59. அன்புள்ள சகோதரனே, சகோதரியே, அது யாராயிருந்தாலும், வணக்கத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தவர் இயேசு அல்ல. வெளிப்படுத்தல் 22:8ல், அது தீர்க்கதரிசி, தூதன், தான் வணக்கத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தது என்று நீங்கள் படிக்கலாம். இவைகளைக் காண்பித்த தூதனை வணங்கும்படி யோவான் அவன் பாதத்தில் விழுந்த போது, அந்த தூதன், “நீ இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் உன் சகோதரரோடும், தீர்க்கதரிசிகளோடும் கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள்” என்றான். பாருங்கள், பாருங்கள்? “உன் சகோதரரும், உடன் ஊழியக்காரர்களோடும் தீர்க்கதரிசிகளோடும் கூட நானும் ஒருவன்; தேவனைத் தொழுது கொள்”. இயேசு அதை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கவில்லை, தீர்க்கதரிசி தான் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.