“எல்லாரும் அந்நிய பாஷைகளைப் பேசுகிறார்களா? அந்த வசனம் தான் அது என்று எண்ணினேன். ஆனால் எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. இவ்வாறு களைப்புற்றிருப்பதனால், ஆனால்... இல்லை! எல்லாரும் அந்நிய பாஷைகளைப் பேசுகிறதில்லை; எல்லாரும் வியாக்கியானம் பண்ணுகிறதில்லை; எல்லாரும் அதைச் சொல்லுகிறதில்லை. அடுத்த அதிகாரத்தில் “நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை” பாருங்கள்? பவுல் அவர்களிடம், “எல்லாரும் அந்நிய பாஷைகளைப் பேசுகிறார்களா? நிச்சயமாக இல்லை. எல்லாரும் தீர்க்கதரிசனம் உரைக்கிறார்களா? இல்லை. ஆனால், முக்கியமான வரங்களை நாடுங்கள்; இன்னும் அதிக மேன்மையான வழியையும் உங்களுக்குக் காண்பிக்கிறேன்” என்கிறான். பாருங்கள் எல்லாருமே அந்நிய பாஷைகள் பேசுகிறதில்லை.
நீங்கள் இங்கிருந்து செல்வதற்கு முன்பு, மற்றொரு சிந்தனைகளைப் பகுத்தறிதல் ஆராதனை ஒன்றை நடத்தப் போகிறீர்களா? இல்லையென்றால், தனிப்பட்ட பேட்டி ஒன்றைப் பெற வாய்ப்புண்டா?
உங்களுக்கு அது கிடைத்ததென்று நினைக்கிறேன். இப்பொழுது, எனக்கு இன்னும் அநேக கேள்விகள் இல்லை. கூடுமானால் இவைகளுக்கு பதில் கூறி முடிக்க பிரயாசப்படுகிறேன்.