Q.409. சகோ. பிரன்ஹாமே, எண்ணூறு மைல் தொலைவிலிருந்து ஒரு சகோதரி கூடாரத்துக்கு
வந்திருந்தாள், நீங்கள் இயேசு கிறிஸ்துவின் அவதாரம், என்று அவள் விசுவாசிப்பதாகக் கூறினாள்.
தயவு செய்து இதைக் குறித்து பேசவும். அவளுடைய கருத்தை மற்றவர்களிடம் எடுத்துக் கூற அவள்
அவசரப்பட்டாள்... சரி.
120. இப்பொழுது, அந்த சகோதரி தவறு என்பது உறுதி. நான் இயேசு கிறிஸ்து அல்ல. நான் அவருடைய
ஊழியக்காரன், இதைக் குறித்து நாம் பலமுறை பார்த்திருக்கிறோம். ஆனால்... ஓ, இதை முடிப்பதற்கு நான்
மிக அருகில் வந்து விட்டேன். எனக்காக ஜெபியுங்கள், இன்னும் சிறிது நேரம்.