278. சரி, நீங்கள் களைத்துப்போயிருக்கிறீர்களா? நீங்கள் களைத்து போயுள்ளீர்கள் என்று எனக்கு தெரியும்.
279. ஆம், பிதாவை மகிமைபடுத்த இயேசு வந்தார். பரிசுத்த யோவான் 14 ஆம் அதிகாரத்தை பாருங்கள். நான் சற்று... என்னிடம்... சற்று காத்திருப்பீர்களானால் இன்னும் மூன்று தான் இருக்கிறது, நாம் அதைப் பார்ப்போம் என்று நான் விசுவாசிக்கிறேன். கவனியுங்கள், பிறகு நாம் புதியவைகளை பார்ப்போம், ஏனெனில் உண்மையாக இன்றிரவு சிலவற்றை நான் நிறுத்துவேன், என்று நான் நம்புகிறேன். கவனியுங்கள், இது சபையாகும், நாம் சென்று கொண்டேயிருக்கிறோம்.
280. கவனியுங்கள், பிதாவை வெளிப்படுத்த இயேசு வந்தார். கவனியுங்கள், துவக்கத்தில் தேவன் மனிதனை தம்முடைய சொந்த சாயலில் உண்டாக்கினார். அது சரியா? நல்லது, தேவன் என்றால் என்ன? ஒரு ஆவி. பரிசுத்த யோவான் 4வது அதிகாரத்தில், இயேசு கிணற்றண்டை இருந்த ஸ்திரீயினிடத்தில் பேசிக் கொண்டிருந்தார், அவர், “தேவன் ஆவியாயிருக்கிறார். அவரைத் தொழுது கொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுது கொள்ள வேண்டும்” என்று கூறினார். அது சரியல்லவா? தேவன் மனிதனை தம்முடைய சொந்த சாயலிலே உண்டாக்கியிருப்பாரானால், அப்படியானால் எப்படிப்பட்ட ஒரு மனிதனை அவர் உண்டாக்கியிருந்தார். ஒரு ஆவியான மனிதன்.
281. ஆதியாகமம் 2ல், நிலத்தை பண்படுத்த எந்த ஒரு மனிதனும் இல்லை, ஆகவே தேவன் மனிதனை பூமியின் மண்ணிலிருந்து உண்டாக்கினார். அவருடைய சாயலில் அல்ல, ஆனால் மிருக ஜீவனின் சாயலில் உண்டாக்கினார். பிறகு இங்கே இந்த மிருக மனிதனில் மனிதனின் ஆவியை வைத்தார், அவன் ஜீவாத்துமாவானான். இப்பொழுது அது தான் மனிதனுக்கும் மிருகத்திற்கும் உள்ள வித்தியாசம் ஆகும்.
மிருகம் மோட்டார் வாகனங்களை செய்யாது, வாழ்க்கைக்கு உதவியாயிருக்கின்ற காரியங்களை இன்னும் அதைப் போன்ற மற்றவைகளை அது செய்யாது. அது ஒரு மிருகம் ஆகும், ஊமையான முரட்டுத்தனமான ஒன்று. அதற்கு ஆத்துமா கிடையாது. அதினால் எழுதவும் படிக்கவும் முடியாது. அதனால் பேச முடியாது, உரையாடமுடியாது. அது ஊமையான முரட்டுத் தனமான ஒன்று.
ஆனால் முரட்டுத்தனமானதைப் போல மனிதனும் மாம்சத்தில் இருக்கிறான், ஆனால் அவனுக்குள் தேவனுடைய ஆத்துமாவைக் கொண்டவனாக இருக்கிறான். அது அவனை அழியாதவனாக்குகிறது. அவனால் கண்டு பிடிக்க முடியும்... அவனால் செய்ய முடிகின்றதை கவனியுங்கள்! ஆகவே ஏறக்குறைய தேவனுக்கு சமமான நிலையில் இருக்கின்றான், ஏனெனில் அவனுடைய விழுந்து போன நிலையிலும் அவன் தேவனுடைய குமாரனாக இருக்கிறான். அவன் அற்புதமானவன்! அவனைப் பாருங்கள்! பாருங்கள்? அது தான்.
