந்து அவ்வாறு கூச்சலிட்டுக் கொண்டிருந்தேன். நான் அங்கு பார்த்தேன். அப்பொழுது ஒநாய் ஊளையிடும் சத்தத்தைக் கேட்டேன். அவைகள் எவ்வாறு ஊளையிடும் என்று உங்களுக்குத் தெரியும்.
337. சென்ற ஆண்டு அங்கு நான் சென்றிருந்த போது, மழை பெய்யத் தொடங்குவதற்கு சற்று முன்பு, அவைகள் ஊளையிடத்தொடங்கின; அந்த ஊளையிடும் சத்தத்தைக் கேட்க எனக்கு மிகவும் பிரியம்.
338. மற்ற பக்கத்தில் கலைமான் "வீஹீ" என்று இடும் சத்தத்தை நான் கேட்டேன் (சகோ. பிரன்ஹாம் கலைமான் சத்தமிடுவது போல சத்தமிடுகிறார் - ஆசி). அவை அப்படித்தான் சத்தமிடும். உடனே அதன் ஜோடி மற்ற பக்கத்தில் சத்தமிட்டு பதிலளிக்கும். (அடுத்த வாரம், அதற்கும் அடுத்த வாரம், கர்த்தருக்குச் சித்தமானால் அவைகளை வேட்டையாடச் செல்வேன்). எனவே, இச்சத்தத்தை அங்கு கேட்கும் போது, ஓ அங்கு தெய்வீகப் பிரசன்னமாக இருக்கும். ஓ, நான்... அங்கு தான் என் ஆலயம் உள்ளது. அங்கு நான் அவருடன் உரையாடி விட்டு, பிறகு கீழே இறங்கி வந்து, உங்களிடம் பேசுகிறேன். பாருங்கள்?
339. அங்கு மேலே, ஓ, அது மிகவும் அற்புதமாயுள்ளது, அங்கு நான் நன்றாக இளைப்பாறுகிறேன். அங்கு நின்று கொண்டு நான், "ஓ, தேவனே...” என்று எண்ணினேன். நான் பார்த்த போது, மழை பெய்யத் தொடங்கினது, பசுமையானவைகளின் மேல் பனி உறைந்திருந்தது, ஒரு வானவில் கோரல் சிகரத்திலிருந்து ஆட்டு மலை வரைக்கும் வானத்தில் அவ்வளவு பெரிதாக வியாபித்திருந்தது. "ஓ, தேவனே ,இங்கு பாரும், உம்" என்று எண்ணினேன். நான், “இதோ நீர் அல்பாவும் ஓமெகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறீர். இதோ அது இங்கே அங்கே கீழே வந்திருக்கிறது. நீர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறீர், நீரே ஏழு சபையின் காலங்கள், ஏழு பொன் குத்து விளக்குகள். அதிலெல்லாம் நீர் இருக்கிறீர். தேவனே, நீர் எவ்வளவு அற்புதமானவர்" என்று எண்ணினேன்.
340. நான் இவ்வாறு சத்தமிட்டுக் கொண்டே என் துப்பாக்கியை கீழே வைத்தேன். நான் மரத்தைச் சுற்றி சுற்றி வந்து "தேவனுக்கு மகிமை! கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!" என்று சத்தமிட்டுக் கொண்டிருந்தேன். நான் எனக்குள் அருமையான தருணம் அனுபவித்துக் கொண்டிருந்தேன், கர்த்தரும் நானும் மட்டுமே.
341. சிறிது நேரம் கழித்து அந்த கழுகு புதர்களுக்கு வெளியே வந்து என்னை முறைத்தது. "என்ன நான் சத்தமிடுவது உனக்குப் பிரியமில்லையா?" என்று எண்ணினேன். நான், "கழுகை உண்டாக்கின அதே தேவனைத் தான் நான் தொழுது கொண்டிருக்கிறேன்" என்றேன். பாருங்கள்? அது தன் பெரிய சாம்பல் நிறக் கண்களை சிமிட்டி, அவ்விதம் சத்தமிட்டுக் கொண்டிருக்கிற என்னை உற்றுப் பார்த்தது.
