Q.4. ஞாயிறு வாரத்தின் முதல் நாள், சனிக்கிழமை ஏழாவதுநாள் இதை நீர் விளக்கமுடியுமா? வாரத்தின் முதல் நாளான ஞாயிற்றுகிழமையில் கிறிஸ்தவர்கள் சபைக்குச் செல்கின்றனர். வாரத்தின் ஏழாம் நாளான சனிக்கிழமையில் அவர்கள் செல்ல வேண்டுமல்லவா?
127. நல்லது, இப்பொழுது அருமை நண்பரே, இதைக் கேட்ட எவராயினும், இது ஒரு அருமையான கேள்வி. இது ஆயிரக்கணக்கான மாணவர்கள் மத்தியில் விவாதிக்கப்படும் ஒரு பழைய கேள்வியாகும். ஆனால் இன்றிரவில் இதைக் குறித்த என்னுடைய கருத்தை நான் கூறட்டும். நீங்கள் பாருங்கள், அதைத்தான் என்னால் செய்யகூடும். நான் சரியாயில்லையெனில், நல்லது, நீங்கள் என்னுடனே பொறுத்துக் கொள்ளுங்கள்; தேவன் என்னை மன்னிப்பாராக, நீங்கள் பாருங்கள் நான் - நான் அதைத் தவறுபடுத்துவேனானால்...
128. இப்பொழுது நியாயப்பிரமாணத்தைப் பொறுத் தவரையில்... இப்பொழுது, அநேகமாக ஒரு ஏழாம் நாள் ஆசரிப்புக் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு நபர் இங்கு அமர்ந்திருக்கிறார். நானும் முதன் முதலாக ஏழாம் நாள் ஆசரிப்புக் கொள்கையை படித்திருந்தேன். அது சரி. ஏழாம் நாள் ஆசரிப்புக் காரியத்தைத்தான் நான் முதலாவதாகப் படித்திருந்தேன். 'சனிக்கிழமைதான் ஏழாம் நாள்” என்று என்னிடம் கூறினார்கள், சகோதரனே, அது யூத மாத அட்டவணையின்படியாக இருந்தது. ரோம கால அட்டவணை அதனுடன் பொருந்தவில்லை, ஆகையால் உண்மையாகவே சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமையாக இருக்க வேண்டியதாயிற்று. நல்லது, நான் சரியென்று நினைத்திருந்த ஒன்றை அவர்கள் என்னிடம் அளித்திருந் தனர். அவர்களது ஏட்டுச்சுவடிகளை நான் சில காலம் படித்துக்கொண்டிருந்தவரை அது சரி என்று நான் எண்ணியிருந்தேன், நூறு சதவீதம், ஆனால் ஒரு நாள் வேதத்தைக்கையில் எடுத்தபோது, வித்தியாசமாக இருப்பதை நான் கண்டேன். பாருங்கள்?
129. இப்பொழுது, வாரச்சக்கரத்தை, சுழற்சியைப் பொருத்தவரை சனிக்கிழமை ஓய்வு நாளாக இருக்கின்றது. இப்பொழுது, நமக்கு தெரியாது. அது மாற்றப்பட்டுள்ளது, நீங்கள் அறியக்கூடாத நிறைய மாற்றங்கள் நமக்கு நிகழ்ந்துள்ளது. பாருங்கள்? ஏனென்றால்... இப்பொழுது, யூதர்கள் கூறுகிறார்கள் நாம் இப்பொழுது... இப்பொழுது அவர்களுடைய அட்டவணைச் சுழற்சிப் பிரகாரமாக நாம் சரியாக 1970'ல் இருக்கிறோம். ரோமகால அட்டவணை 1953 என்று காட்டுகின்றது. அதை எங்கோ கொண்டு செல்கின்ற வேறொரு கால அட்டவணை அவர்கள் வைத்துள்ளனர். ஆனால் அதுதான் கிறிஸ்துவ மதத்திற்கு சரியான ஆதாரத்தைக் காட்டுகின்றது, எல்லாம் கிறிஸ்துவின் பிறப்பை ஒட்டி அமைந்துள்ளது. நீங்கள் பாருங்கள், அங்கேயிருந்துதான் நாம் எடுக்கின்றோம்.
130. இப்பொழுது, ஏழாம் நாளாய் இருக்கும் பட்சத்தில், அங்கே அநேக பெந்தெகோஸ்தே மக்கள் ஓய்வு நாளை மிகத் தீவிரமாக ஆசரிக் கின்றனர், சனிக்கிழமையை ஓய்வு நாளாக வைத்திருக்கின்றனர். இப்பொழுது அவர்கள் “ஞாயிற்றுக் கிழமையை ஓய்வு நாளாக வைத்திருக்க வேண்டுமென்று வேதத்தில் ஒரு வார்த்தை கூட இல்லை” என்று கூறுகின்றனர். இப்பொழுது, புதிய ஏற்பாட்டில் ஓய்வு நாளைக் குறித்தும் அதையே நான் கூறுவேன், பாருங்கள்? இப்பொழுது, சனிக்கிழமை, யூதர்களுக்கு கொடுக்கப்பட்ட ஓய்வு நாளாய் இருந்தது. இப்பொழுது, இடைப்பட்ட வேளையில் அது கொடுக்கப்பட்டது.
