16. இப்பொழுது, வெளிப்படுத்தல் 12ம் அதிகாரம்... கர்த்தர் எனக்கு வெளிப்படுத்துகின்ற அல்லது என்னிடம் பேசுகின்ற ஒரு காரியம் என்னவெனில்... இப்பொழுது தான் நான் தரிசனங்களைக் கண்டு விட்டு வந்திருக்கிறேன் (பாருங்கள்?) அதிலிருந்து விலகியிருப்பது மிகவும் கடினமான செயல். பாருங்கள்? மேற்கில் செல்வதைக் குறித்து இன்னும் அதிகமாக நான் கூற வேண்டுமென்று அவர் என்னை மேலும் வற்புறுத்துவதாகத் தோன்றுகிறது.
17. இப்பொழுது, நான் ஏற்கனவே உங்களிடம் கூறினபடி, நான் அங்கு இருக்க வேண்டும் என்பதற்காக அங்கு இருக்கவில்லை. அங்கு போவதற்காக நான் நடத்தப்பட்டபடியால் அங்கு இருக்கிறேன். அங்கு தங்கி அதை என் இருப்பிடமாக்கிக் கொள்வது தவறு என்று எண்ணுகிறேன். தேவன் என்னை அங்கு அனுப்பின நோக்கம் நிறைவேறும் வரைக்கும் நான் அங்கு குறுகிய காலம் தங்கியிருக்க வேண்டுமென்று எண்ணுகிறேன். அங்கு நான் ஏன் செல்கிறேன் என்று என்னால் உங்களிடம் இங்கு கூற முடியாது. ஆனால் அங்கு நான் போக வேண்டும் என்பதற்காக நான் போகமாட்டேன்.
18. அன்றொரு நாள் இவ்விதம். ஒரு கேள்வி கேட்கப் பட்டது: “நீர் முதல் முறையாக அரிசோனாவுக்கு ஏன் சென்றீர் என்று எங்களுக்குத் தெரியும், அப்பொழுது தூதர்கள் பிரத்தியட்சமாயினர். நீர் ஏன் இரண்டாம் முறை அங்கு திரும்பச்சென்றீர்?” அந்த கேள்வி படிக்கப்பட்டது உங்களுக்கு ஞாபகமுள்ளதா?
19. நான் அரிசோனாவுக்குச் சென்று திரும்பி வந்து அங்கு டாக்டர் லீ வேயிலுக்கு முன்பாக நானும் என் மனைவியும் உட்கார்ந்து கொண்டிருந்த போது (அவர் இப்பொழுது கட்டிடத்தில் எங்கோ இருக்கிறார் என்று நினைக்கிறேன்) நடந்தது உங்களுக்கு ஞாபகமுள்ளதா? நான் அரிசோனாவைக் குறித்தும் நாங்கள் இங்கு தங்குவதைக் குறித்தும் பேசிக் கொண்டிருந்த போது ஒரு கையுறுப்பு சுவற்றில் தோன்றி, வெளிச்சமும் தோன்றி, “அரி சோனாவுக்குத் திரும்பிச்செல்” என்று எழுதினது. எத்தனை பேருக்கு அது ஞாபகமுள்ளது? ஆகையால் தான் அங்கு நான் மறுபடியும் சென்றிருக்கிறேன்: நான் ஏன் அங்கு திரும்பச்செல்ல வேண்டும் என்று அறியாதவனாய். அங்கு அடைந்த போது, நான் எதற்காகத் திரும்பச் செல்ல வேண்டும் என்பதை அவர் எனக்கு வெளிப்படுத்தினார். அதை நான் சொன்னால், சாத்தான் அதை தடுத்துப் போடுவான். ஆனால் என் இருதயத்தில் உள்ளதை அவன் அறியமாட்டான். அவன் வார்த்தை அல்ல, எனவே அவனால் இருதயத்தில் உள்ளதை அறிந்து கொள்ள முடியாது. அதை நான் “வாய் விட்டுக்கூறும் போது, அவன் அதை கேட்கிறான். எனவே இப்பொழுது, அதை ஞாபகம் கொள்ளுங்கள்.
