38. ஆம் அது பரிசுத்த ஆவியின் நடத்துதலின்படியே. நீங்கள் தேவனுடைய குமாரனாகவோ, அல்லது தேவனுடைய குமாரத்தியாகவோ இருந்து, பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்வீர்களானால், பரிசுத்த ஆவியானவர் நீங்கள் காரியங்களைச் செய்யும்படி உங்களை நடத்துகிறார்.
39. எனக்கு நேரமில்லை. எனக்கு உங்களிடம் சிறு வரலாறுகளைக் கூறப்பிரியம். ஒவ்வொரு முறையும் அவைகளைக் கூற நினைக்கும் போது, நான் கூறாமல் கடந்து செல்ல வேண்டியதாயுள்ளது. ஆனால் இதை ஒரு நிமிடம் கூறலாமென்று நினைக்கிறேன்.
40. இது மிஸ்ஸிஸிப்பியிலுள்ள மெரிடியனில் நடந்தது. சகோ. பிக்பி எனக்கு கூட்டங்களை ஒழுங்கு செய்தார் என்று ஒருத்துவக்காரராகிய உங்களில் அநேகர் அறிவீர்கள். அவர் ஒரு ஒருத்துவ சகோதரன். ஓரிரவு கூட்டத்தில் பில்லி பால் மைதானத்துக்குச் சென்று ஜெப அட்டைகளை வழங்கினான். ஓ, மழை அதிகமாக பெய்து கொண்டிருந்தது. ஜனங்கள் குடைகளுடன் வெளியே நின்று கொண்டிருந்தனர். பில்லி ஜெப அட்டைகளை வழங்கினான். அங்கு ஒரு... அதன் பிறகு அவன் என்னை அழைத்துக் கொண்டு போக வந்திருந்தான். அவன் என்னை அழைத்துக் கொண்டு போக வந்திருந்த நேரத்தில், ஒரு ஸ்திரீ முன்பாகத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தாள், வேறொரு ஸ்திரீ கையில் ஒரு குழந்தையை வைத்துக் கொண்டு, அதன் அழுகையை நிறுத்த முயன்று. இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தாள். “காலிகோ” உடையை அணிந்து அங்கு உட்கார்ந்து கொண்டிருந்த அந்த ஸ்திரீயும் ஒரு தாய்தான். அவள் அழுகிற குழந்தையை வைத்துக் கொண்டிருந்த அந்த ஸ்திரீயைக் கண்டாள். பரிசுத்த ஆவியானவர் உட்கார்ந்து கொண்டிருந்த அந்த ஸ்திரீயின் இருதயத்தில் பேசி, “நீ போய் அந்த குழந்தைக்கு ஜெபி” என்றார்.
41. “நல்லது, அடுத்த முறை அவள் என்னைக் கடக்கும் போது நான் போய் ஜெபிப்பேன்” என்று சொன்னாள். அவள் அவளைக் கடந்த போது, அவள் கையில் ஜெப அட்டை இருப்பதை அவள் கண்டாள். “ஓ, நான் அந்த குழந்தைக்கு ஜெபிக்கப் போவதில்லை. சகோ. பிரன்ஹாம் இன்றிரவு அந்த குழந்தைக்கு ஜெபிப்பார். சகோ. பிரன்ஹாம் அந்த குழந்தைக்கு ஜெபிக்க இருக்கும் போது நான் ஜெபிப்பதற்கு எம்மாத்திரம்?” என்று நினைத்துக் கொண்டாள். அது பயபக்தியான ஒன்றுதான், அது அருமையானது, ஆனால் அது எப்பொழுதுமே தேவனுடைய சித்தமாயிருக்க முடியாது. சில நேரங்களில் அது வித்தியாசமாயிருக்கும்.
பரிசுத்த ஆவியானவர் அவளிடம், “நீ போய் அந்த குழந்தைக்கு ஜெபம்பண்ணு” என்று சொல்லிக் கொண்டேயிருந்தார்.
முடிவில் அவள், “நான் ஜெபிக்கப்போனால் அந்த ஸ்திரீ அதை மறுத்து விடுவாள். அவளிடம் ஜெப அட்டை உள்ளதால், அந்த குழந்தைக்கு ஜெபிக்க அவள் என்னை அனுமதிக்க மாட்டாள். நான் ஜெபிப்பதற்காக அவள் அந்த குழந்தையை இங்கு கொண்டு வரவில்லை, சகோ. பிரன்ஹாம் ஜெபிப்பதற்காகவே அவள் கொண்டு வந்திருக்கிறாள்” என்று நினைத்துக் கொண்டாள்.