131. இப்பொழுது, இது வேறு கேள்வி கேட்கப்பட விழைகின்றதாய் இருக்கின்றது. ஆனால் இப்பொழுது கவனியுங்கள். தேவன் ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தபோது, வேதத்தைப் பொருத்தவரையில் சுமார் ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளாக ஏழாவது நாளானது கடைபிடிக்கப் படவில்லை. ஆகவே வனாந்திரத்தில் இஸ்ரவேலிற்கு தேவன் ஏழாவது நாளை ஒரு அடையாளமாக அளித்தார், தேவனுக்கும்…
132. ஆகவே தேவன் ஏழாம் நாளிலே ஓய்திருந்தார், அவருடைய ஓய்வு நாளின் ஞாபகச்சின்னம் (memorial). நான் அதை ஏன் கூறுகிறேனென்றால் இந்தக் கேள்வியைக் கேட்ட ஏழாம் நாள் ஆசரிப்பு கூட்டத்தின் சகோதரனோ அல்லது சகோதரிக்கு இது ஏதுவாயிருக்கும், அவர்கள் ஒரு அருமையான சபையை வைத்திருக்கின்றனர். ஆகவே இப்பொழுது கவனியுங்கள், இந்த கேள்வியின் பேரில் அவர்களுடன் இது சிறிதளவு வேறுபடுகின்றது.
133. தேவன் ஏழாம் நாளை பரிசுத்தமாக்கினார். ஆறு நாட்கள் மனிதனுடையதாய் இருந்தது. ஏழாம் நாள் தேவனுடைய ஓய்வு நாளாய் இருந்தது, அது ஆயிர வருட அரசாட்சிக்கு நிழலாய் இருக்கின்றது. இப்பொழுது இது எப்படி பொருந்துகின்றது என்பதைக் கவனியுங்கள். இயேசு பூமியில் வந்தபொழுது, அவர் ஓய்வு நாளைக் கைக்கொள்ள வில்லை என்று சிலுவையில் அறைந்தார்கள்; இரண்டு குற்றச் சாட்டுகள்தான் இயேசுவின் மீது கூறப்பட்டன. அது என்னவென்றால் “அவர் ஓய்வு நாள் ஆசரிப்பை மீறினார், தம்மை தேவனாக்கிக் கொண்டார்' என்பதே. அவர் தாம் ஓய்வுநாளின் தேவன் என்று கூறினார், அவர்... அவர் தேவனின் ஓய்வு நாளும் கூட, அவர் தேவன். ஆகவே அவர் மேல் குற்றம் சுமத்த அவர்களால் முடியாதிருந்தது.
134. இப்பொழுது, நீங்கள் எந்த நாளை வைத்திருக்கவேண்டும் என்று இதை நான் உங்களுக்குத் தெளிவாக்கட்டும், நான் இதை உங்கள் நன்மைக்கென்று கேட்கிறேன். அதைக்குறித்த வேதவாக்கியம் உள்ளதா?
சகோதரன் பிரன்ஹாம், யூதர்கள் சனிக்கிழமையை வைத்திருப்பது போல நாம் ஞாயிற்றுக்கிழமையை ஆசரிக்க வேண்டும் என்று நமக்கு கூறும் வேதவாக்கியம் ஏதாகிலும் உண்டா?
135. இல்லை, ஐயா, அவ்வாறு இல்லை. வேதத்தில் ஒரு வசனம் கூட இல்லை, சனிக்கிழமையா அல்லது ஞாயிற்றுக் கிழமையா என்று நமக்கு புதிய ஏற்பாட்டில் ஒன்றும் இல்லை. ஆனால் நாம் ஞாயிற்றுக் கிழமையை ஆசரிக்கும் காரணம் என்னவென்றால் அது உயிர்த்தெழுதலின் நினைவுச் சின்னமாக உள்ளது. வேறொன்றுமில்லை...
136. “ரோமன் கத்தோலிக்க சபை அதைச் செய்தது” என்று இப்பொழுது நீங்கள் கூறப்போகிறீர்கள். அவர்கள் அதைச் செய்ததாக உரிமை கோருகிறார்கள், அப்படி அவர்கள் செய்திருப்பார்களானால், பரிசுத்த பவுல் ரோமன் கத்தோலிக்கனாயிருப்பான், அவ்வாறே பேதுரு, யோவான், யாக்கோபும் மற்ற அனைவரும் இருந்திருக்கவேண்டும். ஏனென்றால் அவர்கள் வாரத்தின் முதல் நாளிலே ஆராதிக்க கூடினார்கள். ஆகையால், சரித்திர ஆராய்ச்சியாளர்களைப் பொருத்தவரையில் ஒரு கிறிஸ்தவ யூதனுக்கும், வைதீக யூதனுக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில் (இருவரும் ஒரே ஜெப ஆலயத்திற்கு சென்றனர்) ஒருவன் சனிக்கிழமை சென்றான் (இயேசுவின் உயிர்த்தெழுதலை மறுதலிப்பவன்) வேறொருவன் ஞாயிற்றுக்கிழமையன்று செல்வான் (இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்று விசுவாசிப் பவன்) அதுதான் முத்திரை. அது அவ்வாறே இருக்கவேண்டும், அது இன்னும் ஒரு முத்திரையாயிருக் கிறது, அது மிருகத்தின் முத்திரையாக வெளிவரலாம்.
