75. இல்லை, இல்லை, இல்லை, நீங்கள்... இந்த கேள்விக்கு விடையளிக்க சற்று அதிக நேரம் இருந்தால் நலமாயிருக்கும். பாருங்கள். பாருங்கள்? மணவாட்டி சபையை விட்டு எடுக்கப்படும் போது, சபை காலம் முடிவடையும். லவோதிக்கேயா குழப்பத்துக்குள் செல்லும்; மணவாட்டி மகிமைக்குச் செல்கிறாள். புத்தியில்லாத கன்னிகைகளின் மேல் 3 ஆண்டுகள் உபத்திரவ காலம் வந்திறங்கும். இஸ்ரவேல் அப்பொழுது தன் தீர்க்கதரிசனத்தைப் பெற்றுக் கொண்டிருப்பாள்; பிறகு இஸ்ரவேலுக்கு உபத்திரவ காலம் தொடங்குகிறது; அதன் பிறகு அர்மகெதோன் யுத்தம் உண்டாகி, அது எல்லாவற்றையும் அழித்து போடும். பிறகு மனவாட்டி மணவாளனுடன் ஆயிரம் வருட அரசாட்சிக்காக திரும்பி வருகிறாள்; அதன் பிறகு வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு! வருகிறது; அதன் பிறகு புதிய வானமும் புதிய பூபியம் உண்டாகி, புதிய நகரம் பரலோகத்தை விட்டு தேவனிடத்திலிருந்து இறங்கி வருகிறது. அப்பொழுது காலமும் நித்தியமும் ஒன்றாக இணைகிறது.