82. முடியாது. இப்பொழுது உங்களால் ஒன்றும் செய்ய முடியாது.
83. ஆம், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்ற உண்மையான விசுவாசிகள் மணவாட்டியில் இருப்பார்கள். அவர்கள் தெரிந்து கொள்ளப்பட்டு வெளியே அழைக்கப்பட்டவர்கள். புத்தியில்லாத கன்னிகையிடம் எண்ணெய் இல்லை. எண்ணெய் வைத்திருந்தவர்கள் உள்ளே சென்றனர். ஆனால் அந்த...
84. “பாரத்தை இலகுவாக்க நாங்கள் என்ன செய்யக் கூடும்? ஆம், சகோதரனே, சகோதரியே. இதை எழுதினது யாராயிருப்பினும், எனக்காக ஜெபியுங்கள். நீங்கள் செய்யக் கூடிய மிகச் சிறப்பான காரியம் அதுவே. உங்களுக்கு நன்றி. எனக்குப் பணம் தேவையில்லை. நான்... என் தேவைகளை கவனித்துக் கொள்ள போதிய பணம் வருகிறது. அதற்காக நான் கர்த்தருக்கு நன்றியுள்ளவனாயிருக்கிறேன். எனக்கு உடைகள் தேவையில்லை. நான் உடுக்கும். உடைகளை அநேக முறை ஜனங்கள் எனக்கு வாங்கித்தந்து விடுகின்றனர். அவர்கள்... என். குடும்பத்தை போஷிக்க எனக்குப் போதிய பணம் கிடைக்கிறது; அவ்வளவு தான் நமக்குத் தேவை. என்ன தோன்றுகிறதென்றால்... எனக்காக நீங்கள் ஜெபிக்கலாம், ஏனெனில் எனக்கு ஆவிக்குரிய உதவி நிச்சயம் தேவை.