137. இப்பொழுது அதை எனக்கு... ஏழாம் நாள் ஆசாரிப்பு கூட்ட சகோதரர் அதுதான் தேவனுடைய முத்திரை என்று என்ணுகிறதாக நான் கேள்விப்பட்டேன். அவர்கள், “நீ ஓய்வு நாளை கைகொள்வதன் மூலம் முத்தரிக்கப்படுகிறாய்” என்று கூறுகின்றனர். அவ்வாறு வேதாகமம் கூறுகிறதாக ஒரு வேதவாக்கியம் கூட கிடையாது.
138. நீங்கள் முத்தரிக்கப்பட்டதாக கூறும் ஒரு வேதவாக்கியம் இங்கே உள்ளது. எபேசியர் 4:30, “அன்றியும் நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தாதிருங்கள்” என்று கூறுகிறது, பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம்.
139. பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம்தான் தேவனுடைய முத்திரை என்பதை நான் இப்பொழுது உங்களுக்கு நிரூபிப்பேன். பாருங்கள்? அதுதான் ஆவியின் ஞானஸ்நானம், அதுதான் தேவனுடைய முத்திரை யாகும். இப்பொழுது, ஏசாயா 28ல் அவர், “கற்பனையின்மேல் கற்பனையும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும், அங்கே கொஞ்சமும்,” என்று கூறினார்.
140. இப்பொழுது என் அன்பு நண்பனே, இப்பொழுது கவனியுங்கள். இப்பொழுது, தங்கள் வேலைகளை விட்டுவிடுபவர்கள்... பாருங்கள், மனிதர் தங்களைத் தாங்களே இரட்சித்துக் கொள்ளும்படி ஏதோ வொன்றைக் கண்டுபிடிக்க முயற்சித்துக் கொண்டுள்ளனர். அதைக் குறித்துச் செய்யும் படியாக உங்களால் கூடுமானகாரியம் ஒன்றுமில்லை. நீங்கள் கிருபையினால் இரட்சிக்கப் பட்டீர்கள். உங்களை அழைப்பவரும் தேவனே, உங்களை இரட்சிக்கிறவரும் தேவனே. நீங்கள் தேவனுடைய அடிச்சுவடுகளை மாத்திரம் பின்பற்றுகிறீர்கள், அவ்வளவே. உங்களால் ஒன்றும் கூறமுடியாது. அதுதான் மனிதனின் சுபாவமாகும். அவர்கள் மாம்சம் புசிப்பதை நிறுத்த முயற்சிக்கின்றனர், ஓய்வு நாட்களை ஆசரிக்க முயற்சிக்கின்றனர், “நீ இதை விட்டுவிட்டால்” என்கின்றனர். அது... நீங்கள் மாம்சம் புசியாதிருப்பதால் இரட்சிக்கப்படவில்லை. நீங்கள் இதனால், அதனால் அல்லது அந்த மற்றதால் இரட்சிக்கப்படவில்லை. நீங்கள் கிருபையால் இரட்சிக்கப்பட்டீர்கள். தேவன் தமது கிருபையால் அந்த மாம்சத்தை, “நித்திய ஜீவனை” அளிக்கிறார். நான் என்ன கருதுகிறேன் என்று நீங்கள் காண்கிறீர்களா? நித்திய ஜீவன்தான் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் ஆகும்.
141. இதை நான் உங்களுக்குக் காண்பிக்கட்டும். ஓய்வு நாள் (Sabbath) என்னும் வார்த்தையின் அர்த்தம் என்ன? தெரிந்தவர்கள் யாராவது ஒருவர் உங்கள் கைகளை உயர்த்துங்கள்? ஓய்வு நாள், (Sabbath)? (ஒரு சகோதரி “இளைப்பாறுதல்” என்கிறார்கள் - ஆசி) இளைப்பாறுதல். சரியாக. ஓ-ய்-வு-நா-ள். S-a-b-b-a-th, ஓய்வு நாள் என்றால் “இ-ளை-ப்-பா-று-த-ல்” R-e-S-t, ஓய்வு நாள். உங்கள் வேதத்தை எடுத்து ஓரக் குறிப்பில் “இளைப்பாறுதல்” நாள் என்ன என்பதை சிறிது பாருங்கள். இப்பொழுது நாம் விரைவாக எபிரெயர் 4ஆம் அதிகாரத்திற்கு செல்வோம். நாம்...
142. இது என்னுடைய கடைசி கேள்வி. சகோதரன் நெவில் சிலவற்றை அங்கு வைத்துள்ளார். சில கேள்விகள் சுருக்கமானவை என்று எனக்குத் தெரியும். ஆகையால் உங்களை நான் நீண்ட நேரம் வைத்திருக்க மாட்டேன். நான் அவைகளை எடுக்கும் வரையில் சற்று பொறுத்துக் கொள்ளுங்கள்.