20. இப்பொழுது, அன்றொரு நாள் நான் கூறின போது, நான் அதை ஒருவாறு... ஒருக்கால் உங்களுக்கு தவறான அபிப்பிராயம் ஏற்பட்டிருக்கக்கூடும். நான், “நீங்கள் அரிசோனாவுக்கு வராதீர்கள்” என்று சொன்ன போது, நீங்கள் வரக்கூடாது என்னும் அர்த்தத்தில் நான் கூறவில்லை. நான் என்ன அர்த்தத்தில் கூறினேன் என்றால், நீங்கள் அங்கு வருவதற்கு நடத்தப்பட்டால், முன்சென்று அதை செய்யுங்கள். நீங்கள் கலிபோர்னியா: அரிசோனா, அல்லது வேறெங்கு நடத்தப்பட்டாலும். ஆனால் நீங்கள். “சகோ. பிரன்ஹாமே, நீங்கள் அங்கு தங்கி வார்த்தையைப் பிரசங்கிக்கப் போகிறீர்கள் என்று நினைக்கிறேன், ஆகையால்தான் நான் அங்கு செல்கிறேன்” என்பீர்களானால், நீங்கள் அங்கு தவறு செய்கின்றீர்கள் என்று எண்ணுகிறேன். பாருங்கள்? என் பிரசங்கம் எங்கிருக்குமென்றால், அது இந்த கூடாரத்தில் தான்; இதுதான் அந்த இடம்.
21. எனக்கு அரிசோனாவில் ஒரு ஆராதனையும் கூட இல்லை. நான் ஒவ்வொரு முறையும் சில மணி நேரங்கள் மட்டுமே அங்கு இருக்கிறேன். எனக்கு... கிறிஸ்துமஸுக்குப் பிறகு எனக்கு பீனிக்ஸில் வர்த்தகர்களின் கூட்டம் ஒன்றுள்ளது. இதுவே இவ்வாண்டுக்கு அங்கு முதல் கூட்டம். அவ்வளவு தான் எனக்குள்ளது. நான் வாக்கு கொடுத்திருந்தேன்; வேறொரு கூட்டம் எதுவும் எனக்கில்லை.
22. என்னுடைய அடுத்த கூட்டம், எனக்குத் தெரிந்த வரையில், எய்த் அண்டு பென் தெருவிலுள்ள இந்த பிரன்ஹாம் கூடாரத்தில் தான். எனக்கு பேசுவதற்கு முப்பது அல்லது நாற்பது பொருட்கள் உள்ளன. இவைகளை ஒரேயடியாக பேச வேண்டுமென்றால் ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் பிடிக்கும். இதுவே நான் ஜெபர்ஸன்வில், இந்தியானாவிலுள்ள பிரன்ஹாம் கூடாரத்தில் பிரசங்கிக்க வேண்டுமென்று என் இருதயத்தில் உள்ள தாகும்.
23. இப்பொழுது, வார்த்தையில் நிலைத்திருப்பதற்கென, நமது செய்தி பிரசங்கிக்கப்படும் ஏதாவதொரு இடத்துக்கு நீங்கள் செல்ல விரும்பினால் நமது செய்தி ஒன்றும் வித்தியாசமானது அல்ல, அது உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் கேட்ட அதே செய்திதான், அதனுடன் கூட இன்னும் சில காரியங்கள் வெளிப்படுத்தப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளன என்பது மாத்திரமே. இந்த செய்தி லூத்தர் பிரசங்கித்த அதே செய்தி, வெஸ்லி பிரசங்கித்த அதே செய்தி, பெந்தெகொஸ்தேயினர் பிரசங்கித்த அதே செய்தி அதனுடன் கூட சில காரியங்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பது மாத்திரமே. அது என்னவென்றால் சீர்திருத்தக்காரர்கள் விட்டுச்சென்ற முத்திரைகள் வெளிப்படுத்தப்பட்டது (பாருங்கள்?), அது இந்த காலத்தில் அறிந்து கொள்ளப்பட்டது, அவர்களால் அது அறிந்து கொள்ளப்பட முடியவில்லை. பெந்தெகொஸ்தே செய்தியானது லூத்தர் அல்லது வெஸ்லியின் நாட்களில் அறிந்து கொள்ளப்பட முடியவில்லை, அது பெந்தெகொஸ்தே காலம் வரைக்கும் காத்திருக்க வேண்டியதாயிருந்தது. பெந்தெகொஸ்தே காலம் என்பது லூத்தரின் காலத்தை விட சற்று முன்னேற்றமடைந்த காலமேயன்றி வேறல்ல. தானியம் வெவ்வேறு கட்டங்களில் முதிர்வடைவதைப் போல, சபையும் முதிர்வடைகிறது.