ஆனால் பரிசுத்த ஆவியானவர் அவளிடம், “நீ போய் அந்த குழந்தைக்கு ஜெபம் பண்ணு” என்று சொல்லிக் கொண்டேயிருந்தார்.
முடிவில் அவள், “நல்லது. இதிலிருந்து நான் விடுபட என் இருக்கையை அவளுக்கு அளிப்பேன்” என்று சொல்லிவிட்டு அந்த பெண்ணிடம், “தேனே (ஒரு தாய் மற்றொரு தாயிடம் பேசுகின்றாள்), நீ குழந்தையை வைத்திருக்கிறாய். நீ வந்து இங்கு என் இருக்கையில் அமருவாயா?” என்று அவளுக்கு அழைப்பு விடுத்தாள்.
அவள், “ஓ, தேனே, உன் இருக்கையை நான் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. குழந்தையை அமைதிபடுத்த நான் முயன்று கொண்டிருக்கிறேன்” என்றாள்.
அதற்கு அவள், “நீ மிகவும் களைப்பாக காணப்படுகிறாய்” என்றாள்.
“நான் களைப்பாய்தான் இருக்கிறேன்” என்றாள் அவள்.
“அப்படியானால் இங்கு வந்து என் இருக்கையில் அமர்ந்துகொள்” என்று சொல்லி விட்டு, “உன்னிடம் ஜெப அட்டை இருப்பதைக் காண்கிறேன். சகோ. பிரன்ஹாம் உன் குழந்தைக்காக ஜெபிக்கப் போகிறாரா?” என்று கேட்டாள்.
அதற்கு அவள், “இந்த ஜெப அட்டை எண் கூப்பிடப்படும் என்று நம்புகிறேன்” என்றாள். “நானும் கூட நம்புகிறேன்” என்று அவள் சொல்லி விட்டு, “சகோதரியே, நீ கிறிஸ்தவளா?” என்று கேட்டாள்...
அவள், “ஓ, ஆமாம்” என்றாள்.
“நானும் கூட கிறிஸ்தவள்தான். இங்கு நான் உட்கார்ந்து கொண்டிருந்த முதற்கு கர்த்தருடைய ஆவியானவர் என்னிடம், “நீ போய் அந்த குழந்தைக்கு ஜெபம்பண்ணு” என்று உரைத்துக் கொண்டேயிருக்கிறார். நீ அனுமதி அளிப்பாயா? அந்த எண் அழைக்கப்பட்டால் சகோ. பிரன்ஹாம் அந்த குழந்தைக்கு ஜெபிப்பார் என்று எனக்குத் தெரியும். நீ கையில் உன் அட்டையை பிடித்துக்கொண்டிரு. அவர் எப்படியும் கூப்பிடுவார்” என்று சொல்லிவிட்டு, “என் கரங்களை குழந்தையின் மேல் வைத்து ஒரு சிறு ஜெபத்தை நான் ஏறெடுத்தால், எனக்கு நல்லுணர்வு உண்டாகும், என்னை ஜெபிப்பதற்காக அழைத்துக் கொண்டிருக்கும் அதிலிருந்து நான் விடுபடுவேன். அது உனக்கு கோபமுண்டாக்குமா?” என்றாள்.
42. அதற்கு அவள், “நிச்சயமாக இல்லை, அன்பே. குழந்தைக்கு ஜெபி” என்றாள். அது நீல நிறமாயிருந்தது. எனவே இந்த ஸ்திரீ அந்த குழந்தைக்கு ஜெபித்தாள். அவள் தன் இருக்கையை அந்த ஸ்திரீக்கு கொடுத்து விட்டு படிக்கட்டுகள் ஏறி மூன்றாம் முன்மண்டபத்துக்கு (balcony) சென்று அங்கு நின்று கொண்டிருந்தாள். அங்கு ஏதோ ஒரு கிறிஸ்தவ சகோதரன் எழுந்து அவளுக்கு தன் இருக்கையை அளிக்க போதிய நற்பண்பு கொண்டவராயிருந்தார். எனவே அவள் உட்கார்ந்து கொண்டாள்.