143. இப்பொழுது இளைப்பாறுதல் என்ற வார்த்தையை நீங்கள் காணும் போது அதன் அர்த்தம் ஓய்வுநாள் (Sabbath) என்று அறிவீர்கள்.
144. இப்பொழுது புதிய ஏற்பாட்டில் இங்கே, இயேசு பரிசுத்த மத்தேயு 5ஆம் அதிகாரத்தில் இவ்வாறு ஆரம்பிக்கின்றார். “விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப் பட்டிருக்கிறீர்கள்” அது என்ன? நியாயப்பிரமாணம், கட்டளைகள். “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும்” அவர் அதை மாற்றினார், அப்படித்தானே? “பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள், நீங்கள் கொலை செய்யக்கூடாது', ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்!” அதை மாற்றினார், மாற்றினார் அல்லவா? (அவர் பிரமாணத்தை மாற்றவில்லையா?) அது சரி. அவர், “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக் கொள்பவன் கொலைபாதகத்திற்கு உள்ளானவனாயிருக்கிறான்” என்றார். அது ஒருபோதும் பழைய ஏற்பாட்டில் இல்லை, அது புதிய ஏற்பாடு. அவர் அதற்கு மேலாகக் கடந்து சென்றார். பாருங்கள்? அவர் மேற்சென்று அந்த கட்டளைகளைக் கொடுத்தார். ஆனால் அவர் நான்காவதைக் கடந்தார், அதை விட்டுவிட்டார். அதுதான் ஏழாவது நாளாய் இருந்தது. இப்பொழுது இங்கே 7ஆம் அதிகாரத்தில்...
145. அவர் மலைப்பிரசங்கத்தில் கூறினவைகள் இதோ இங்கிருக்கின்றன: அவர், “இதைச் செய், இதை நீ செய்யாதே, என்று பழைய காலத்தில் கூறப்பட்டதை நீங்கள் கேட்டிருப்பீர்கள், “நான் உங்களுக்கு வித்தியாசமானதைக் கூறுகிறேன் என்றார். “பல்லுக்கு பல், கண்ணுக்கு கண்” என்று அவர்கள் கூறுகிறதைக் கேட்டிருக்கிறீர்கள், ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது! அவர்கள் வித்தியாசமாகக் கூறினதைக் கேட்டிருக்கிறீர்கள், ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது!”
146. எல்லாவற்றிற்கும் பிறகு கடைசியாக, அவர் நான்காவது கட்டளையை விட்டுவிட்டார், அது என்னவென்றால் “ஓய்வு நாளை பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக” என்பதாகும். இப்பொழுது அவர் கூறினார்:
“வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்கள் ஆத்துமாவிற்கு இளைப்பாறுதல் தருவேன்”
147. இப்பொழுது கவனியுங்கள், “விபசாரம் செய்கிறவர்கள் கல்லெறியப்படவேண்டும்,” அவர்கள் விபசாரம் செய்வதாக சரியாகக் கண்டு பிடிக்கப்படவேண்டும். அது சரிதானே? அது சரீரப்பூர்வமாக செய்யப்படவேண்டும். “கொலை செய்கிறவர்கள்”, அவன் ஒரு கொலை காரனாக இருக்கவேண்டும்.
148. ஆனால் இயேசு, “ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும்” என்றார், அவனுடைய ஆத்துமாவும், ஆவியும் - இப்பொழுது சரீரத்தில் அல்ல. அவன் ஆத்துமா மீட்கப்பட்டது, அப்பொழுது அவ்வாறே இருக்கவில்லை; அது (நியாயப்பிரமாணம் - தமிழாக்கியோன்) ஒரு பள்ளிக்கூட ஆசிரியரைப் போல, பாருங்கள், நியாயப்பிரமாணம். இப்பொழுது அவர், “ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் ஏற்கனவே அவளோடே விபசாரஞ் செய்தாயிற்று” என்றார். இப்பொழுது அவர், “கொலை செய்யாதிருப்பாயாக என்று அவர்கள் கூறினதைக் கேட்டிருக்கிறீர்கள், ஆனால் நான் கூறுகிறேன், தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக் கொள்ளுகிறவன் ஏற்கெனவே கொலைபாதகத்துக்கு உள்ளானவனாயிருக்கிறான்' என்று கூறினார்.
149. இப்பொழுது அவர் ஓய்வுநாளைக் குறித்து வேறு வார்த்தைகளில் கூறுகிறார், அவர் கூறினார்.
வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் (rest) தருவேன், உங்கள் ஆத்துமாக்களுக்கு ஓய்வுநாள். (உங்கள் சரீரத்திற்கு அல்ல, உங்கள் ஆத்துமாவிற்கு)
150. இப்பொழுது கேளுங்கள் - பவுலிற்கு செவிகொடுங்கள். உங்களால் சற்று முடிந்தால்... இப்பொழுது கவனியுங்கள், இங்கும் மற்ற எல்லா இடத்திலும், இங்கேயும் கூட உஷ்ணமாய் உள்ளது.
