71. அதற்கு எதிரான மனப்பான்மையைக் கொள்ளுங்கள் நீங்கள் - எப்பொழுதுமே உங்கள் வழியையே கடைபிடிக்க வேண்டுமென்றும், எல்லாமே நீங்கள் நினைத்தபடியே ஆக வேண்டுமெனும் மனப்பான்மையை குழந்தை பருவத்திலிருந்தே கொண்டிருந்திருப்பீர்களானால், அந்த நிலையிலிருந்து மாறி, மற்ற வழியைக் கடைபிடிக்க உங்களாலான எல்லாவற்றையும் செய்யுங்கள். நீங்கள் தன்னயமுள்ளவர்களாய், எல்லாவற்றையுமே நீங்கள் பிடித்து வைத்துக் கொள்ள வேண்டுமெனும் எண்ணம் கொண்டிருப் பீர்களானால், உங்களுக்கு இருப்பவைகளை மற்றவர்களுக்கு கொடுக்கத் தொடங்குங்கள். பாருங்கள்? உங்கள் மனப்பான்மைக்கு மாறான ஒன்றை செய்யுங்கள். எதையுமே மேற்கொள்ள அதுவே சிறந்த எதிர்மருந்து (antidote).”
72. நீங்கள்... தென்பாகத்தைச் சேர்ந்த என் வயோதிப தாய், “நாயின் முதுகில் மயிரை எடுத்துவிட்டால், அதை கடிக்கலாம்” என்று கூறுவது வழக்கம். அது இதற்கும் பொருந்தும்.