43. அரை மணி நேரம் கழித்து நான் கூட்டத்துக்கு வந்து, சில நிமிடங்கள் பேசி விட்டு, ஜெப அட்டைகளை அழைத்தேன். இந்த ஸ்திரீ வரிசையில் மூன்றாவது அல்லது நான்காவதாக குழந்தையுடன் நின்று கொண்டிருந்தாள். முன்மண்டபத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த அந்த ஸ்திரீ அதைக் கண்டதும், “ஓ, கர்த்தாவே, உமக்கு நன்றி. அந்த சிறு தாய்க்காக நான் மிகவும் வருத்தமடைந்திருந்தேன். அந்த குழந்தை சுகமாகிவிடுமென்று நம்புகிறேன், ஏனெனில் சகோ. பிரன்ஹாம்... அவள் வரிசையில் மூன்றாவது அல்லது நான்காவதாக நின்று கொண்டிருக்கிறாள். அவள் அவரிடம் போய் விடுவாள். கர்த்தாவே, உமக்கு நன்றி” என்றாள். அங்கு உட்கார்ந்து கொண்டிருந்த அந்த சிறு தாய் அந்த குழந்தைக்காக மனம் வருந்தினாள்.
44. நான் மேடையின் மேல் வந்து, அந்த ஸ்திரீ என்னிடம் வந்த போது, அந்த குழந்தைக்கு நான் ஜெபித்தேன். அவளை நான் உற்று நோக்கி, “உன் குழந்தை நீல நிறமாயிருந்தது. ஜெபிப்பதற்காக அதை இங்கு நீ கொண்டு வந்தாய். உன் பெயர் திருமதி இன்னார், நீ இன்னின்ன இடத்திலிருந்து வருகிறாய்; ஆனால் குழந்தை ஏற்கனவே சுகமாகி விட்டது. திருமதி இன்னார் என்னும் பெயர் கொண்ட ஒரு ஸ்திரீக்கு இருதயத்தில் பாரம் குடி கொண்டிருந்தது. அவள் இப்பொழுது முன் மண்டபத்தில் உட்கார்ந்து கொண்டி ருக்கிறாள் (மூன்றாம் முன் மண்டபத்தில் நான்காம் வரிசையின் கடைசியில் முதலாவதாக). அவள் அந்த குழந்தைக்கு விசுவாச ஜெபத்தை ஏறெடுத்தாள். அந்த குழந்தை ஏற்கனவே சுகமடைந்து விட்டது” என்றேன். அவள் இருக்கையிலிருந்து ஏறக்குறைய மயங்கி கீழே விழுந்து விட்டாள். பாருங்கள்?
45. இப்பொழுது, அவள் அந்த குழந்தைக்கு ஜெபிக்காமல் போயிருந்தால்? நான் கூறுவது உங்களுக்கு விளங்கு கிறதா? அந்த ஸ்திரீக்கு, தாய் என்னும் முறையில், என்னைக் காட்டிலும் அந்த குழந்தையின் பேரில் அதிக அனுதாபம் இருக்கும். பாருங்கள்? தாய் என்பவள்... பாருங்கள்?
46. நாம் எல்லோரும் அற்புதங்களைச் செய்ய முடியுமா? ஆம். அற்புதங்களைச் செய்வதற்கு நீங்கள் பரிசுத்த ஆவியானவரால் நடத்தப்பட்டால், போய் செய்யுங்கள், ஏனெனில் அது பரிசுத்த ஆவியானவரால் நடத்தப்பட்டது.
47. இப்பொழுது, அந்த ஸ்திரீ தேவன் அவளிடம் கூறினதை செய்து நிறைவேற்றாமல் போயிருந்தால், ஒருக்கால் ஆவியில் அவளுக்கு கடிந்து கொள்ளுதல் உண்டாயிருக்க வகையுண்டு (பாருங்கள்?), அவள் தேவனுக்கு கீழ்படியாமல் போயிருந்திருப்பாள். நீங்கள் கிறிஸ்தவராயிருந்து எப்பொழுதுமே ஏதோ ஒன்று உங்களை ஏதோ ஒன்றைச் செய்ய ஏவினால், நீங்கள் போய் அதைச் செய்யுங்கள். அதை சந்தேகிக்காதீர்கள்; போய் செய்யுங்கள்.