122. ஞாபகமுள்ளதா, நான் கூறினேன். நான் “ஜோக்” அடித்தேன். அதாவது, “வாசல் வழியாக நுழையாமல் ஜன்னலின் வழியாக உள்ளே வந்த ஸ்தாபன சகோதரன்” என்று நான் கூறினேன். வாசல் என்பது வார்த்தை.
காயீன் சர்ப்பத்தின் வித்து என்று நீங்கள் கூறினீர்கள். அப்படியானால் ஏவாள் “கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன்” என்று கூறக்காரணம் என்ன?
இந்த கேள்வியைத் தான் நான் காலையில் தேடிக்கொண்டிருதேன். அதற்கான வேதவசனங்களை இங்கு நான் எழுதி வைத்திருக்கிறேன். இங்கு நான் திரும்பவும் படிக்கிறேன். நான் நினைக்கிறேன். இங்கு சிலவற்றை கண்டு பிடித்து...
சகோ. பிரன்ஹாமே, வழிபாட்டில் கத்தோலிக்கனாக வளர்க்கப்பட்ட என் கணவர், அவருடைய வழியில் ஜெபிக்க விரும்புகிறார்...
இதற்கு நான் பதில் கூறி விட்டேன். ஞாபகமுள்ளதா? ஓ, இவை மறுபடியும் வருகின்றன. அதற்கு நான் பதில் கூறி விட்டேன். சகோ. பிரன்ஹாமே, நான் முடிவில்... என் சகோதரிக்கு ஊக்கமூட்டம் அதற்கு பதில் கூறிவிட்டேன். ஒரு ஸ்திரீக்கு கத்தோலிக்க சகோதரி ஒருத்தி இருக்கிறாள்.
சகோ. பிரன்ஹாமே, 2 தீமோத்தேயு 4ம் அதிகாரத்தில், அளிக்கப்பட்ட வரம்...
அதை நாம் பார்த்து விட்டோம். எத்தனை பேருக்கு ஞாபகமுள்ளது? பதில் கூறப்பட்ட கேள்விகள் இங்கு கலந்து விட்டன. பாருங்கள்?
எந்த விதமான... உபயோகிப்பது நியாயமானதா?
123. அது கருத்தடையைக் குறித்த கேள்வி. இன்று காலையில் நான் கூறினது போல், உங்களிடம் இதைக் குறித்து நான் தனியாக பேசட்டும்.
முதலாவதாக, அந்த ஐந்து புத்தியில்லாத கன்னிகைகளும் இரட்சிக்கப்படுவார்களா...
அதையும் நான் பார்த்து விட்டேன். நான் படித்ததையே திரும்ப படிக்கிறேன். ஒரு நிமிடம், என்னுடன் பொறுமையாயிருங்கள்.
வழியை அறிந்து கொண்ட பிறகு, மனந்திரும்புதல் பரிசுத்தமாகுதல் என்பவைகளுக்கான வழியை மட்டுமாவது அறிந்து கொண்ட பிறகு (அதை நாம் பார்த்து விட்டோம், உங்களுக்கு ஞாபகமுள்ளதா?), அவர்கள் அதிலிருந்து விழுந்து போவார்களானால்...
இந்த கேள்வியையும் நாம் பார்த்து விட்டோம். நான் ஒரளவுக்கு படித்த கேள்விகளை திரும்பவும் படிப்பதை முடிக்கும் தருவாயில் இருக்கிறேன். நான் இவைகளை...
சகோ. பிரன்ஹாமே, பிணம் எங்கேயோ அங்கே கழுகள் வந்து கூடும்” என்று மத். 24:28ல் கூறப்பட்டதன் அர்த்தம் என்ன? அதை “நான் விளக்கினது உங்களுக்கு ஞாபகமுள்ளதா? பாருங்கள்? அதற்கு நான் பதில் கூறி விட்டேன். படித்த கேள்விகளை திரும்ப படிப்பதை முடித்து விட்டேன் என்று நினைக்கிறேன். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!
எடுத்துக்கொள்ளப்படுதலுக்கென்று மணவாட்டி உம்மோடு கூட இருப்பதற்கான நேரம் வந்து விட்டதா? (இப்பொழுது, இந்த கேள்விக்கும் நான் பதில் கூறிவிட்டேன்).
ஒருக்கால் நான்... இதற்கு நான் பதில் கூறி விட்டேன் என்று எனக்குத் தெரியும். ஏனெனில் அதற்கு அடையாளமாக கீழே ஒரு கோடு போடப்பட்டுள்ளது. எனக்கு ஞாபகமுள்ளது. நல்லது, கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! நாம் வரிசைக் கிரமமாக கீழே வந்து கொண்டேயிருக்கிறோம். இப்பொழுது பார்ப்போம்.