79. இப்பொழுது, நான் நம்புகிறேனா என்று அவர்கள் கேட்டிருக்கிறார்கள். வேதவாக்கியங்களை ஆதாரமாகக் கொண்டு என்னால் நிரூபிக்க முடியாது. ஒருக்கால் அத்தகைய நேரம் ஒன்று வரக்கூடும், எனக்குத் தெரியாது. அங்கு ஒருக்கால்... பாருங்கள்? அவ்விதம் நிகழுமானால், அவருடைய வருகை மிகவும் சமீபமாயுள்ளது என்பதை அது காட்டிக்கொடுத்து விடும். ஆனால் அவரோ, “அவர் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வருவார்” என்று கூறியுள்ளார், பாருங்கள்? அவர் யாரிடம் வருகிறாரென்றால். நான் படித்த ரோமியோ ஜூலியட்டின் கதையைப் போல. அவர் இரவில் வந்து தன் மணவாட்டியை கொண்டு போய் விடுகிறார். அவள் ஒரு நொடிப்பொழுதில், ஒரு இமைப்பொழுதில் எடுத்துக் கொள்ளப்படுகிறாள். பாருங்கள்?
80. அவர்கள் ஒன்று கூடுவார்களா என்பது சந்தேகம் தான். ஏனெனில் வேதம், “இரண்டு பேர் படுக்கையில் இருப்பார்கள்; ஒருவனை எடுத்துக் கொள்வேன், மற்றவனைக் கைவிடுவேன்; இரண்டு பேர் வயலில் இருப்பார்கள்; ஒருவனை எடுத்துக் கொள்வேன், மற்றவனைக் கைவிடுவேன்” என்றுரைக்கிறது. பாருங்கள். எனவே அவர்கள் ஒருக்கால்... உலகிலுள்ள மணவாட்டி ஓரிடத்தில் ஒன்றுகூடி எல்லாவற்றையும் பொதுவாக வைத்து அனுபவிக்க மாட்டாள். ஆனால் அவர்களில் சிறு குழுக்கள் உலகம் முழுவதிலும் சிதறிக் கிடக்கும்.
81. நான் நம்புகிறேன், கர்த்தர் என்னை அனுமதிப்பாரானால்; இது அதன் ஒரு சிறு குழு. ஒருக்கால் ஆசியாவில் ஒரு சிறு குழு இருக்கக்கூடும். அன்றொரு நாள் நான் மணவாட்டியின் தரிசனத்தைக் கண்டபோது, அவள் சர்வதேசங்களிலிருந்தும் வந்தவளாயிருந்தாள். எனவே மணவாட்டி ஓரிடத்தில் கூடுவதில்லை, அவள் உலகம் பூராவிலுமிருந்து வந்தவளாயிருப்பாள். அது வார்த்தையை முழுவதுமாக உறுதிப்படுத்துகிறது, வார்த்தை ஒரு போதும் தவறாயிருந்ததில்லை. இதுவரைக்கும் தரிசனமும் தவறாயிருந்ததில்லை, ஏனெனில் அது வார்த்தையின் படி உள்ளது.