73. உங்களால் கூடுமானவரையில் அவர்களை கிறிஸ்தவ சகாக்களுடன் வைத்திருங்கள். அவர்களை... அது பெண்ணாக இருந்தால், அவளை கிறிஸ்தவ பெண்களுடன் வைத்திருங்கள்; அது கிறிஸ்தவ பையன்களாக இருந்தால், கிறிஸ்தவ பையன்களுடன் வைத்திருங்கள். அவள் ஒரு பையனுடன் செல்வதற்கு போதிய வயதுள்ளவளாயிருந்தால், அவள் சரியான பையனுடன் போகிறாளா என்று பார்த்துக் கொள்ளுங்கள். வேறெந்த பையனுடனும் அவள் போகாதபடிக்கு அவளுக்கு ஆலோசனை கூறுங்கள்; அவ்வாறே ஒரு பையன் சென்றாலும், அவள் ஒரு அவிசுவாசியுடன் சென்றால், ஒரு விசுவாசியுடன் செல்ல அவளை உற்சாகப் படுத்துங்கள்; அவ்வாறே பையனின். விஷயத்திலும். உங்கள் வீட்டை நன்றாக வைத்திருங்கள். உங்கள் மகளோ அல்லது மகனோ அவர்களுடைய நண்பர்களை பெற்றோர் முன்பு கொண்டு வருவதற்கு வெட்கப்படாத அளவுக்கு உங்கள் குடும்பத்தையும் வீட்டையும் நல்ல விதமாக வைத்திருங்கள்; அவர்கள் வீட்டில் தங்கியிருக்க பிரியப்படும் அளவுக்கு குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்படி செய்யுங்கள்.
ஊ ஊ, என்னே இங்கு ஏழு கேள்விகள் வரிசையாக உள்ளன நான் சில நிமிடங்களைக் காட்டிலும் அதிகமாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை.