78. இல்லை, அவை ஏழு முத்திரைகளில் வெளிப்படுத்தப்பட்டு விட்டன; இடிமுழக்கங்கள் என்பவை அவ்வளவு தான். அவை எதை வெளிப்படுத்த வேண்டுமென்றால்... ஏழு இடிகள் தங்கள் சத்தங்களை முழங்கின. அவை என்னவென்று யாருமே அறிந்து கொள்ள முடியவில்லை. அவை என்னவென்று யோவான் அறிந்திருந்தான், ஆனால் அவன் அதை எழுத தடை செய்யப்பட்டான். அவர், “ஏழாம் தூதன் தன் நாட்களில் தன் சத்தத்தை முழங்கும் போது, ஏழு இடிமுழக்கங்களின் ஏழு இரகசியங்கள் வெளிப்படுத்தப்படும்” என்றார். ஏழாம் தூதன் என்பவன் ஏழாம் சபை காலத்தின் செய்தியாளன். பாருங்கள்?