Q.410. சகோ. பிரன்ஹாமே... (மற்றவைகளை கேட்க உங்களுக்கு விருப்பமா - என்னால் முடிந்த
வரையில் விரைவாக) சகோ. பிரன்ஹாமே, ஒரு சமயம் தேவன் எனக்கு சாராளுக்கு அருளியது போல், ஒரு
வாக்குத்தத்ததை அளித்தார் என்று உணர்ந்தேன். அதைக் குறித்த ஒரு கேள்வி எனக்கிருந்தது. அந்த
வாக்குத்தத்தம் பிறகு வந்தது. அது தேவனிடத்திலிருந்த வந்த வாக்குத்தத்தமா? சாராள் பெற்ற
வாக்குத்தத்தம் தேவனிடத்திலிருந்து வந்ததென்று அறிவேன், ஆனால் காலம் மிகவும் குறுகியுள்ளது
என்று உணருகிறேன். நாங்கள் உங்கள் ஊழியத்தையும் உங்களை: ஊழியத்திற்கு அழைத்தவரையும்
நேசிக்கிறோம் (அது மிகவும் இனிமையானது இல்லையா?) உங்கள் ஊழியத்தையும் உங்களை
ஊழியத்திற்கு அழைத்தவரையும் நேசிக்கிறோம். ஆகையால் உங்களையும், நாங்கள் நேசிக்கிறோம். ஓ,
அவர்கள் தங்கள் பெயரைக் கையொப்பமிட்டுள்ளனர். நன்றி, சகோதரி சகோதரனே. ஒரு கேள்வி, ஆம், ஆம்,
சரி.
121. இப்பொழுது, தேவன். அவர் உங்களுக்கு வாக்குத்தத்தத்தை அளித்தார் என்று நினைக்கிறேன், அது
சாராளைப் போல் நிறைவேறும். நிச்சயமாக, அவர் அதே தேவன்; அவர் அதே விதமாக பதிலளிக்கிறவர். அது
தேவனிடத்திலிருந்து, வந்தது என்பதைத் தவிர வேறெதையும் விசுவாசிக்காதீர்கள்.
சகோ. பிரான்ஹமே, வேதத்தைக் குறித்த சில கேள்விகளை உங்களிடம் கேட்க விரும்புகிறேன். தயவு கூர்ந்து
பரி. மாற்கு... விளக்கவும்.
அதை ஏற்கனவே விளக்கி விட்டேன், அதை ஏற்கனவே கூறிவிட்டேன், பார். மாற்கு 16. அன்றொரு நாள் அதை நாம்
பார்த்தோம். எனக்கு ஞாபகமுள்ளது, நாம் தொடர்ந்து பார்ப்போம்.