262. இல்லை, ஐயா. இல்லை, நாங்கள் அப்படி செய்வதில்லை. அந்நிய பாஷையில் பேசுவது பரிசுத்த ஆவியின் வரமாகும், பாருங்கள், அது பரிசுத்த ஆவி அல்ல. அது ஒரு வரமாகும். இந்த மரம் ஒன்பது விதமான கனிகளைக் கொண்டிருக்கிறது. அது சரியா?
263. நீங்கள் ஒரு ஆப்பிள் மரத்தை பார்க்கையில், அது ஆப்பிள் பழங்களைக் கொண்டிருக்குமானால், அது ஆப்பிள் மரம் என்கிறீர்கள். ஒரு மரத்தை பார்க்கும் போது, அது பேரிக்காய்களைக் கொண்டிருக்குமானால், அது பேரிக்காய் மரம் என்று கூறுகிறீர்கள். அதன் மேல் காட்டத்தி மரப்பட்டை இருந்து, அதில் பேரிக்காய்கள் இருந்தாலும் சரி, அதனுடைய ஜீவன் என்ன? அதன் ஜீவன் பேரிக்காய் மர ஜீவன் தான். அது சரியா?
264. இப்பொழுது, இந்த தேவனுடைய மரமானது ஒன்பது ஆவிக்குரிய கனிகளையுடையதாக இருக்கிறது. அது சரியா? சரி? அங்கே வித்தியாசப்பட்ட... “ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தை போதிக்கும்... வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும் வேறொருவனுக்கு புரிந்து கொள்ளுதலும், பாஷைகளை வியாக்கியானம் பண்ணுதலும் அளிக்கப்படுகின்றது,” என்றார். ஒன்பது வித்தியாசமான ஆவிக்குரிய வரங்கள் இந்த தேவனுடைய மரத்தின் மீது வளர்கின்றது. அது சரியா? நல்லது, இப்பொழுது, அந்நிய பாஷையில் பேசுவது மாத்திரம் ஒன்றே ஒன்றல்ல, இன்னும் மற்றவைகளும் கூட இருக்கின்றன.
265. இப்பொழுது நீங்கள் அந்நிய பாஷையில் பேசி இன்னுமாக பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளாமல் இருக்கலாம். இப்பொழுது அதை சற்று நினைவில் கொள்ளுங்கள். நான் சரியாக... சூன்யக்காரிகள் மந்திரவாதிகள் வந்து அந்நிய பாஷையில் பேசுவதை நான் கண்டிருக்கிறேன், அவர்கள் பரிசுத்த ஆவியை உடையவர்கள் அல்ல. உங்களுக்குத் தெரியும், அவர்கள் மேலே வந்து சத்தமிடுவதையும் குதிப்பதையும் நான் கண்டிருக்கிறேன், அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெறாமல் உள்ளனர். சமீபமாக நான் ஒரு கார்ன்-நடனத்தில் நின்று கொண்டிருந்தேன், வெளியே... அங்கே டௌக்லாஸ், அரிசோனாவில் அங்கே ஒரு சிறிய துண்டு. அங்கே அவர்கள் நடத்தும் கார்ன்- நடனத்தை கண்டிருக்கிறேன், அந்த மந்திரவாதி வந்து பயங்கராமாகச் செய்து கொண்டிருந்தான், எல்லாக் காரியமும் செய்து கொண்டிருந்து அங்கே தன் மீது தூசியை போட்டுக்கொண்டான். அப்படியென்றால் அவன் இரட்சிக்கப்பட்டிருக்கிறான் என்றல்ல. அந்த மனிதன் ஒரு - ஒரு மந்திரவாதி ஆவான்.
266. நான் இந்தியாவில் இந்தியாவிற்கு சென்றிருந்த போது... ஆப்பிரிக்காவில் மந்திரவாதிகள் வந்து தங்கள் மந்திரங்களினாலே எனக்கு சவால் விட்டதையும், ஒரு மனித மண்டை ஓட்டிலிருந்து இரத்தத்தை குடித்ததையும் நான் கண்டிருக்கிறேன். அது சரி. நீ அதை நேரடியாக சந்திக்கையில் எதைக் குறித்து நீ பேசிக் கொண்டிருக்கிறாய் என்பதை அறிந்திருப்பது நல்லது. ஆனால் சர்வல்லமையுள்ள தேவன் அந்த மனிதன் அசையவும் கூடாத விதத்தில் அவனை கட்டிப்போட்டதையும் நான் கண்டிருக்கிறேன். ஆகவே அப்பொழுது, அதைப் போன்ற அவனுடைய கண்ணாடிக் கண்கள், அவர்கள் அவனை தூக்கிச் சென்றனர். ஆம், ஐயா.
267. சகோதரனே, தேவன் உண்மையாயிருக்கிறார்! அது உண்மை. ஆனால் தேவன் ஆவியாயிருக்கிறார், அந்நிய பாஷையில் பேசுவதிலும் அல்லது, இது, அது அல்லது மற்றதில் மாத்திரமே கட்டுப்படுத்தப்பட்டவர் அல்ல. நான் கூறுவது என்னவென்றால் எந்த ஒரு மனிதனும்... இங்கே சபையில் இருக்கின்ற பிரச்சனை அது தான். பாருங்கள், நீங்கள்... பெந்தெகொஸ்தேயினர் அந்த ஒரு காரியத்தின் மீது கட்டுப்பாடற்ற உணர்ச்சிக்கு ஆட்பட்டவர்களாயினர். அவர்கள் ஜனங்களிடம் சென்று... அவர்கள் மீது கைகளை வைத்து, அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ள ஏதுவாக செய்வதற்கு பதிலாக, அவர்களை பீடத்தண்டை கொண்டு சென்று முதுகின் மீது அவர்களை அடிக்க ஆரம்பித்து “அதைப் பேசு! அதைப் பேசு! அதைப் பேசு!” என்று சத்தமிடுகின்றனர். மேலும் மேலும் குழப்பத்தை பெற்றுக் கொள்ளும் வரை ஒரு சொல்லைக் கூறுகின்றனர், அது அந்நிய பாஷை அல்ல.
268. ஒரு உண்மையான பரிசுத்த ஆவி நபரானவன் தேவனுடைய ஆவியினால் பிறந்திருப்பானானால், அவன் தேவனுக்குரிய ஜீவியத்தைச் செய்வான். அந்த மனிதர்களில் சிலர் மோசமான ஜீவியங்களைச் செய்து கொண்டிருக்கின்றனர். நீங்கள் அதை அறிந்திருக்கிறீர்கள், அவர்கள் அப்படியாக இல்லை என்று அவர்களுடைய கனிகள் நிரூபிக்கிறது. இயேசு, “அவர்களுடைய கனிகளினாலே நீங்கள் அவர்களை அறிந்து கொள்வீர்கள்” என்றார். ஆகவே ஆவியின் கனியானது அந்நிய பாஷையில் பேசுவது அல்ல, அது ஆவியினுடைய வரம் ஆகும்.
269. இந்த அந்நிய பாஷைகளையும் மக்கள் பேசுவதையும் அவர்கள் கேட்ட போது. பேதுரு, “மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியைப் பெறுவீர்கள்” என்று ஒருபோதும் கூறவில்லை. அவன், “பரிசுத்த ஆவியின் வரத்தை பெறுவீர்கள்” என்றான். அது அவர்கள் பெறுகின்ற பரிசுத்த ஆவியின் வரங்களில் ஒன்றாகும். ஆமென். சரி. நாம் சீக்கரமாக கடந்து செல்ல வேண்டும்.