68. அதற்கு மாறான நிலையை கடைப்பிடியுங்கள். பிசாசு உங்களை அவ்விதம் நினைக்கத் தூண்டுவானானால், நீங்கள் கிறிஸ்தவராக இருந்து, நீங்கள் கிறிஸ்தவர் அல்ல என்று அவன் உங்களை நினைக்கத் தூண்டுவானானால், நீங்கள் அதற்கு மாறான நிலையை கடைப்பிடித்து, “நான் கிறிஸ்தவன்” என்று சொல்லுங்கள். உங்கள் அனுபவம் தேவனுடைய வார்த்தையுடன் இணைந்துள்ள வரைக்கும், “நான் கிறிஸ்தவன்” என்று சொல்லுங்கள். வேறெந்த காரியத்திலும் கூட அதே வழியைக் கடைபிடியுங்கள்.
இதற்கு நீங்கள் பதிலுரைக்கும் போது, இதை மேற் கொள்வதற்கு எனக்காக ஜெபியுங்கள், ஏனெனில் நான் என் சுயநிலையில் இல்லை.
69. தேவன் தாமே நீங்கள் மேற்கொள்ளும்படி உங்களுக்கு அருளுவாராக, நீங்கள் யாராயிருந்தாலும். உங்கள் சிந்தனைகள் மற்ற பக்கத்துக்கு சென்று, “நான் கிறிஸ்தவன்; நான் ஒரு விசுவாசி. சாத்தானே, என் மேல் உனக்கு எந்த அதிகாரமும் இல்லை” என்று நீங்கள் சொல்வீர்களாக.
70. வெளிப்படையாகக் கூறினால், இந்த பிரசங்க பீடத்தில் மயங்கி விழாமல் என்னைக் காத்துக் கொள்ள நானும் கூட இங்கு நின்று கொண்டு அதையே சொல்லிக் கொண்டிருக்கிறேன். அது உண்மை. நான்கைந்து முறை நான் ஏறக்குறைய இந்த பிரசங்க பீடத்தில் மயங்கி விழுந்துப் போனேன்.