77. இல்லை, இல்லை! வெளிப்படுத்தல் 7ம் அதிகாரத்தில் 144,000 பேர் முத்திரையிடப்படுவதை யோவான் காண்கிறான். அதன் பிறகு அவன் ஒருவனும் எண்ணக்கூடாத திரளான கூட்டமாகிய ஜனங்களைக் காண்கிறான், அதுதான் மணவாட்டி. அதற்கு... அது... மல்கியா 4ன் ஊழியம் முடிவு பெற்று மணவாட்டி எடுத்துக் கொள்ளப்படுகிறாள், அதன் பிறகு எலியாவும் எலிசாவும் (மோசேக்கு பதிலாக எலிசா என்று சொல்லி விடுகிறார் - தமிழாக்கியோன்) பூமிக்குத் திரும்ப வருகின்றனர். சபையானது உபத்திரவ காலத்தினூடே செல்லும், ஆனால் எலியாவுக்கும் எலிசாவுக்கும் புத்தியில்லாத கன்னிகைகளுடன் எவ்வித சம்பந்தமும் கிடையாது
(இவர்கள் புறஜாதிகள்), அவர் யூதர்களிடம் மட்டுமே அனுப்பப்படுகின்றனர்.