85, சகோதரனே... இதற்கு நான், களைப்புற்று நல்லுணர்வு இல்லாத நேரத்தில் பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது உங்கள் கேள்விக்கு பதில் அளிக்கும் என்று நம்புகிறேன். உங்களுக்கு நான் மிகுந்த நன்றி செலுத்துகிறேன். அவருக்கு நான் கூற நினைத்திருந்த பதிலை மறந்து விட்டேன்.
86. “பிரசங்கிமார்கள், போதகர்கள் இவர்களுக்கு இழந்து போன ஆத்துமாக்களின் பேரில் ஏன் பாரம் இல்லை? அது எழுப்புதல் இல்லாததன் காரணமாக என்று எண்ணுகிறேன். இயேசு வரும் வரைக்கும் நமக்கு இழந்து போன ஆத்துமாக்களின் பேரில் ஆர்வத்தைத் தர நாம் தேவனிடம் இப்பொழுதும் ஜெபிக்க முயல வேண்டும்.