87. ஆம், யோபு 14, “மனுஷன் செத்தபின் பிழைப்பானோ?” என்னும் வசனம். ஓ. மனிதன் செத்த பின்... யோபு “உயிர்த்தெழுதலைக் குறித்து பேசுகிறான் (அன்றொரு நாள் காலையில் அதைக் குறித்து பேசினேன் என்று நினைக்கிறேன், இல்லையா? அல்லது அது சார்லியின் வீட்டிலா? திருமதி காக்ஸ் அங்கு எங்கோ இருந்தார்கள்). பூக்கள் செத்த பிறகு தழைப்பதை யோபு காண்கிறான், ஆனால் அவனோ மனிதன் மண்ணுக்குள் சென்ற பிறகு திரும்ப வருவதில்லை என்று எண்ணுகிறான். அதன் பிறகு, ஏதோ ஒன்று பாவம் செய்து விட்டது என்று. அவனுக்கு விளக்கப்படுகிறது. அவனுக்கும் தேவனுக்குமிடையே ஒரு மத்தியஸ்தர் வேண்டுமென்று அவன் விரும்புகிறான். அப்பொழுது அவன் கர்த்தருடைய வருகையைக் காண்கிறான்.
88. அது என்ன, சகோதரனே? (சகோ. பிரன்ஹாம் ஒரு சகோதரனுடன் உரையாடுகிறார் - ஆசி). அது 1 கொரி. 12:30 என்று நினைக்கிறேன். ஆம்!