ஆனால் இப்பொழுது, இதை சரிபடுத்திக்கொள்ள மிக கவனமாகக் கேளுங்கள். இப்பொழுது பவுல், எபிரெயருக்கு எழுதுகிறான். அந்த எபிரெயர்கள் யார்? பதில் கூறுங்கள். யூதர்கள். அது சரிதானே? இப்பொழுது, அவர்கள் பிரமாணத்தைக் கைக்கொண்டவர்கள், ஓய்வு நாளைக் கைக்கொண்டவர்கள். அது சரியா? சகோதரனே, பிரசங்கியே, அது சரிதானே? அவர்கள் ஓய்வு நாளைக் கைக்கொண்டவர்கள், அவர்கள் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டவர்கள், அது சரி.'
151. இப்பொழுது, பவுல் யூதர்களுக்கு நியாயப்பிரமாணம் எதற்கு நிழலாக இருந்தது என்று நிழல்களாகவும், அடையாளமாகவும், காண்பிக்கின்றான். “நியாயப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் நிழலாய் மாத்திரம் இருக்கிறபடியால்” என்று கூறி, ஓரிடத்தில் இன்னும் மேலே சென்று அது சந்திரனும் சூரியனும் போல என்று அங்கே விளக்குகிறான். வேறொரு நாட்டின் மீது அல்லது வேறொரு உலகத்தின் மீது பிரகாசிக்கும் சூரியனின் ஒரு நிழல்தான் சந்திரன், அது இங்கே பிரதிபலிக்கின்றது. இப்பொழுது... ஆனால் எபிரெயர் 9.
152. இப்பொழுது கவனியுங்கள் எபிரெயர் 4ல் அவர் ஓய்வுநாள் ஆய்வுப்பொருளிற்கு வருகிறார். இப்பொழுது பாருங்கள்.
ஆனபடியினாலே, அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதற்கேதுவான வாக்குத்தத்தம் நமக் குண்டாயிருக்க...
153. இப்பொழுது, பவுல் ஓய்வு நாளை ஆசரிக்கிற, கைக்கொள்ளுகின்ற மக்களிடையே பேசுகின்றான். வேறு விதத்தில் கூறுவோமானால், “ஆனபடியினாலே, அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதற்கேதுவான வாக்குத்தத்தம் நமக்குண்டாயிருக்க... பயந்திருக் கக்கடவோம்”, அல்லது நீங்கள் வேதத்தில் உள்ள குறிப்புகளை கவனித்தீர்களானால், என்னுடைய ஸ்கோஃபில்ட் (Scoffield) வேதாகமத்தில் “ஜே” (J) என்றிருக்கிறது, அது ஒரு “ஓய்வுநாளைக் கைகொள்ளுதல்” பாருங்கள்? அது சரி.
ஆனபடியினாலே, அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதற்கான வாக்குத்தத்தம் நமக்குண்டாயிருக்க பின் வாங்கிப் போனவனாக காணப்படாதபடிக்கு பயந்திருக்க கடவோம்.
ஏனெனில் சுவிசேஷம் அவர்களுக்கு அறிவிக்கப் பட்டது போல் நமக்கும் அறிவிக்கப்பட்டது; (அங்கே நியாயப் பிரமாணத்தின்) கேட்டவர்கள் விசுவாசமில்லாமல் கேட்ட படியினால், அவர்கள் கேட்ட வசனம் அவர்களுக்குப் பிரயோஜனப்படவில்லை.
154. இப்பொழுது, அது நியாயப்பிரமாணத்தின் கீழிருந்த நாள் ஆகும். அவர்கள் விசுவாசத்தைப் பெற்றிருக்கவில்லை. ஏனெனில் அதை எழுப்ப எந்த அடிப்படையும் இல்லை.
155. இப்பொழுது “அவருடைய” இளைப்பாறுதல். இப்பொழுது, “அவருடைய” அது கிறிஸ்துவின் இளைப்பாறுதல். சரி, அவருடைய இளைப்பாறுதல் அவருடைய “ஓய்வு'. நான் ஒவ்வொரு முறையும் இளைப்பாறுதல்” (Rest) என்று அங்கு எழுதப்பட்டுள்ளபடி நான் உபயோகப்படுத்துவதற்குப் பதிலாக, ஒரு நாளை ஆசரிப்பது என்ன என்பதை நீங்கள் புரிந்துகொள்ளும்படியாக “ஓய்வு' என்னும் பதத்தை உபயோகப்படுத்தப்போகிறேன்.
விசுவாசித்தவர்களாகிய நாமோ அந்த ஓய்வில், இளைப்பாறுதலில் பிரவேசிக்கிறோம்; அவருடைய கிரியைகள் உலகத்தோற்றமுதல் முடிந்திருந்தும்: இவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லையென்று என்னுடைய கோபத்திலே...?... ஆணையிட்டேன் என்றார். (இப்பொழுது, பரிசுத்தமாக்கப்பட்ட நாளைக் குறித்து பவுலின் செய்தியைக் கவனியுங்கள்)
மேலும், தேவன் தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்து ஏழாம் நாளிலே இளைப்பாறுதல் அல்லது ஓய்வு... (அது சரியா? நான் அதை அங்கு குறிப்பிட விரும்புகிறேன், பாருங்கள்)
மேலும், தேவன் தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்து ஏழாம் நாளிலே இளைப்பாறுதல் என்று ஏழாம்நாளைக் குறித்து ஓரிடத்தில் (நியாயப் பிரமாணத்தில்) சொல்லியிருக்கிறார்.
