Q.401. கூட்டில் அடைபட்ட ஒரு கழுகு தன் சிறகுகளை அடித்துக் கொண்டு, விடுதலை பெற போராடுவதைக் குறித்த
பரிதாபகரமான காட்சியை நீங்கள் விவரித்தது என் நினைவுக்கு வருகிறது. அந்த நிலையில் என் விலையேறப் பெற்ற தாயார்
இருக்கிறார்கள். விவாகமான அவர்களுடைய மூன்று பிள்ளைகள், தங்கள் தகப்பனின் உபதேசத்தை ஏற்றுக் கொள்ளாத
காரணத்தால், மூன்று ஆண்டுகளாக அவர்கள் வீட்டிற்கு வருவதற்கு அனுமதிக்கப்படவில்லை. அவர் ஒரு ஸ்தாபன
பிரசங்கியார். தாயாருக்கு இந்த கடைசி காலச் செய்தியை கேட்க வேண்டுமென்ற பிரியம் உள்ளது, ஆனால் ஒரு
கடிதத்தையும் கூட அவர்களிடம் சேர்க்க என்னால் முடியவில்லை. அவர்கள் எந்த அளவுக்கு கட்டுப்பட்டிருக்கலாம்?
ஜெபிப்பதைத் தவிர வேறெதாகிலும் என்னால் செய்யக்கூடுமா?
89. எனக்குத் தெரிந்த வரையில் ஒன்றே ஒன்று அது தான். அவளுடைய கணவர் ஒரு ஸ்தாபன போதகராதலால், அவள் வார்த்தையைக்
கேட்க அவர் அனுமதிப்பதில்லை. அவளுக்கோ வார்த்தையைக் கேட்க வேண்டுமெனும் ஆவல் உள்ளது. ஆனால் கேட்பதற்கு அவர்
சம்மதிப்பதில்லை. அவளுக்காக ஜெபியுங்கள். அந்த ஸ்திரீ இரட்சிக்கப்பட்டிருக்கிறாள் என்று நம்புகிறேன்.