282. பிறகு மனிதன் மாம்சத்தில் விழுந்த போது... தேவன் தமக்கு மேற்கொண்டு மற்றொரு தனிப்பட்ட நபரை கீழே அனுப்பிருந்தாரானால், அவர் அநீதி உள்ளவராவார். ஆகவே அதை நீதியாகச் செய்வதற்கு தேவனுக்கிருந்த ஒரே வழி மனிதனுடைய இடத்தை தாமாகவே எடுத்துக் கொள்வதாகும்.
283. சகோதரன் நெவிலை இங்கே இந்த பெண்ணிற்காக நான் மரிக்கச் செய்தால் எப்படியிருக்கும்? நான் உங்கள் மீது ஆளுகையுடையவனாக இருந்து, இந்த பெண்ணை இங்கே இந்த பெண்ணிற்காக நான் மரிக்கச் செய்தால் எப்படியிருக்கும்? நான் நீதியாக இருந்து அதைச் செய்ய முடியாது. நான் மரணத்தை அறிவித்து, நீ வாழ வேண்டுமென்று நான் விரும்பினால், உன்னை நியாயப்படுத்த நான் உன்னுடைய இடத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். ”
284. ஆகவே பிறகு தேவன், ஆவியின் ரூபத்தில் இருந்தவர்... இல்லை, ரூபமின்றி இருந்தார். வேதாகமம், “தேவன் ரூபமில்லாதவர்” என்று கூறுகிறது. அது சரி. பிறகு தேவன் ஒரு உருவம் எடுக்க வேண்டியதாயிருந்தது, ஆகவே அவர் ஒரு கன்னிகையை நிழலிட்டு அவளுக்குள் ஒரு இரத்த அணுவை சிருஷ்டித்தார், இனச்சேர்க்கை இல்லாமல் அல்லது அதனுடன் எதுவுமே இல்லாத விதத்தில், ஒரு இரத்த அணுவை சிருஷ்டித்தார். அது தேவனுடைய குமாரனாக வளர்ந்தது. பிறகு தேவன் கீழே வந்து தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்குள் வாசம் செய்து பூமியில் அவரை தேவனாகச் செய்தார். ”
285. பரிசுத்த யோவான் சுவிசேஷத்தில், தோமா, “ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும்” என்றான். ”
286. அவர், “இவ்வளவு காலம் நான் உங்களுடனே கூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா?” என்றார். அவர், “பிதாவை எங்களுக்குக் காண்பியும்” என்று நீ ஏன் சொல்லுகிறாய்?” என்றார். ஏன், அவர் “நீ என்னைக் காண்கையில் நீ பிதாவைக் காண்கிறாய். நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம். என் பிதா எனக்குள் வாசம் செய்கிறார்” என்றார். ”
287. சில காலத்துக்கு முன்னர் நான் அங்கே பேசிக் கொண்டிருந்தேன், இங்கே ஒரு பெண்மணி, குதித்தெழுந்து, “ஓ சகோதரன் பிரன்ஹாம், நீங்கள் என்ன கூற வருகின்றீர்கள் என்பது என்பது எனக்குத் தெரியும். அவர்கள் ஒன்றாயிருக்கிறார்கள், நிச்சயமாக அவர்கள் ஒன்றாயிருக்கிறார்கள். நீங்களும் உங்கள் மனைவியும் கூடத்தான் ஒன்றாயிருக்கிறீர்கள். அதே விதமாகத் தான் அவர்களும் ஒன்றாயிருக்கிறார்கள்” என்றாள். ”
288. நான், “என்னை மன்னியுங்கள்.” என்றேன். நான் “அவர்கள் அல்ல” என்றேன். நான் ““உங்களால் என்னைக் காணமுடிகிறதா?” என்றேன்.
