91. முற்றிலுமாக, அதை இன்று காலையில் நான் விளக்கினேன் - அதே காரியம் தான். நீங்கள் எல்லா கட்டங்களையும் பெற்றிருத்தல் அவசியம். நீங்கள் ஆவியினால் உருவாகின்றீர்கள்; ஒரு குழந்தை தாயின் கர்ப்பத்தில் உருவாவதைப் போல, ஆனால் அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெறும் வரைக்கும் பிறப்பதில்லை. அது உண்மை. நீங்கள் அப்பொழுது பிறக்கிறீர்கள், ஆனால் நீங்கள் குணப்படவில்லை. அந்த நேரம் வரைக்கும், நீங்கள் குணப்படும் கட்டத்தில் இருந்து வருகிறீர்கள்.
92. ஆகையால் தான் இந்த மகத்தான இரகசியங்கள் அனைத்தும் லூத்தருக்கு அளிக்கப்பட முடியவில்லை, வெஸ்லிக்கு அளிக்கப்பட முடியவில்லை, நம்மை சமீபத்தில் கடந்து சென்ற பெந்தெகொஸ்தே காலத்துக்கும் அளிக்கப்பட முடியவில்லை. ஏன்? அதற்கு நேரமாகவில்லை. அவர்கள் கருத்தரிக்கப்பட்டனர். இப்பொழுது. கிறிஸ்துவாகிய நபர்தாமே, மனுஷகுமாரன் (உங்களுக்குப்புரிகிறதா?) மனித சரீரத்தில் தம்மை வெளிப்படுத்துகிறார். அது இந்நாள் வரைக்கும் வர முடிந்திருக்காது.