48. இவைகளுக்கு பதில் கூறாமல் கடந்து செல்ல எனக்கு பிரியமில்லை; இவை நல்ல கேள்விகள். பாருங்கள்? “நகரத்துக்கு வெளிப்புறத்திலுள்ள பூமியில் தங்கியிருப்பவர் யார்?” - வெளிப்புறத்தில் மீட்கப்பட்டவர்கள் நகரத்துக்கு வெளிப்புறத்திலுள்ள பூமியில் தங்கியிருப்பார்கள். ஆனால் அவர்கள் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் அல்ல, அவர்கள் மணவாட்டி என்று அழைக்கப்பட மாட்டார்கள். மணவாட்டி ராஜ்யத்திற்குள்ளே ராஜாவுடன் தங்கியிருப்பாள். வெளிப்புறத்தில் பூமியின் ராஜாக்கள் தங்கியிருந்து உழைத்து தங்கள் உழைப்பை - தங்கள் உழைப்பின் பலனை - நகரத்துக்குள் கொண்டு வருவார்கள். நகரத்தின் வாசல்கள் இரவில் அடைக்கப்படுவதில்லை.
49. இப்பொழுது. மேலே. இப்பொழுது. மலையின் உச்சியிலுள்ள விளக்கு முழு உலகத்துக்கும் வெளிச்சம் தராது. அது நகரத்துக்கு” மட்டுமே வெளிச்சம் தரும். ஒருக்கால் அது ஆயிரக்கணக்கான மைல்கள் தூரத்தில் காணப்படக்கூடும், ஆனால் அது பூமிக்கு வெளிச்சம் தராது. ஏனெனில், புது உலகத்தில் அவர்கள் மாதந்தோறும், ஓய்வு நாள் தோறும், கர்த்தரைத் தொழுது கொள்ள சீயோனுக்கு - அந்த நகரத்துக்கு - அவருக்கு முன்பாக வருவார்கள் என்று வேதம் உரைக்கிறது (ஏசா. 66 : 23).
50. அவர்கள் நகரத்துக்குப் புறம்பே தங்கியிருப்பார்கள், பணவாட்டி அல்ல, ஆனால் இரண்டாம் உயிர்த்தெழுதலில் எழுந்திருப்பவர்கள். அவர்கள் ஆதாமைப் போல் நிலத்தைப் பயிரிடுபவர்களாகவும் தோட்டங்களைக் கவனித்துக் கொள்ளுகிறவர்களுமாயிருப்பார்கள்.