156. அதுதான் அவருடைய ஏழாவது நாளாகும். இப்பொழுது, தேவன் அவர்களுக்கு அந்த நாளை கொடுத்தார் என்று பவுல் ஒப்புக்கொள்ளுகிறான். அதுதான் அந்த ஏழாவது நாளாகும். தேவன் ஏழாம் நாளை ஓய்வாக்கினார், அதை அவர் ஆசீர்வதித்தார், அதைத் பரிசுத்தப்படுத்தினார், அதைப் பரிசுத்தமாக்கினார், அதை ஒரு இளைப்பாறும் நாளாக்கினார். தேவன் தம்முடைய கிரியைகளெல்லாம் முடித்து, ஓய்ந்திருந்தார்.
அன்றியும், அவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லை என்றும் அந்த இடத்திலேதானே சொல்லியிருக்கிறார். (இயேசு பேசிக்கொண்டிருக்கிறார்)
157. இப்பொழுது, வேறொரு ஓய்வு எங்கோ இருக்கின்றது. அது எங்குள்ளது? இப்பொழுது, “தேவனுடைய இளைப்பாறுதல்” (“God's Rest”) அது ஏழாவது நாள் என்பதை நீங்கள் இங்கே ஞாபகங்கொள்ளுங்கள். பவுல், “அவர்கள் அதை ஒரு குறிப்பிட்ட இடத்தில் பெற்றிருந்தனர்”, என்று கூறுகிறான். ஆனால் அவன் மறுபடியும் இங்கே, 'அவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் (My Rest) பிரவேசிப்பார்களானால்” என்று கூறுகிறான் - மத்தேயுவில் இயேசுவைப் பற்றி பேசுகின்றதே, சரியாக அதுவே.
ஆகையால், சிலர் அதில் பிரவேசிப்பது இன்னும் வரப்போகிற காரியமாயிருக்கிறபடியினாலும், சுவிசேஷத்தை முதலாவது கேட்டவர்கள் கீழ்ப்படியாமையினாலே அதில் பிரவேசியாமற் போன படியினாலும், மறுபடியும்...
158. இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். கவனிக்கின்ற அனைவரும் ஆமென் என்று கூறுங்கள் (சபையார் 'ஆமென்' என்கிறார்கள் - ஆசி) கவனியுங்கள்:
மறுபடியும், வெகுகாலத்திற்குப்பின்...
159. அவர் இங்கே ஒரு நாளைக் குறித்திருக்கிறார். அது என்ன? நீங்கள் எல்லாரும் அதை அப்படியே கூறுங்கள். ஓய்வு நாள்! அது சரியா? அவர், இங்கே, இந்த இடத்தில், வாரத்தின் ஏழாவது நாளை ஓய்வு நாள் என்று குறித்தார்.
இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில் உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று வெகு காலத்திற்குப் பின்பு தாவீதின் (சங்கீதத்தில்), சங்கீதத்திலே சொல்லியிருக்கிறபடி, (இயேசு வருவது, நீங்கள் பாருங்கள் அவரது முதலாம் வருகை) இன்று என்று சொல்வதினாலே பின்னும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார். (வேறொரு வருகை வரவிருக்கின்றது: சரீரப் பிரகாரமானதல்ல, ஆவிக்குரியது)
160. இப்பொழுது, கவனியுங்கள். ஆகையால், 'நாங்கள் ஏழாவது நாளையும் பெற்றுள்ளோம்” என்று நீங்கள் கூறலாம். இப்பொழுது, ஒரு நிமிடம் பொறுத்திருப்போம். நாம் அடுத்த வசனத்தை வாசிப்போம். பாருங்கள், நாம் அதை மிக வேகமாகப் படிக்க வேண்டாம். சரி.
யோசுவா (ஆங்கில வேதாகமத்தில் 'இயேசு' என்றுள்ளது) அவர்களை இளைப்பாறுதலுக் குட்படுத் தியிருந்தால், இளைப்பாறும் நாள், இளைப்பாறுதல் பின்பு அவர் பிறகு வேறொரு நாளைக் குறித்துச் சொல்லியிருக்க மாட்டாரே
161. அவர் நியாயப்பிரமாணத்தை மாற்றியபோது, நியாயப்பிரமாணத்திலிருந்து கிருபைக்கு மாற்றியபோது, அவர்களுக்கு இளைப்பாற ஒரு நாளை, இளைப்பாறும் நாளை, ஒரு குறிப்பிட்ட நாளை அவர் அளிக்காமல் இருந்திருப்பாரா? ஆனால் அவரோ ஒய்வு நாளைக்குறித்து ஒன்றுமே கூறவில்லை. அவர் ஞாயிற்றுக்கிழமையைக் குறித்து ஓன்றும் கூறவில்லை. அவர் சனிக்கிழமையைக் குறித்தும் ஒன்றுமே கூறவில்லை. ஆனால் அவர் கூறியது இதோ இங்குள்ளது, என்று பவுல் கூறுகிறான். இப்பொழுது கவனியுங்கள். “அங்கே...' 19வது வசனம்... அல்லது 9-வது வசனம்.
