271. நாம்... அதை சரியாக விளக்கிக் காண்பிக்க நமக்கு நேரம் இல்லை. ஆனால், சகோதரனே பரிசுத்த ஆவி மணவாட்டி மாத்திரமே எடுத்துக்கொள்ளப்படுதலில் இருப்பாள். பாருங்கள்? வேதாகமம்...?... மற்றவர்கள் கைவிடப்பட்டிருக்க மாட்டார்கள்.
272. கவனியுங்கள்! பூமியை நியாயந்தீர்க்கப்போவது யார்? பரிசுத்தவான்கள். தானியேல், “நான் பார்த்துக் கொண்டிருக்கையில் நீண்ட ஆயுசுள்ளவர் வந்தார்- அவர் ஆயிரம் பதினாயிரம் பதினாயிரம் பரிசுத்தவான்களுடன் வந்தார்,” என்றான். அது சரியா? சபையானது எடுத்துக்கொள்ளப்படுதலில் சென்று விட்டிருந்தது. பிறகு அவர்கள் கீழே வந்தனர், நியாயத்தீர்ப்பு வைக்கப்பட்டது.
273. ஆகவே புஸ்தகங்கள் திறக்கப்பட்டன. அது சரியா? வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது, அது ஜீவ புஸ்தகம் பரிசுத்த ஆவியைப் பெற்றிராத பரிசுத்தமாக்கப்பட்ட விசுவாசியைக் குறித்தது ஆகும். !”
274. மணவாளனை சந்திக்க பத்து கன்னிகைகள் புறப்பட்டனர் என்று இயேசு போதிக்கவில்லையா? அவர்களில் ஐந்து பேர்... அல்லது அவர்கள் எல்லாரும் கன்னிகைகளாக சுத்தமானவர்களாக, பரிசுத்தமுள்ளவர்களாக இருந்தனர். ஆகவே அவர்கள், இவர்கள், உறங்கச்சென்று பரிசுத்த ஆவியைப் பெறவில்லை. இவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டு தங்கள் விளக்குகளில் எண்ணெயை உடையவர்களாயிருந்தனர். மணவாளன் வந்த போது, சத்தம் வந்தது, சத்தமிட்டது, அவர்கள், “ஓ நாங்கள் உள்ளே செல்லட்டும். உங்கள் எண்ணையில் எங்களுக்கு கொஞ்சங்கொடுங்கள்” என்றனர்.
275. அவர், “நீங்கள் வாங்குகிறவர்களிடத்திற்கு போங்கள், ஜெபியுங்கள், இப்பொழுது அதை பெற்றுக்கொள்ளுங்கள்” என்றார். ஆனால் அவர்களால் முடியவில்லை. ஆகவே அவர்கள் சென்ற போது, அந்த - அந்த கன்னிகைகள் கலியாண விருந்துக்குள் பிரவேசித்தனர், அவர்களோ அழுகையும், கூக்குரலும் பற்கடிப்பும் இருந்த புறம்பான இருளுக்குள் தள்ளப்பட்டனர். கடந்த இரவு, கடந்த இரவுக்கு முந்தின இரவு, வெளிப்படுத்தல் 12 ஆம் அதிகாரத்தில், வலுசர்ப்பம், தேவனில் விசுவாசம் கொண்டிருந்து இயேசு கிறிஸ்துவின் கற்பனைகளைக் கைக்கொண்ட மீதியாயிருந்த அந்த ஸ்திரீயின் சந்ததியின் மீது யுத்தம் பண்ண தன் வாயிலிருந்து வெள்ளத்தை ஊற்றினது என்று போதித்தோம் அல்லவா?
276. ஸ்திரீகளாகிய உங்களுக்கு, நீங்கள் உங்கள் மாதிரியின் படியே ஒரு நல்ல அருமையான துணியை எடுத்து நீங்கள் அதில் இவ்விதமாக, உங்கள் மாதிரியின்படியே வெட்டியெடுக்க வேண்டிய பகுதியை அதிலிருந்து வெட்டியெடுகிறீர்கள். அது உங்களைப் பொருத்ததாகும்? நீங்கள் வெட்டியெடுத்த பகுதியிலிருந்து உங்கள் ஆடையை உருவாக்குகிறீர்கள். மீதமான பாகமும், வெட்டப்பட்ட துண்டைப் போலவே நல்ல துணியாய் இருந்த போதிலும், நீங்கள் உங்கள் தெரிந்துகொள்ளுதலின்படி அதை வெட்டியெடுத்தீர்கள். அது சரியா? நல்லது, விலையெறபெற்றதாயிருந்தாலும், அது உங்களுடைய தெரிந்து கொள்ளுதலாய் உள்ளது.
277. ஆகவே தெரிந்து கொள்ளப்படுதலினால் நாம் எடுத்துக் கொள்ளப்படுதலில் செல்கிறோம் என்று தேவன் வாக்குத்தத்தம் செய்திருக்கிறாரே! வேதாகமம் “மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை” என்று கூறுகின்றது. அது சரியல்லவா? ஆகவே... நீங்கள் இழந்துபோகப் படமாட்டீர்கள், ஆனால் பரிசுத்த ஆவியால் நிறையப்பட்ட மணவாட்டி எடுத்துக் கொள்ளப்படுதலில் செல்வாள். மற்றவர்கள் நியாத்தீர்ப்பினூடாக கடந்து வருவார்கள்; அவர்களோ அப்படியில்லை.