“நிச்சயமாக” என்றாள். அப்படியா, “என் மனைவியை உங்களால் காணமுடிகிறதா?””
அவள், “இல்லை” என்றாள். ”
289. நான், “அதோ! நானும் என் மனைவியும் இருக்கிறதைக் காட்டிலும் வித்தியாசமான விதமாக அவர்கள் இருக்கின்றனர்.” என்றேன். பாருங்கள்? நான், “அது சரி” என்றேன்.
290. 290. இயேசு, “பிதாவை காணாமல் உங்களால் என்னைக் காணமுடியாது” என்றார். நிச்சயமாக முடியாது! அதுமூவகைச் சட்டத்தில் இரண்டாவது சட்டம், அதே சட்டம் (rule) அது தேவனாகும். இயேசு கிறிஸ்து ஒன்று தேவனாக இருக்கவேண்டும் அல்லது உலகமானது எப்பொழுதும் கொண்டிராத ஒரு பெரிய வஞ்சகராக இருக்கவேண்டும்.
291. கவனியுங்கள்! சிறிது காலத்திற்கு முன்னர் ஒரு பெண் ஒரு கிறிஸ்துவ விஞ்ஞான பெண், என்னிடம் வந்து, “நான் உங்களுக்கு நிரூபிப்பேன்,” என்றாள். இப்பொழுது, கிறிஸ்துவ விஞ்ஞானம் நண்பனே, ஒரு நிமிடத்திற்கு சற்று பயபக்தியாயிரு, பாருங்கள். அவர்கள், “அவர் ஒரு மனிதனேயன்றி வேறொன்றும் அல்ல என்று நான் உங்களுக்கு நிரூபிப்பேன்” என்றனர். “நீர் மிகவும் அதிகமாக இயேசுவைக் குறித்து ஜம்பப்பேச்சு பேசுகிறீர்” என்றார்கள். !”
292. “இரவும் பகலுமாக நான் ஜம்பப்பேச்சு பேசினாலும் அவருக்கு சேரவேண்டியதை என்னால் அவருக்கு கொடுக்க இயலாது” என்றேன். நான் கூறினேன், “கூறப்போனால்...” ”
293. “அவர் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தர், சமாதானப்பிரபு, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா” என்று ஏசாயா அவருக்கு பெயரிட்டான். அவரே எல்லாமாய் இருக்கிறார். “அவர் ஆல்பா, ஓமேகா, முதலும் முடிவும், தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரம், பிதா, குமாரன் பரிசுத்தாவி” எல்லாம் அவரே, “தேவத்துவத்தின் பரிபூரண மெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கின்றது”. என்று வேதம் கூறுகின்றது. தேவனுடைய பரிபூரணம் யாவும் அவருக்குள் இருந்தது. ”
294. அவள், “நான் உங்களிடம் கூறுகிறேன், அவர் லாசருவை எழுப்பத்தக்கதாக, லாசருவிற்காக ஜெபிக்க அவர் சென்ற போது, அவர் ஒரு மனிதனாகத்தான் இருந்தார் என்று நான் உங்களுக்கு நிரூபிப்பேன்” என்றாள்.
295. “நீ அதைச் செய் பார்க்கலாம்” என்றேன். ”
296. “வேதாகமம் அவர் கண்ணீர் விட்டார்” என்று கூறுகிறதே. அது அவர் மனிதன் தான் என்று நிரூபிக்கிறது, அவரால் கண்ணீர் விட முடிந்தது” என்றாள். ”
297. நான், “நிச்சயமாக, கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தது குமாரன் ஆகும்” என்றேன்.