ஆகையால், தேவனுடைய ஜனங்களுக்கு இளைப்பாறுகிற காலம் இனிவருகிறதாயிருக்கிறது. (அது இந்த நாள்)... வர விருக்கிறது... தேவனுடைய ஜனங்களுக்கு இளைப்பாறுகிற காலம்.
ஏனெனில், அவருடைய ('வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே, நீங்கள் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதலைத் தருவேன்” - இயேசுவின் இளைப்பாறுதல்.) இளைப்பாறுதலில் பிரவேசித்தவன் (நீங்கள் அல்லது நான்), தேவன் தம்முடைய கிரியைகளை முடித்து ஓய்ந்ததுபோல, தானும் (நீங்கள் அல்லது நான்) தன் கிரியைகளை முடித்து ஓய்ந்திருப்பான்.
162. ஆமென்! இதோ உங்கள் ஓய்வு. அது சரியா?
ஆகையால், அந்தத் திருஷ்டாந்தத்தின்படி, ஒருவனாகிலும் கீழ்ப்படியாமையினாலே (நாட்கள், மற்றவை பாருங்கள்) விழுந்துபோகாதபடிக்கு, நாம் இந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்க ஜாக்கிரதையாயிருக் கக்கடவோம். (பவுல் கூறினான்)
தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக் களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக்குத் துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது
அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்று மில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.
163. இப்பொழுது, கவனியுங்கள், தேவன் ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். அவர் ஏழாம் நாளைச் சிருஷ்டித்து, அதை நினைவுகூரும்படியாய் யூதருக்கு அளித்தார். பாருங்கள், நான் இப்பொழுது பவுல் பேசினதைக் கூறிக்கொண்டிருக் கிறேன். அதைக் கேளுங்கள். இப்பொழுது, அவன் அதைக் கொண்டு வருகிறான் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அவனுக்கு உரிமையுண்டு என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? இப்பொழுது, அவன் கலாத்தியர் 1:8ல் கூறியது என்ன?
நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத் தையல்லாமல், நாங்களாவது வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.
பாருங்கள், சுவிசேஷங்கள் வெளிப்படையாய் இருக்கின்றன. இப்பொழுது, கவனியுங்கள்.
164. 'நல்லது, சகோதரன் பிரன்ஹாம், இப்பொழுது நான் என்ன செய்யட்டும், இயேசுகிறிஸ்துவையே விசுவாசிக்க வேண்டுமா?” இல்லை. அது இளைப்பாறுதல் அல்ல.
165. இப்பொழுது, அது என்னவென்று அறிய நீங்கள் விரும்பினால்... கிறிஸ்தவனின் இளைப்பாறுதல் என்பது என்னவென்று அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள் அனைவரும் “ஆமென்” என்று கூறுங்கள். (சபையார் “ஆமென்” என்று கூறுகின்றனர்- ஆசி) இப்பொழுது ஏசாயா 28, அதைக் குறித்துக்கொள்ள விரும்புவோர் அதைக் குறித்துக்கொள்ளலாம். அவன், 'கற்பனையின்மேல் கற்பனையும் - கற்பனை” என்று பேசுகின்றான். “கற்பனையின்மேல் கற்பனையும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமும், நலமானது என்னவோ அதை பிடித்துக்கொள்ளுங்கள்” என்று கூறுகிறான், வரயிருக்கின்ற இளைப்பாறுதல், ஓய்வின் காலத்தைக் குறித்து இங்கே தீர்க்கதரிசி பேசிக் கொண்டிருக்கிறான். நீங்கள் அந்த முழு அதிகாரத்தையும் வாசித்து பாருங்கள், பாருங்கள். அவன் “அந்த ஓய்வு நாள் என்பது ஓய்ந்து போகும் காலங்கள் வரும்”, என்று கூறுகிறான். ஆகையால், அவர்கள் திங்கட்கிழமை காலணிகளையோ அல்லது மற்றவைகளையோவிற்றது போல் சனிக்கிழமையிலும் விற்பனை செய்வார்கள். நீங்கள் அதைக் காண்கிறீர்களா? அவன், “இந்த அடையாளம் எப்பொழுது இருக்கும்?” என்றான். அவன்,
“கற்பனையின் மேல் கற்பனையும், பிராமணத்தின் மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும், அங்கே கொஞ்சமும் என்பார்கள்: நலமாய்த் தோன்றுகிறது எதுவோ அதைப் பிடித்தக் கொள்ளுங்கள்.
ஏனெனில் பரியாச உதடுகளினாலும் அந்நிய பாஷைகளினாலும் இந்த ஜனத்தோடு பேசுவார்.
அவர்கள் எதற்குள் பிரவேசிக்க வேண்டுமென்று நான் கூறினேனோ இதுவே அந்த ஓய்வு, அந்த இளைப்பாறுதல். அவர்கள் இது எல்லாவற்றிற்கெல்லாம் தங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தி, தங்கள் தலைகளைத் துலக்கி, அதைப் புறக்கணித்தார்கள். அவர்கள் அப்படியே (பெந்தெகொஸ்தே நாளில், பரிசுத்த ஆவி ஜனங்கள் மீது இறங்கிய போது, அவர்கள் அந்த நாளில் செய்ததைப்போலவே - பெந்தெகொஸ்தே நாளிலே பரிசுத்த ஆவிதான் ஜனங்களுக்கு கொடுக்கப்பட்ட முதன்மையானதாகும். அதுதான் தேவனுடைய ஜனங்களுக்கு அருளப்பட்ட இளைப்பாறுதல், ஓய்வாகும்.)
