64. கர்த்தருடைய தூதன் கர்த்தரிடத்திலிருந்து செய்தியைக் கொண்டு வரும் தூதன், கர்த்தர் என்பது அந்த நபரே, அவர் கர்த்தரிடத்திலிருந்து வருகின்ற தூதன் அல்ல. இதை நான் உங்களுக்கு காண்பிக்கட்டும். பூமிக்குரிய விதமாக பேசுவோ மானால், இங்கே கர்த்தரிடத்திலிருந்து வந்த ஒரு தூதன் இருக்கிறார், இங்கே கர்த்தரிடத்திலிருந்து வந்த மற்றொரு தூதன் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் கர்த்தரிடத்திலிருந்து வந்த தூதர்கள் என்று. நாம் எவ்விதம் அறிந்து கொள்வது? அவர்கள் கர்த்தரிடத்திலிருந்து வார்த்தையைக் கொண்டு வரும்போது. ஆனால் அவர்கள் வார்த்தையைப் புரட்ட முயன்றால், அது உரைக்காத ஒன்றை உரைப்பதாகக் கூற முயன்றால், அது கர்த்தரிடத்திலிருந்து வந்ததல்ல (பாருங்கள், பாருங்கள்?). கர்த்தர் உரைத்ததை அப்படியே உரைப்பார்களானால்.
65. பிறகு கர்த்தரிடத்திலிருந்து வருகின்ற இயற்கைக்கு மேம்பட்ட தூதனும் இருக்கிறார். அவர்கள் காபிரியேல், மிகாவேல், எட்டி போன்ற பெயர் கொண்ட தூதர்கள்.