298. அவர் ஒரு தேவன்- மனிதன் ஆவார். நானும், நீங்களும் போல அவர் ஒரு மூன்றொன்றான நபர் ஆவார்; நாம் ஆத்துமா, சரீரம் மற்றும் ஆவியாக இருக்கிறோம். அவர் தேவனுடைய தெய்வ நிலையில், பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாக இருந்தார், அது தான் அவர். அவர் தாமே தெய்வ நிலையில் இருந்தார்! அவருடைய சொந்த பிள்ளைகளே அவருடைய இரத்தத்திற்காக கூக்குரலிட்டுக்கொண்டிருந்தபோது, அங்கே அவரால் வேறொன்றை எவ்விதம் செய்யமுடியும்? அது வேறொன்றாயிருந் திருக்குமானால்... அவருடைய சொந்த பிள்ளைகளே அவருடைய இரத்தத்திற்காக கூக்குரலிட்டனர்; அவர்களுக்காக அவர் கதறினதில் வியப்பொன்றுமில்லை. ஒரு மனிதன் எவ்விதம்... அவருடைய சொந்த பிள்ளைகளே அவருடைய இரத்தத்திற்காக கூக்குரலிட்டபோது, அவர் அதை எவ்விதமாக உணர்ந்தார்? அவர் அவர்களை ஆக்கினைக்குட்படுத்தி நரகத்திற்கு அனுப்பவேண்டும் அல்லது தமது ஜீவனையே அளிக்க வேண்டும்; அவர் தம் பிள்ளைகளுக்காக ஜீவனைக் கொடுத்துக் கொண்டிருந்தார். அவருக்குள் தெய்வத்துவம் வசித்தது! அதுதான் அவர்.
299. அந்த ஸ்திரீ, “சங்கை. பிரன்ஹாம் அவர்களே, இங்கே கவனியுங்கள். நான் அதை உங்களுக்கு நிரூபித்துக் காட்டுவேன். அவர் கண்ணீர்விட்டபோது, அவர் மனிதன் என்பதை நிரூபித்தார்,” என்றாள். ”
300. நான், “ஸ்திரீயே, அவர் ஜெபி... மனிதனாயிருந்தார் அல்லது அவர் கண்ணீர்விட்டபோது மனிதன்தான் என்பது சரியே. அவர் கண்ணீர்விட்டபோது மனிதன்தான், அழிவு தன் எஜமானை அறியும் ஆத்துமா தன் சிருஷ்டிகரை அறியும். ஆனால் அவர் தம் மெலிந்த சரீரத்தில் நிமிர்ந்து நின்று அழுகி, தோல் புழுக்கள் அவனுடைய சரீரத்தில் ஊர்ந்திருக்க மரித்து நான்கு நாட்களான, மரித்து நான்கு நாட்களான மனிதனை, லாசருவே வெளியே வா, என்று அவர் கூறினபோது அவன் எழுந்து தன் கால்களில் நின்றானே, மறுபடியும் ஜீவித்தானே, அது மனிதனைக் காட்டிலும் மேலானது,” என்றேன்.
301. அவர், அன்றிரவு பசியுள்ளவராய் மலையிலிருந்து இறங்கி சாப்பிட ஏதாவது கிடைக்குமோ என்று அந்த மரத்தை பார்த்துக் கொண்டிருந்தபோது அவர் ஒரு மனிதனாக இருந்தார். அந்த அத்திமரத்தில் சாப்பிட ஏதாவது கிடைக்குமா என்று அவர் பார்த்துக் கொண்டிருந்த போது அவர் ஒரு மனிதனாக இருந்தார். ஆனால் அவர் ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன் துண்டுகளையும் எடுத்து ஐயாயிரம் பேர்களை போஷித்தபோது, அது மனிதனை விட மேலான ஒன்றாகும்! அது தேவன் அங்கே இருத்தல் ஆகும்! அந்த சிருஷ்டிகரால் சமைக்கப்பட்ட மீனைப்பிட முடிந்தது, அது இன்னுமாக சமைக்கப்பட்ட மீனாகவே இருந்தது, வேக வைக்கப்பட்ட அப்பத்தை எடுத்து பிட்டுக் கொடுத்தார்; அவர் எவ்விதமான அணுக்களைக் கட்டவிழ்த்திருப்பார்? அல்லேலூயா! அவர் தேவன், அணுக்கள் மற்ற எல்லா காரியங்களின் சிருஷ்டிகர்! அது மனிதனைக் காட்டிலும் அதிகமான ஒன்றாக இருந்தது!