166. ஆனபடியால், இக்காரணத்தால்தான் நாம் ஞாயிற்றுக் கிழமையை கைக்கொள்கிறோம், இது நம்முடைய வேதாகமத்தின் ஆதி முற்பிதாக்களாகிய பரிசுத்த பவுல், யோவான், மத்தேயு, மாற்கு, லூக்கா, மற்ற எல்லாராலும் துவக்கப்பட்டது, அவர்கள் வீடு வீடாகச் சென்று, வாரத்தின் முதல் நாளிலே பந்தியைக் கைக்கொண்டார்கள், சீஷர்கள் எல்லாம் ஒன்றாய் கூடினபோது, அது ஓய்வு நாள் என்று அழைக்கப் படவில்லை, ஆனால் கர்த்தருடைய நாள் என்று அழைக்கப்பட்டது.
167. அங்கே சபையிலே, ஓய்வுநாளின் பண்டிகையானது ஏற்கனவே இருந்தது. பத்மு தீவிலே யோவான் கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்” என்றான். அது சரி. பாருங்கள்? அவன் பார்த்தபோது...
168. ஆகவே இப்பொழுது, கர்த்தருடைய நாள் என்றால் அது கர்த்தர் உயிர்த்தெழுந்த நாளாகும். இப்பொழுது நீங்கள், வரலாற்று அறிஞர்களாகிய ஜோஸிபஸ், ஆக்டிபஸ் அல்லது மற்ற அநேகரை அணுகிப் பாருங்கள். அல்லது அது ஆக்டிபஸ் அல்ல, ஓ என்னால் முடியவில்லை... கிழக்கைச் சேர்ந்த எழுத்தாளர்களை நீங்கள் பார்த்தால் கண்டு கொள்வீர்கள். சபை வரலாற்று அறிஞர்கள், ஃபாக்ஸினுடைய இரத்தச்சாட்சி புத்தகம் (Foxe's Book of Martyrs), இன்னும் அநேகவற்றைப் பார்ப்பீர்களானால், ஒரே ஒரு வித்தியாசத்தைத்தான் நீங்கள் காணமுடியும்... அவர்கள் ஒரு கூட்ட யூதர்கள். அவர்கள், அவர்களில் ஒருவர் (அந்த வரலாற்று அறிஞரில் ஒருவர் - தமிழாக்கியோன்) கிறிஸ்தவர்களை “தன்னினத்தை தின்னுகிறவர்கள்” (“Cannibals”) என்று அழைத்தனர். அவர்கள் “ஒரு மனிதன் பொந்தியு பிலாத்துவால் கொல்லப்பட்டார். சீஷர்கள் வந்து அவருடைய சரீரத்தைத் திருடிச் சென்று, ஒளித்து வைத்து, ஒவ்வொரு ஞாயிறும் சென்று அச்சரீரத்தின் பாகத்தை சாப்பிட்டனர்” என்றனர். அவர்கள் இராப்போஜனத்தைக் கைக்கொண்டனர். அவர்கள் மாத்திரம்...அவருடைய சரீரத்தை உட்கொண்டனர். அவர்கள் பாருங்கள், கர்த்தருடைய சரீரத்தை உட்கொண்டிருந்தனர் என்று அவர்கள் கூறினார்கள். இராப்போஜனம். அது என்ன என்பது இவர்கள் அறியவில்லை, ஆகவே அவன், “அவர்கள் தன்னினத்தைத் தின்கிறவர்கள் அவர்கள் வாரத்தின் முதல் நாள் சென்று, ஒன்று கூடி, இம்மனிதனின் சரீரத்தை புசிக்கின்றனர்” என்றான்.
169. அவர்கள் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு ஆக்ரோஷமாக உயிர்த்தெழுதலை மறுதலிக்கிறவர்களா, அல்லது அவர்கள் கிறிஸ்தவர்களாயிருந்து, உயிர்த்தெழுதலை விசுவாசிக்கிறவர்களா, என்பதை நீங்கள் கண்டுபிடித்துக் கூற இருக்கின்ற ஒரே ஒரு வழி, ஒருவன் சபைக்கு சனிக்கிழமை செல்வான், மற்றொருவன் சபைக்கு ஞாயிற்றுக்கிழமையன்று செல்வான், அது தான் அவர்கள் நடுவே இருந்த ஒரு அடையாளமாகும்.
170. அது ஆணித்தரமான ஒன்றல்லவா, அப்படித்தானே? அது சரி. அது செய்யும் என்று நம்புவோமாக. பரிசுத்த ஆவி ஒரு...
171. உங்களிடம் ஏதாவது இப்பொழுது உள்ளதா சகோதரனே? நீர் விரும்புவது. அதற்கு பதிலுரைக்கப்பட நீர் விரும்புகிறீரா? சரி, பார் க்கலாம், இங்கே ஓ, ஆமாம்.