270. நல்லது, இப்பொழுது சகோதரியே அல்லது சகோதரனே, நீங்கள் யாராயிருந்தாலும் சரி, அது உங்களைப் பொறுத்தது. எனக்கு ஒரு சிறிய பெண் பிள்ளை இருக்கின்றாள்... என்னுடைய சிறிய பையன், பில்லி பால், பதினாறு வயதாயிருக்கையில், இங்கே கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் நான் அவனுக்கு ஞானஸ்நானம் கொடுத்தேன். என்னுடைய சிறு பெண் பிள்ளைக்கு எட்டு வயதாயிருந்தது. அவள் என்னிடம் வந்து என் மடியில் அமர்ந்து, “அப்பா, நான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பேரில் விசுவாசம் வைக்க விரும்புகிறேன், ஆகவே நான் - நான் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ள விரும்புகிறேன்,” என்று கூறினாள். நான் அந்த சிறு பெண் பிள்ளைக்கு எட்டு வயதில் ஞானஸ்நானம் கொடுத்தேன். சிறு பிள்ளைகள் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள விரும்பினால், அவைகளுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள். அவைகளுக்கு, ஏன் அவைகள்... கர்த்தர் எதையெல்லாம் கூறினாரோ அதை தொடர்ந்து செய்யுங்கள், அது உங்களைப் பொறுத்தது.