302. அவர் நாள் முழுவதும் பிரசங்கங்கள் செய்து, வியாதியஸ்தரை சொஸ்தப்படுத்தி, மிகவும் களைப்புற்றவராக, அங்கே அந்த இரவு அந்த படகில் இருந்த போது கடலின் பத்தாயிரம் பிசாசுகள் அவரை மூழ்கடித்துவிட வேண்டும் என்று சபதம் செய்த போது அவர் ஒரு மனிதனாக இருந்தார். அங்கே இருந்த அந்த சிறிய பழைய படகு, ஒரு பாட்டில் மூடியைப் போன்று அங்குமிங்கம் தண்ணீரில் தத்தளித்தது, இங்குமங்கும் பெரிய அலைகள் அடித்துக் கொண்டிருந்தது, அவரோ படுத்துக்கொண்டிருந்தார், அலைகள் கூட அவரை எழுப்பமுடியாத விதத்தில் மிகவுமாக களைப்புற்றிருந்தார். பிசாசுகள் உறுமிக்கொண்டிருந்தன, “அவர் தூங்கிக்கொண்டிருக்கையில் இப்பொழுது அவரை பிடித்துவிடுவோம்” என்றன. ஆனால் அவர் விழித்துக்கொண்டபோது, அங்கே விழித்துக் கொண்டார், அவர் ஒரு மனிதனாக இருந்தார், அவர் மிகவுமாக களைப்புற்றிருந்தார். ஆனால் அவர் படகுப்பாயின் நுனிக்கயிற்றில் தம்முடைய பாதத்தை வைத்து, கடலைப் பார்த்து, “அமைதாலாயிரு!” என்றார், காற்றுகளும் அலைகளும் அவருக்கு கீழ்ப்படிந்தன. அது மனிதனைக் காட்டிலும் மேலான ஒன்றாகும்! அது வானங்களை உண்டாக்கின சிருஷ்டிகராகிய தேவன் ஆகும்.
303. “இவர் எப்படிப்பட்ட மனிதனோ காற்றும் கடலலைகளும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே” என்று அந்த அப்போஸ்தலன் கூறியதில் ஆச்சரியமில்லை.
304. அது மனிதனைக் காட்டிலும் அதிகமான ஒன்று. அது தேவன் ஆகும். பாவத்தை எடுத்துக் போடத்தக்கதாக, ஒரு பலியாக சிலுவையில் அவர் ஆணியால் அறையப்பட்டிருந்த போது ஒரு மனிதனாக அவர் இருந்தார். தம்முடைய கையில் ஆணிகளால் அடித்திருக்கப்பட்டிருந்த ஒரு மனிதனாக அவர் இருந்தார். தம்முடைய தலையின் மேல் முள்ளுகளையுடைய ஒரு மனிதனாக அவர் இருந்தார். எள்ளி நகையாடின போர்ச்சேவகர்களின் எச்சிலை தம் மேல் கொண்டிருந்த ஒரு மனிதனாக அவர் இருந்தார். நொறுக்கப்பட்ட, சாட்டையடிகள் கொண்ட, காயப்பட்ட ஒரு மனிதனாக அவர் இருந்தார். அவர் ஒரு மனிதனாக இருந்தார்! அவர், “என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று கதறிய போது ஒரு மனிதனாக அவர் இருந்தார். உதவிக்காக கதறிக்கொண்டிருந்த போது ஒரு மனிதனாக இருந்தார். ஆனால் ஈஸ்டர் காலையன்று கல்லறையில் மரணத்தின் முத்திரைகள் உடைத்த போது, அது மனிதனைக் காட்டிலும் மேலான ஒன்று! தாம் தேவன் என்று அவர் நிரூபித்தார். ஜீவிக்கும்போது அவர் என்னை நேசித்தார்; மரித்தபோது என்னை இரட்சித்தார்; அடக்கம்பண்ணப்பட்டபோது அவர் என் பாவங்களை தூரமாகக் கொண்டு சென்றார்; உயிர்த்தெழுந்தபோது அவர் இலவசமாய் என்னை என்றைக்குமாய் நீதிமானாக்கினார்; ஒரு நாளில் அவர் வருவார், ஓ மகிமையான நாள்!.