342. ஒரு சிறு அணில் (யாராகிலும் எப்பொழுதாகிலும் மலைகளில் வேட்டையாடி இருந்தால், அதுதான் காட்டுக்கு போலீஸ் காரன்) அங்கு ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்துக்கு தாவிக் கொண்டிருந்தது (பெரிதாக ஒன்றும் செய்வதற்கான ஒரு அமைப்பை அது பெற்றிருக்கவில்லை, ஆனால், ஓ, என்ன கூச்சல்). அது மேலும் கீழும் தாவிக் கொண்டு, “யா, யா, யா, யா, யா" என்று தொடர்ந்து சத்தமிட்டுக் கொண்டிருந்தது.
343. கழுகு அதை கவனித்துக் கொண்டிருந்தது; அதன் பிறகு அது என்னை உற்றுப் பார்த்தது. நான், “என் தேவனே, அப்படிப்பட்ட ஒன்றிற்காக நான் துதிப்பதை நீர் நிறுத்தின காரணம் என்ன? உம்மை நான் தொழுது கொண்டிருந்தேனே. அந்த கழுகில் நான் ஒன்றைக் காண வேண்டுமென்று நீர் விரும்புகிறீரா? அப்படியானால் நான் அதை ஆழ்ந்து படிப்பேன். அல்லது அணிலைக் கண்டு நான் ஒன்றை அறிந்து கொள்ள வேண்டுமா?" என்று கேட்டேன். அங்கு நான் நின்று கொண்டு இரண்டையும் கூர்ந்து கவனித்தேன். "சரி, இந்த கழுகை சற்று ஆராய்ந்து பார்க்கலாம்” என்று எண்ணினேன். அதில் நான் கண்ட ஒரு காரியம், அதற்கு பயமேயில்லை. அது எனக்குப் பிரியம், அது எதற்கும் பயப்படுவதேயில்லை. அந்த பெரிய பறவை அங்கு நின்று கொண்டிருந்தது. நான் அதனிடம் "உனக்குத் தெரியுமா?" என்றேன். (என் துப்பாக்கி ஒரு மரத்தில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது). நான், “உன்னை என்னால் சுட்டு விழ்த்த முடியும் என்று உனக்குத் தெரியுமல்லவா?" என்றேன். அதற்கு அதைக் காட்டிலும் அதிகம் தெரியும். அதற்கு ஒரு காரியம் தெரியும், அதாவது அதை நான் செய்ய மாட்டேன் என்று. அதை நான் அதிகமாக மனதில் பாராட்டிக் கொண்டிருந்தேன். பாருங்கள்? அது அங்கு நின்று கொண்டிருந்தது, அது சிறிதும் கூட பயப்படவில்லை.
344. “உன்னை என்னால் சுட்டு வீழ்த்த முடியும்" என்று எண்ணினேன். இப்பொழுது, அதை நான் கவனித்துக் கொண்டே வந்தேன். அது என்னை இப்படி உற்றுப் பார்க்கும், பிறகு செட்டைகளை இப்படி விரிக்கும், அது உங்களுக்குத் தெரியும். கழுகுகள் தங்கள் செட்டைகளை எப்படி விரிக்குமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். பெரிய அகலமான செட்டைகள், இவ்வளவு நீளம். அது பெரிய உருவம் படைத்ததாயிருந்தது. அது அங்கு உட்கார்ந்து கொண்டிருந்தது. அதை நான் உற்று நோக்கினேன். (இது இவைகளை நான் அறிந்து கொள்வதற்கு அநேக ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம், ஒருக்கால் இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருக்கலாம்).
345. அதை நான் கவனித்தேன்; சிறிது கழிந்து அதை நான் பார்த்தேன்.“ அது என்ன அது என்ன... அதற்கு பயமேயில்லை, அதை நான் பாராட்டுகிறேன். ஆனால் அந்த கழுகுக்கு என்ன தேவ அம்சம் உள்ளது?" என்று நினைத்துக் கொண்டேன். அதன் பெரிய அலகு இப்படி வெளியே வந்து, அதன் கண்களும் பெரிதாயுள்ளன. நான், “அது உண்மையில் ஒரு கம்பீரமான பறவையே” என்று எண்ணினேன்.
346. இப்பொழுது. யாருமே. ஒரு பருந்து அதைப் பின்தொடர முயன்றால், அது சுக்குநூறாகிவிடும். அதை எதுவுமே பின் தொடர முடியாது. இல்லை, இல்லை! அதை ஒரு விமானம்தான் செய்ய முடியும். அது மிகவும் உயர பறக்கிறது. பிறகு, அதன் கண்களால் அது உயரத்திலிருந்து தரை வரைக்கும் காண முடியும், அவ்வளவு தொலைவிலிருந்து.
