51. “ஒரு நபருடன் பிறப்பு முதல் தங்கியிருக்கும் அவருடைய தூதனைக் குறித்து விளக்கவும்”. இப்பொழுது. நீங்கள் கவனிப்பீர்களானால்... இப்பொழுது, இது மிகவும் ஆழமானது. இப்பொழுது, நான் ஒருபோதும் - இப்பொழுது தான் இதைக் கையிலெடுத்தேன். இந்த கேள்வியின் ஒரு பாகம் தட்டெழுத்திலும் மற்ற பாகம் பென்சிலிலும் - இல்லை, பேனாவிலும் எழுதப்பட்டுள்ளது.
52. இப்பொழுது, ஒரு தூதன் உண்டு, ஆனால் இந்த கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப்பாளய மிறங்குகிறான் (சங். 34:7). பாருங்கள்? பாவிகளுக்கு தூதர்கள் இருப்பார்கள் என்று வாக்களிக்கப்படவில்லை, மீட்கப்பட்டவர்களுக்கு மாத்திரமே தூதர்கள் உள்ளனர். அது உங்களுக்குத் தெரியுமா? கர்த்தருடைய தூதர்கள் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப்பாளயமிறங்குகின்றனர்.
53. இப்பொழுது, தூதர்கள் என்பவர்கள் செய்தியாளர்கள். நீங்கள் கவனிக்க வேண்டுமென்று விரும்புகிறேன், அது மிகவும் பரிபூரணமானது. அது! உங்களுக்கு முன் குறித்தலை நிரூபிக்கும். பாருங்கள்?
54. இப்பொழுது, ஒரு சிறு குழந்தை தாயின் இருதயத்தின் கீழ் உருவாகிக் கொண்டிருக்கையில். இவைகளைப் புரிந்து கொள்ள இயலும் சிறு பிள்ளைகளே, பாருங்கள், கர்த்தர் உங்களை உங்கள் தாய்க்குக் கொடுத்தார். அவள் உங்களை அவளுடைய இருதயத்தின் கீழ் சுமந்தாள், ஏனெனில் நீங்கள் அவளுடைய இருதயத்துக்கு மிகவும் நெருங்கினவர்கள். பிறகு ஒரு நாள் கர்த்தர் இறங்கி வந்து உங்களை தாயின் இருதயத்திலிருந்து, அவளுடைய இருதயத்துக்கு அப்பால் இருக்கும்படிக்கு, உங்களை வெளியே கொண்டு வந்தார். இருப்பினும் நீங்கள் எப்பொழுதுமே அவளுடைய இருதயத்தில் இருப்பீர்கள்.
55. இப்பொழுது, இந்த “சிறு சரீரம் உருவாகிக் கொண் டிருக்கையில், தாய்க்குள் இந்த மாம்ச சரீரம் உருவாகிக் கொண்டிருக்கையில், அது பிறந்தவுடனே அதை ஏற்றுக் கொள்ள பூமியில் ஒரு ஆவிக்குரிய சரீரம் ஆயத்தமாகக் காத்திருக்கிறது. இப்பொழுது, குழந்தை அசையும் தசைகளுடனும், இருதயத்துடிப்புடனும் பிறக்கிறது. ஆனால் அதற்குள் ஜீவ சுவாசம் கிடையாது. அதன் தசைகள் வேகமாக அசைகின்றன. பாருங்கள்? அப்பொழுது, பாருங்கள். அதிலிருந்து வித்தியாசமான ஒன்று இருக்குமானால், பின்னால் வரவேண்டிய ஒரு ஆவி இல்லாமல் போனால், நம்முடைய சுவாசம் நம்மை விட்டுப் போகக் கூடும். நாம் சுவாசிக்காமலே உயிருடன் இருக்கக் கூடும். ஆனால் இந்த சரீரம் பிராண வாயுவைப் பெறாமல் போனால் (நம்முடைய சுவாசப்பை உள்ளே பெறுதலும் வெளியே விடுதலும்), அப்பொழுது நாம் இறந்து விடுகிறோம்.