305. எட்டி ப்ருட் இவ்விதமாகச் சத்தமிட்டதில் ஆச்சரியம் ஒன்றுமே இல்லை.
இயேசுவின் வல்லமையை எல்லோரும் வாழ்த்தட்டும் தூதர்கள் தாழவிழுந்து பணியட்டும் அந்த ராஜரீகக் கிரீடத்தை கொண்டு வந்து அவரே எல்லாவற்றிற்கும் தேவன் என்று முடிசூட்டுவோம்.
306. கர்த்தராகிய இயேசு அவர் தான் அந்த மகத்தான நபர். அவர் யேகோவா, மாமிசத்தில் திரைமறைக்கப்பட்டிருந்த தேவன். வேதாகமம் “வார்த்தையினாலும் கிரியையினாலும் நீங்கள் எதைச் செய்தாலும், அதை அவருடைய நாமத்தில் செய்யுங்கள்,” என்று கூறுகின்றது. வேதாகமம், “பரலோகத்திலுள்ள முழுக்குடும்பத்திற்கும் “இயேசு” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. பூமியிலுள்ள முழு குடும்பத்திற்கும் “இயேசு” என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது, என்று கூறுகின்றது. அவருடைய நாமத்தில் நாம் ஜெபிப்போம், அவருடைய நாமத்தில் ஜீவிப்போம், அவருடைய நாமத்தில் போதிப்போம், அவருடைய நாமத்தில் மரிப்போம், அவருடைய நாமத்தில் அடக்கம் பண்ணக்கடவோம், அவருடைய நாமத்தில் ஞானஸ்நானம் பெறுவோம், அவருடைய நாமத்தில் உயிர்த்தெழுவோம், அவருடைய நாமத்தில் பரலோகம் செல்வோம். அது தான் அவருடைய நாமம், அவருடைய மணவாட்டிக்கு “செல்வி இயேசு” என்று பேரிடப்பட்டுள்ளது. அவருடைய நாமத்திற்காக புறஜாதிகளிலிருந்து ஒரு கூட்ட மக்களை அது வெளியே எடுக்கும்.
307. நான் ஒரு ஒருத்துவக்காரன் அல்ல. இல்லை ஐயா. திரித்துவ ஜனமே அதை உன்னிடத்திலிருந்து எடுத்துப்போடு. நான் ஒரு ஒருத்துவக்காரன் இல்லை. இல்லை ஐயா. ஒரு நாள் ஒருத்துவத்தைச் சேர்ந்தவனோ அல்லது ஒரு திரித்துவக்காரனோ அல்ல. வேதாகமம் என்ன கூறுகிறதோ அதைத் தான் நான் விசுவாசிக்கிறேன். அது சரியானது, ஆமென். வியூ! நான் ஒன்றின் பேரில் அதிகமாக பேசுகிறேன். அது என்ன? அதை சரியாக விளக்கினேனா? அல்லது, அது என்னவென்று நாம் பார்ப்போமா? ஓ, அப்படியா, அது சரியானது, அந்த... எப்படி பிதா கிறிஸ்துவுக்கள் இருந்தார் என்று. அவர் ஒரு மனிதனாக இருந்தார், அவர் தேவன் - மனிதன் ஆவார்.