108. நல்லது. சகோதரியே. நான் உன்னிடம் ஒரு காரியத்தைக் குறித்து இணங்கப் போகிறேன். முதலாவதாக ஒரு மனிதனுக்கு நீண்ட தலைமயிர் இருக்கக் கூடாதென்று வேதம் உரைக்கிறது. அவன் நீண்ட தலைமயிரை வைத்திருந்தால். நான் உன்னிடம் கூறுவது போலவே அவனிடமும் கூறுவேன். அவன் அவ்விதம் செய்தால் தவறு. ஆனால் மனிதரில் பெரும்பாலோருக்கு, அவர்களில் பலருக்கு எனக்கு தலைமயிர் ஒன்றும் இல்லாதது போல, அவர்களுக்கும் இருப்பதில்லை. ஆனால் மனிதரில் பெரும்பாலோர் தங்கள் தலைமயிரைக் கத்தரித்துக் கொண்டு, மனிதரைப் போல் காட்சியளிக்கின்றனர். இப்பொழுது, அவர்கள் அவ்விதம் செய்யாமல் போனால், அவர்கள் பெண்களைப் போல் தலைமயிரை வளர விடக் கூடாது என்று அவர்களிடம் கூறப்படும். நாம் விவாகமும் விவாகரத்தும் என்பதைக் குறித்து பிரசங்கிக்கும் போது, உனக்கு இதைக் குறித்த விவரணம் எல்லாம் கிடைக்கும்.
109, இப்பொழுது, ஒரு மனிதன், முதலாவதாக, ஒரு மனிதனின் உடல் ஒரு ஸ்திரீயின் உடலைப் போல். கவர்ச்சிக்குரியதல்ல. இப்பொழுது மனிதன், முடி வளர்ந்த தன் பெரிய கால்கள், முட்டித் தட்டும் கால்கள், பானை போன்ற தொந்தி போன்றவைகளைக் கொண்டவனாய் காண்பதற்கு பயங்கரமாயிருக்கிறான். கவரப்படுவதற்கு அவனிடத்தில் ஒன்றுமில்லை. ஒரு மனிதன் வாலிபனானாலும் வயோதிபனானாலும், இந்த பிக்கினிக்களை அரிந்து கொண்டு, சாலையில் நடந்து செல்லும் போது. அதுதான் நான் இதுவரை கண்டிராத மிகவும் அருவருப்பான காட்சி என்பது என் கருத்து. அப்படி செய்யும் ஒரு மனிதன், அவன் எந்த வர்க்கத்தை சேர்ந்தவன் என்பதை அறியாமலிருக்கிறான் என்று “எண்ணுகிறேன் (பாருங்கள்? அது உண்மை).
110. உங்களுக்குத் தெரியுமா? அமெரிக்க இராணுவம் அவ்விதமாக உடுக்கப் போகிறதென்று சில மாதங்களுக்கு முன்பு கேள்விப்பட்டேன். அடுத்த ஆண்டோ அல்லது அதற்கு அடுத்த ஆண்டோ இராணுவம் அந்த விதமாக வெளிவரப்போகிறது, எல்லோரும் குட்டை கால் சட்டைகள் அணிந்து, நமக்கு எவ்வளவு பெரிய பெண்மைத்தனம் கொண்ட கூட்டம் உள்ளது!
111. தேவன் மனிதனை, மனிதனைப் போல் காணப்படவும், மனிதனைப் போல் நடந்து கொள்ளவும், மனிதனைப் போல் உடுத்திக் கொள்ளவதற்காகவே படைத்தார். அவ்வாறே அவர் ஸ்திரீயை, ஸ்திரீயைப் போல் நடந்து கொள்ளவும், ஸ்திரீயைப் போல் இருப்பதற்காகவுமே படைத்தார். இன்று காலையில் மனிதனைக் குறித்த கேள்வி எழுந்த போது... (ஒலிநாடாவின் முதல் பாகம் முற்று பெறாமல் முடிந்து இரண்டாம் பாகம் நடுவில் தொடங்குகிறது - ஆசி)... அவனுக்கு விருப்பமானால்...
112, ஒரு ஸ்திரீக்கு மெலிந்த தலை மயிர் இருந்து அவள் அந்த “எலிகளில்” ஒன்றை அணிந்து கொள்ள விரும்பினால், அல்லது அதை நீங்கள் எவ்விதமாக அழைத்தாலும், நான் நினைக்கிறேன் அது... என் மனைவி அதை அணிந்து கொள்கிறாள். அது ஒரு... அவளுடைய தலைமயிர் மெலிந்துள்ளதாக அவள் கூறுகிறாள், அவளிடம் ஏதோ வட்டமான ஒன்றுள்ளது. அது ஒரு பெரிய, சாதாரண அளவை விட பெரிதான பிஸ்கோத்து போல் காணப்படுகிறது. அவள் தன் தலைமயிரை அதில் சுற்றிக் கொண்டு கொண்டை ஊசிகளை குத்திக் கொள்கிறாள். இப்பொழுது - என்னைப் பொறுத்த வரையில் உங்கள் தலைமயிர் நீளமாயுள்ள வரைக்கும் அதனால் எவ்வித பாதகமுமில்லை.
113. ஒரு போதகர், தன் மனைவியின் தலைமயிர் சாயம் பூசப்பட்டுள்ளதனால், அவள் குற்றம் புரிந்துள்ளதாக கூறினார். ஒரு கேள்வியிலிருந்து நான், அது தலைமயிருக்கு வர்ணம் பூசுவது அல்லது சாயமிடுவது என்பதைக் கண்டு கொண்டேன். அது தவறென்று என்னால் கூற இயலாது; அதைக் குறித்து எனக்கு ஒன்றுமில்லை. அவளுக்கு. நீண்ட தலைமயிர் இருக்குமானால், அவ்வளவு தான் என்னால் அதைக் குறித்து கூற முடியும்.
