11. இல்லை! “மணவாட்டி முடிவில் மேற்கில் செல்வாளா?” எனக்குத் தெரிந்த வரையில் இல்லை; மணவாட்டி உலகின் எல்லா பாகங்களிலும் இருக்கிறாள். இதை புரிந்து கொண்ட ஒவ்வொருவரும் “ஆமென்” என்று சொல்லுங்கள் (சபையோர் “ஆமென்” என்கின்றனர் - ஆசி).
நீங்கள் எங்கிருந்த போதிலும், எங்கு மரித்த போதிலும், அது என்னவாயிருப்பினும், நீங்கள் கிறிஸ்துவுக்குள் மரித்தால், தேவன் உங்களை அவருடன் கூட கொண்டு வருவார். நீங்கள் சுட்டெரிக்கப்பட்டாலும், மிருகங்களால் புசிக்கப்பட்டாலும், அழிக்கப்பட்டாலும், அது எப்படியிருந்தாலும், கிறிஸ்து வரும்போது தேவன் உங்களை அவருடன் கூட கொண்டு வருவார் நீங்கள் மேற்கிலோ அல்லது வேறெங்கோ கூட வேண்டிய அவசியமில்லை கர்த்தர் உங்களை எங்கு நடத்துகிறாரோ...
12. இருப்பினும், நீங்கள் மேற்கில் செல்ல வேண்டுமென்று உங்களுக்குத் தோன்றினால், நான் செல்வதற்கு முன்பு இதை தெளிவாக்க விரும்புகிறேன். இப்பொழுது... (அவர்கள் இந்த செய்தியை ஒலிநாடாவில் பதிவு செய்கின்றனரா? செய்கின்றனரா சரி), நீங்கள் எங்கு செல்ல வேண்டுமென்று நான் உங்களிடம் கூற வேண்டியதில்லை. நீங்கள் மேற்கில் செல்ல வேண்டுமென்று உங்களுக்குத் தோன்றினால், மேற்கில் வாருங்கள். நீங்கள் கிழக்கில், வடக்கில், மேற்கில், தெற்கில் செல்ல விரும்பினால் கர்த்தர் உங்களை எங்கு நடத்துகிறாரோ, அங்கு செல்லுங்கள். இதை புரிந்து கொண்ட ஒவ்வொருவரும் “ஆமென்” என்று சொல்லுங்கள் (சபையோர் “ஆமென்” என்கின்றனர் - ஆசி).
13. எங்கு போகக் கூடாது என்று நான் யாரிடமும் கூற முனைவதில்லை. நான் தற்காலிகமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அரிசோனாவிலுள்ள டூசானுக்கு நீங்கள் வர விரும்பினால்... இன்று காலையில் உங்களிடம் நான் கூறினது போல, எனக்கு போவதற்கு வீடு இல்லாமல், வீட்டிற்கு செல்ல வேண்டுமெனும் எண்ணம் என்னில் உள்ளது. வீடு என்று அழைக்க எனக்கு ஓரிடம் இருக்குமானால் நலமாயிருக்கும்... இன்றிரவு, ஓரிடத்துக்கு நான் பதினாயிரம் டாலர்கள் கொடுத்து, “இதை என் வீடு என்று அழைக்க விரும்புகிறேன்” என்று கூற முடிந்தால், நான் தாராளமாக அதை கொடுத்து விடுவேன். எனக்கு போக்கிடமில்லை.
சகோ. ஃபரீமான், என்னை நீர் சிறு வயது முதற்கொண்டு அறிந்திருக்கிறீர் என்று நினைக்கிறேன்; நான் சுற்றித் திரிகின்றவன். நீங்கள் சுற்றித்திரிகின்றவர்களாக இருக்க வேண்டாம்: நீங்கள் ஆவல் கொள்ளும் ஏதாவதொரு இடத்தை கண்டு பிடித்து அங்கு தங்கியிருங்கள்; கர்த்தராகிய இயேசுவுக்காக காத்திருங்கள்.
14. ஆனால், இப்பொழுது நான் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மேற்கிலுள்ள அரிசோனாவிலுள்ள டூசானுக்கு நீங்கள் வர விரும்பினால், நீங்கள் வரவேற்கப்படுகின்றீர்கள்; உங்களை அங்கு கொண்டிருப்பதில் எனக்கு மகிழ்ச்சியாயிருக்கும். நீங்கள் என் சகோதரனும் சகோதரியுமாய் இருக்கின்றீர்கள். உங்களுக்கு உதவி செய்ய நான் உலகில் எதையும் செய்வேன். அங்கு வந்திருக்கிற உங்கள் அனைவருக்கும் என்னாலான அனைத்தையும் செய்து உங்களை வரவேற்று.” எனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் உங்களுக்குக் காண்பித்து, உங்களை” சுற்றிலும் கொண்டு சென்று, என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்திருக்கிறேன், நீங்கள் எப்பொழுதும் வரவேற்கப்படுகிறீர்கள்.
15. ஆனால், மணவாட்டி - அரிசோனாவிலுள்ள டூசானிலிருந்து மட்டும் எடுக்கப்படுவாள் என்று எண்ணி, அந்த நிபந்தனையை நிறைவேற்றுவதற்க்கு. அங்கு வருவீர்களானால், நீங்கள் தவறு செய்கின்றவர்களாயிருப்பீர்கள். அதற்காக நீங்கள் அங்கு வராதீர்கள், அதற்காக நீங்கள் அங்கு வராதீர்கள், ஏனெனில் அது தவறு. அது சரியல்ல.