56. ஆனால் தாய்... தாயின் இருதயத்திலிருந்து சிறு குழந்தை பூமியில் கீழே போடப்படும் போது “கீழே போடப்படுதல்” நான் என்ன கூறுகிறேன் என்று விளங்குகிறதா. அதை நான் அவ்விதம் கூறக் காரணம் என்னவென்றால், அந்த சிறு குழந்தை கீழே போடப்படும் போது, என்ன நடக்கிறது? அது பிறந்தவுடனே அழாமல் போனால் டாக்டர் அல்லது நர்ஸ் அல்லது யாராகிலும் அதை அடிப்பார்கள் (சகோ. பிரன்ஹாம் தன் கரங்களைக் கொட்டுகிறார் - ஆசி), அதை இழுப்பார்கள். அதற்கு ஒரு அதிர்ச்சி அவசியம். என்ன நடக்கிறது?
57. பாருங்கள். ஒரு தாய், நீசத்தனமாகவும் கொடூர மாகவும் இருக்கக்கூடும், ஆனால் குழந்தை பிறப்பதற்கு சற்று முன்பு, அவளிடம் ஒரு குறிப்பிட்ட தயவு காணப்படுகிறது. தாயாகப்போகிற ஒருத்தியை நீங்கள் எப்பொழுதாகிலும் கவனித்ததுண்டா? அவளிடம் எதோ ஒரு வித இனிமை காணப்படுகிறது, அவள் அந்த இனிமையைப் பெற்றுக் கொள்கிறாள். ஏனெனில் அந்த சிறு தூதன், சிறு ஆவி, இந்த சிறு கூடாரத்துக்கு. ஒரு சிறு தூதுவன் இவ்வுலகிற்கு வருவதற்கு ஆயதமாயிருக்கிறான். இந்த சிறு தூதன் சரீரத்துக்குள் வரும்போது (அது பூமியின் சிறு தூதன், இந்த சரீரத்துக்குள் புகுவதற்கு தேவனால் நியமிக்கப்பட்ட ஆவி), அந்த குழந்தை இரண்டில் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். அது தீர்மானம் செய்கிறது. அது நடைபெறும் போது, கர்த்தருடைய தூதன் இங்கு வருவதை நீங்கள் காண்கிறீர்கள், அது ஆவிக்குரிய சரீரம், அந்த நித்தியமான ஒன்று.
58. இது மரித்துக் கொண்டிருக்கிற சரீரத்தில் மரித்துக் கொண்டிருக்கிற ஆவி; ஆனால் நீங்கள் ஒரே சமயத்தில் இரண்டு சரீரங்களில் இருக்க முடியாது. இப்பொழுது, கர்த்தருடைய ஆவியின் சுபாவம்... நீங்கள் மறுபடியும் பிறக்கும்போது, நீங்கள் அந்த குழந்தை பிறப்பது போல் மாம்சத்தில் பிறப்பதில்லை. என்ன நடக்கிறதென்றால் ஆவிக்குரிய பிறப்பு உங்களுக்கு வந்து விடுகிறது. இந்த ஆவிக்குரிய பிறப்பு உங்கள் இருதயத்தில் வளர்ந்து கொண்டிருக்கையில், அந்த ஆவியை ஏற்றுக் கொள்ள ஒரு வானத்துக்குரிய சரீரம் வளர்ந்து கொண்டு வருகிறது. உயிர் இந்த சரீரத்தை விடும்போது, அது அந்த சரீரத்துக்குள் செல்கிறது. இந்த சரீரம் பிறப்பில் பூமிக்கு ஒப்புவிக்கப்படும் போது, எவ்வாறு ஆவி உள்ளே வருகிறதோ, அந்த ஆவி சரீரத்தை விட்டு வெளியேறும் போது, அங்கு ஒரு சரீரம் காத்திருக்கிறது. “பூமிக்குரிய கூடாரமாகிய இந்த வீடு அழிந்து போனாலும், ஏற்கனவே ஒன்று நமக்காகக் காத்திருக்கிறது” (2 கொரி 5:1). பாருங்கள்? அதுதான், ஜனங்களின் ஆவிக்குரிய சரீரம்.
சகோ. பிரன்ஹாமே...
இப்பொழுது: இவைகள். இங்கு அநேக கேள்விகள் உள்ளன, குறைந்தது பத்து அல்லது பதினைந்து உள்ளது போல் தோன்றுகிறது. இவையனைத்தும் ஒரே விதமான காகிதத்தில் தட்டெழுத்தால் எழுதப்பட்டுள்ளன. இவைகளுக்கு முடிந்த வரையில் வேகமாக பதிலளிக்க முயல்கிறேன். முடிந்த வரையில் இவைகளை வேகமாகப்பார்க்கலாம்.