24. இன்றிரவு நான் பிரசங்கித்திருந்தால், எகிப்திலிருந்து பாலஸ்தீனாவுக்கு மாற்றப்பட்ட திராட்சை செடி என்னும் பொருளின் பேரில் பிரசங்கம் பண்ணியிருப்பேன். இதை வேதத்தில் குறித்து வைத்திருக்கிறேன். இஸ்ரவேல் தமது திராட்சை செடி என்று தேவன் கூறியுள்ளார் என்று எத்தனை பேருக்குத் தெரியும்? அதிலிருந்து இயேசு திராட்சை செடியாயிருப்பதைக் குறிக்கும் இடத்துக்கு வருகிறேன். இப்பொழுது அது சபை உலகத்துக்கு மாற்றப்பட்டு, அழுக்கில் உட்கார்ந்திராமல், கிறிஸ்துவுடன் கூட உட்கார்ந்திருப்பதால், அது கனி கொடுக்க வேண்டும். பார்த்தீர்களா? இன்றிரவு நான் பிரசங்கம் பண்ணியிருந்தால், அதுவே என் செய்தியாய் இருந்திருக்கும். ஆனால் கேள்விகளுக்கு பதிலளிப்பது நலமாயிருக்குமென்று கருதி பிரசங்கம் பண்ணும் எண்ணத்தை கைவிட்டு விட்டேன். நான் திரும்பி வரும்போது, ஒருக்கால் இந்த பொருளை எடுத்துக் கொள்வேன்.
25. வெளிப்படுத்தல் 12ம் அதிகாரம் மணவாட்டியுடன் சம்பந்தப்பட்டதல்ல. வெளிப்படுத்தல் 12ம் அதிகாரம் (அதை நான் பார்க்கவில்லை, ஆனால் அது எனக்குத் தெரியும்) அது ஸ்திரீ சூரியனில் நின்று கொண்டு பாதங்களின் கீழே சந்திரன் இருப்பதாகும். சந்திரன் நியாயப்பிரமாணத்துக்கு எடுத்துக்காட்டாய் உள்ளது; ஸ்திரீ இஸ்ரவேலாகிய சபைக்கு எடுத்துக்காட்டாய் இருக்கிறாள்; அவளுடைய நெற்றியில் உள்ள பன்னிரண்டு நட்சத்திரங்கள் அந்த பன்னிரண்டு அப்போஸ்தலர்களை, கடந்துபோன சபை காலங்களைக் குறிக்கிறது. பாருங்கள்? சூரியன் அவளுடைய தலையில் இருந்தது. சந்திரன் சூரியனின் நிழலாயுள்ளது, அவ்வாறே நியாயப்பிரமாணமும் வரப்போகும். நல்ல காரியங்களுக்கு நிழலாயுள்ளது. அந்த ஸ்திரீ இஸ்ரவேல், மணவாட்டி. அலல.
இப்பொழுது நான் அதிக நேரம் செலவிடப்போவதில்லை, ஏனெனில் இவைகளுக்கு பதில் கூறி முடிக்க வேண்டும்.