114. இப்பொழுது, ஒரு மனிதன்... இன்று காலையில் ஒருவர் தலைமயிரை எடுத்து விடுவதும், அதன் பிறகு போட்டுக் கொள்வதையும் குறித்து கேட்டிருந்தார். இப்பொழுது. தலை மயிரைக் கத்தரித்துக் கொள்வதையும் குறித்தும் இங்கு கேட்கப் பட்டுள்ளது. பாருங்கள்?
115. இப்பொழுது, ஒரு மனிதனுக்கு தலைமயிர்” இல்லாமல், அவனுடைய மனைவி... ஸ்திரீகள், “நல்லது. நான் மாத்திரம் ஜானிடம். அவர் ஒரு தலைமயிர் துண்டை அணிந்து கொண்டால் அவர் காண்பதற்கு நன்றாயிருப்பார். அதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், சகோ. பிரன்ஹாமே? அவ்விதம் அவர் செய்வது தவறா?” என்று கூறுவதை நான் கேட்டதுண்டு. இல்லை, ஐயா! இல்லவே இல்லை. அது தவறல்ல. அவர் அதை அணிந்து கொள்ள விரும்புவாரானால், அதனால் பாதகமில்லை, அதற்கும் செயற்கை பல் அணிந்து கொள்வதற்கும் வித்தியாசம் எதுவுமில்லை.
116. கூறப் போனால், நான் மூன்று செயற்கை பற்களை வைத்திருக்கிறேன். அவை இல்லாமலிருந்தால் நலமாயிருக்கும். அவை ஒரு கம்பியினால் கட்டப்பட்டுள்ளன; அது என் சத்தத்தைக் குறைத்தும், என் நாவை அறுத்து விடவும் செய்கிறது. ஆனால் ஆகாரம் உண்பதற்கு அவை எனக்கு அவசியமாயுள்ளன. நான் வெளிநாடுகளில் கூட்டங்கள் நடத்தும்போது, ஒரு தலைமயிர் துண்டை அணிந்து கொள்கிறேன், நன்றாக காணப்பட வேண்டும் என்பதற்காக அல்ல, ஏனெனில் நான் இங்கு நின்று கொண்டு என் தலையின் மேல் தலை மயிர் துண்டு இருந்தாலும் இல்லாமல் போனாலும், அது எனக்கு எந்த வித்தியாசத்தையும் உண்டாக்காதென்று உங்களுக்குத் தெரியும். நான் இயேசு கிறிஸ்துவின் பிரதிநிதியாகவே இங்கு இருக்கிறேன். ஆனால் வெப்ப புயல்களில் ஒன்றில் நான் முதல் இரவு அங்கு நிற்பேன் என்றால், அடுத்த நாள் இரவு என் தொண்டை கரகரப்பாகி என்னால் அங்கு செல்ல முடிவதில்லை.
117. எனவே, அதை நான் செய்ய வேண்டுமென்று விரும்பி, அதை செய்ய வேண்டுமென்று எனக்குத் தோன்றினால், அதை நான் செய்வேன். ஆம், ஐயா! அதை செய்ய வேண்டாமென்று ஒன்றுமே கூறுவதில்லை. சகோதரியே, நீங்கள் “எலி”யையோ, கொண்டையையோ, அல்லது சவரிமயிரையோ, அல்லது வேறெதாவதையோ உபயோகிக்க கூடாதென்று எந்த ஒன்றுமே கூறவில்லை. அது முற்றிலும் சரி. ஆனால் உங்கள் தலைமயிர் நீளமாயிருக்கட்டும். மனிதரே, உங்கள் தலைமயிரை கத்தரித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு உள்ள தலைமயிரை கத்தரித்துக் கொள்ளுங்கள். பாருங்கள்? அத்துடன் அது முடிவு பெறுகிறது.
118. ஸ்திரீகளே, நீங்கள் ஸ்திரீகளைப் போல் உடை அணியுங்கள். மனிதரே, நீங்கள் மனிதரைப் போல் உடை அணியுங்கள். நீங்கள் பெண்மைத்தனம் கொண்டவர்களாய் பெண்களின் உடைகளை அணியாதீர்கள். ஸ்திரீகளே, நீங்கள் ஆண்மைத்தனம் கொண்டு, ஆண்களின் உடைகளை அணியாதீர்கள், ஏனெனில் நீங்கள் அவ்விதம் செய்வது தேவனுக்கு விருப்பமில்லை; வேதம் அதைக் கண்டிருக்கிறது.
119. ஆனால், ஒரு தலைமயிர் துண்டு அல்லது வேறெதாவது தலைமயிர் அணியும் விஷயத்தில்... நல்லது, அந்த “எலிகள்” என்பது என்ன? அல்லது சற்று முன்பு அதை தவறாகக் கூறி விட்டேனோ. அல்லது அதன் பெயர் “சுண்டெலியா? அது ஒரு ஸ்திரீ தன். தலைமயிரை அடர்த்தியாக்கிக் கொள்ள அதற்குள் வைக்கும் ஒன்றாகும். அதன் பெயர் என்னவானாலும் (பாருங்கள்?), அதனால் தவறொன்றுமில்லை. அதை தொடர்ந்து செய்யுங்கள், அது பரவாயில்லை.