347. இப்பொழுது யேகோவா தம் தீர்க்கதரிசிகளை கழுகுகளுக்கு ஒப்பிடுகிறார் (பாருங்கள்?) அவர் அவர்களை இப்படி உயர தூக்குகிறார். அவர்கள் விசேஷமாக உண்டாக்கப்பட்டிருக்க வேண்டும். நாம் பார்ப்போம். முன் குறிக்கப்பட்டு, அந்த நோக்கத்துக்காக பிறந்து (பாருங்கள்?), இப்படி மேலே உயர்த்தப்படுகின்றனர். அதன்பிறகு நீங்கள்... நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என்று உங்களால் காண முடியாமல் போனால், அங்கு நீங்கள் போவதனால் என்ன பயன்? பாருங்கள்? நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று அறியாமல் போனால் அந்த இடத்துக்கு போவதனால் என்ன பயன்? பாருங்கள், பாருங்கள்?
348. நீங்கள் மேலும் கீழும் குதித்து, கூச்சலிட்டு, அந்நிய பாஷைகள் பேசினாலும், இதெல்லாம் என்னவென்று நீங்கள் அறியாமல் போனால் என்ன பயன்? பாருங்கள், பாருங்கள்? நீங்கள் அங்குள்ளபோது, நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். பாருங்கள்?
349. எனவே, அந்த கழுகை நான் கவனித்துக் கொண்டிருந்தேன். அது அங்கு அசைந்து கொண்டிருந்தது. அதை நான் கண்டு ரசித்தேன்; அது மிகவும் அழகான பறவை. இருப்பினும், அது ஒருக்கால் நான் கொன்ற மான் மாம்சத்தைப் புசிக்கும் என்று எண்ணினேன். அதை நான் கவனித்துக் கொண்டேயிருந்தேன். சற்று கழிந்து நான், "உங்களுக்குத் தெரியுமா? அது என்ன..." என்று எண்ணினேன்.
350. சிறிது கழிந்து அதற்கு களைப்புண்டானது. அது என்னைப் பார்த்துக் கொண்டிருந்ததனால் அதற்கு களைப்புண்டாயிற்று என்று எனக்குத் தோன்றவில்லை. அங்கு உட்கார்ந்து கொண்டிருந்த அந்த குரங்கு போட்ட சத்தத்தைக் கேட்டு தான் அதற்கு அலுப்பு உண்டாயிற்று என்று எனக்குத் தோன்றினது. இன்று பாளையத்தில் நம்மிடையே அத்தகைய அநேக குரங்குகள் உள்ளன. பாருங்கள்? "சா, சா, சா! அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன! தெய்வீக சுகம் பெறுதல் என்பது கிடையாது, இவையெல்லாம் இப்பொழுது கிடையாது" பாருங்கள்? பூமிக்குரிய அந்த குரங்கு மரத்தின் கிளையில் உட்கார்ந்து கொண்டு, "நீ இதை சேர்ந்திருக்க வேண்டும். நாங்கள் - நாங்கள் - நாங்கள்தான்." என்று சத்தமிட்டுக் கொண்டிருக்கிறது. பாருங்கள், பாருங்கள். அங்கு உட்கார்ந்து ஓயாமல் சத்தமிட்டுக் கொண்டிருக்கிறது. ஓ, அதன் உடல் அசைந்தது, அது தன் உடலை அதிகமாக குலுக்கினது.
351. குரங்கு இடும் சத்தத்தைக் கேட்டு அதற்கு அலுத்துப் போனது. அது அங்கிருந்து ஒரு பெரிய தாவு தாவினது, அப்படிச் செய்தபோது அது உட்கார்ந்து கொண்டிருந்த மரக்கிளையை அது அசைத்தது. மரக்கிளை அசைந்தது. அது அங்கிருந்து பறந்து சென்றது. பாருங்கள், அது செட்டைகளை அடித்துக் கொண்டு அந்த மரத்திலிருந்த இடைவெளி வழியாய் பறந்து சென்றது. அது அவ்விதம் செய்த போது, அதை நான் கவனித்தேன். பாருங்கள்? அது பயப்படவேயில்லை. ஏனெனில் தேவனால் அதற்கு அளிக்கப்பட்ட அந்த செட்டைகளின் பிரசன்னத்தை அதனால் உணர முடிந்தது. அந்த செட்டைகள் அதை எந்த விதமான ஆபத்திலிருந்தும் விலக்கிக் கொண்டு செல்லும் என்பதை அது அறிந்திருந்தது. பாருங்கள்?
