62. “தமது முக ரூபத்தை மாற்றிக் கொண்டாரா? எனக்குத் தெரியாது. நான் நினைப்பது என்னவென்றால், அவர் தமது முக ரூபத்தை மாற்றிக் கொள்ளவில்லை. அவர் என்ன செய்தாரென்றால், அவரைக் காணாதபடிக்கு அல்லது அவர்கள் அறிந்து கொள்ளாதபடிக்கு அவருடைய கண்களை அவர் மறைத்து விட்டார்.
63. எம்மாவூர் சீஷர்களைப் போல், அவர்கள் நாள் முழுவதும் அவருடன் நடந்து “ சென்றார்கள், அவரைக் காணக்கூடாதபடிக்கு அவர்கள் கண்கள் மறைக்கப்பட்டிருந்தது. ஒரு சமயம் அவர்கள், தாங்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த கரையில் ஒருவர் மீன்பிடிக்கக்கண்டார்கள்; அவர், “பிள்ளைகளே, புசிப்பதற்கு ஏதாகிலும் உண்டா?” என்று கேட்டார்.
அவர்கள், “நாங்கள் இராமுழுவதும் பிரயாசப்பட்டும் எங்களுக்கு ஒன்றும் கிடைக்க வில்லை” என்றார்கள்.
அவர், “மற்ற பக்கத்தில் வலையைப் போடுங்கள்” என்றார். அவர்கள் நிறைய மீன்களைப் பிடித்தார்கள், அப்பொழுது அவர் கர்த்தர் என்று அறிந்து கொண்டார்கள். அவர் தன் முக ரூபத்தை மாற்றிக் கொண்டதாக எனக்குத் தோன்றவில்லை, ஜனங்களின் கண்கள் மறைக்கப்பட்டிருந்தது என்று நான் நினைக்கிறேன்.