66. நான் நினைப்பது என்னவெனில், சகோதரனே, சகோதரியே, அது யாராயிருந்தாலும், இந்நேரத்தின் நிலையே அதற்கு காரணம். எழுப்புதல் முடிவடைந்து விட்டது. அது ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளாக நீடித்தது. இதற்கு முன்பு அது மூன்று ஆண்டுகளுக்கு மேல் நீடித்ததில்லை. அது கடைசி எழுப்புதலைப் பெற்றுக் கொண்டதென்று நான் நம்புகிறேன். ஆகையால் தான் உங்களுக்கு முன் போல ஜெபிக்கவும் ஆவியில் உணரவும் முடிவதில்லை. ஏனெனில் எழுப்புதல் தீ அணைந்து விட்டது.