74. இல்லை, அது முடிவடைந்து விட்டதென்று நான் ஒரு போதும் கூறின தில்லை. அவ்விதம் நான் கூறியிருந்தால் அதை தவறாகக்கூறினேன், அல்லது நீங்கள் அதை தவறாகப் புரிந்து கொண்டிருப்பீர்கள். இது கடைசி சபை காலம். இது சபை காலங்களின் முடிவாகும். இந்த லவோதிக்கேயா: அது முடிவடையவில்லை; அது முடிவடைந்தால் சபை போய்விடும். சபை இங்குள்ள வரைக்கும் அது முடிவடையவில்லை. பாருங்கள்?