352. எனவே, அந்த விதமாகத்தான் நாமும் உணர விரும்புகிறோம். இதுதான் வார்த்தை; இந்த வார்த்தையை எழுதினவரே என் செட்டைகள். வார்த்தையைக் குறித்து எனக்கு பயமில்லை; அது உங்களை எந்த ஆபத்தின் வழியாகவும் கொண்டு செல்லும். அது ஒரு பட்டயம், அது வெட்டி வழியை உண்டாக்கிக் கொண்டே செல்லும். அதைக் குறித்து நீங்கள் கவலைப்படவே வேண்டாம். பாருங்கள்?
353. அதன்பிறகு, அதை நான் கவனித்தேன். அது செட்டைகளை அடிக்கவில்லை, அது செட்டைகளை விரித்தது. பாருங்கள்? ஒவ்வொரு முறையும் காற்று அடித்த போது, அது உயர உயர சென்றது. அங்கு நான் நின்று கொண்டு, கைகளை கட்டின வண்ணமாய், அது சிறு புள்ளி போல் ஆகி என்னால் காண முடியாமல் போனவரைக்கும் அதையே உற்று நோக்கிக் கொண்டிருந்தேன். "தேவனே, அதுதான். ஓடிப் போய் இதை சேர்ந்துகொள், அதை சேர்ந்து கொள், இதை, அதை, மற்றதை செய் என்றல்ல அது; அது செட்டைகளை விரித்தல் மட்டுமே (பாருங்கள்?); விசுவாசம் என்னும் உங்கள் செட்டைகளை தேவனுடைய வார்த்தைக்குள் எவ்விதம் பொருத்துவது என்பதை அறிந்திருந்து, இங்கும் அங்குமுள்ள இந்த அர்த்தமற்ற வீண் பேச்சுகள் அனைத்தினின்றும் பறந்து செல்வதே" என்று நினைத்துக் கொண்டேன். ஆம்! "வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகள் ஒருக்காலும் ஒழிந்து போவதில்லை"
354. இன்று பிற்பகல் உங்களில் இருபது பேர் வரவிருக்கின்றனர். பிற்பகலில் தனிப்பட்ட பேட்டி உள்ள நீங்கள் பில்லியுடன் தொடர்பு கொள்ளுங்கள். ஏனெனில், நான் அவர்கள் அனைவரையும் பேட்டி கண்டு முடிப்பதற்கென, அவர்கள் சிறிது நேரத்தோடே தொடங்கப் போகிறார்கள் என்று நினைக்கிறேன். என்னால் முடியும்மானால், அவர்கள் ஒவ்வொருவரையும் என்னாலான வரையில் பேட்டி கண்டு முடிக்க விரும்புகிறேன். இதை நான் ஏன் செய்தேன் என்றால்... பில்லிக்கு இது தெரியாது (பாருங்கள்?), ஆனால் இன்று காலை நான் கண்ட ஏறக்குறைய இருபது தரிசனங்களின் விளைவாக அது என்னவாயிருப்பினும் என் சிந்தை இறுக்கமடைந்திருந்தது. அது உங்களை ஒரு விதமான... பில்லி என்னிடம், "நீங்கள் ஏன் வெளியே போய் சிறிது இளைப்பாறி, அங்கு சில கேள்விகளுக்கு பதிலளிக்கக் கூடாது?" என்றான்.
நான், "சகோ. நெவில் தன் செய்தியை ஆயத்தமாக வைத்திருப்பாரே" என்றேன். அவன், "நான் போய் அவரிடம் சொல்கிறேன்" என்று சொல்லி புறப்பட்டுப் போனான்.
சகோ. நெவில், “வாருங்கள்" என்றார். எனவே, நான் எழுந்து இங்கு வந்தேன். சிலர் இந்த பிற்பகலுக்காக காத்திருக்கின்றனர். உங்களை நான் 1.00 மணி வரைக்கும் பிடித்து வைத்துக் கொண்டதைக் ' குறித்து வருந்துகிறேன். ஆனால் நான் நாளை கழித்து நான் அரிசோனாவுக்குத் திரும்பி செல்வேன் என்று நினைக்கிறேன்.