125. இப்பொழுது நான் புகையிலைக்கு எதிராயிருக்கிறேன். புகையிலை உபயோகிப்பதற்கு நான் விரோதமாயிருக்கிறேன்; மறுபடியும் பிறந்த எந்த கிறிஸ்தவனும் அப்படித்தான் இருப்பான்; அவ்வளவு தான், ஏனெனில் அது தவறு. மருத்துவ விஞ்ஞானமும் கூட, புகையிலை தான் தொண்டை மற்றும் நுரையீரல் புற்று நோய்க்கு காரணம் என்று கூறுகிறதென்று நாம் அறிந்திருக்கிறோம். அவர்கள் “வடிகட்டப்பட்ட சிகரெட்டுகளை புகையுங்கள்” என்கின்றனர்.
126. இப்பொழுது, புகை பிடிக்கும் மனிதரே ஸ்திரீகளே, அது உங்களை ஏமாற்றும் ஒன்று ஏனெனில் உங்களால்... நல்லது. அவர்கள் செய்கின்ற ஒரே காரியம்... நீங்கள் வடிகட்டப்பட்ட சிகரெட்டுகளை வாங்கும் போது, அவைகளை நீங்கள் அதிகமாக வாங்க - வேண்டும், ஏனெனில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் புகையைத் தான் அது உள்ளே அனுமதிக்கிறது. ஏனெனில் எவரும் உங்களிடம் கூறுவார்கள்.
127. சென்ற ஆண்டில் வாஷிங்டனில் நடந்த உலக சந்தையில் (நான் உலக சந்தைக்கு சென்றிருந்த போது), இதைக் குறித்த ஒரு விரிவுரையை நான் கேட்க நேர்ந்தது. உலகின் பல்வேறு பாகங்களிலிருந்து வந்திருந்த மருத்துவர்கள் அதை விளக்கினர்; “தார்” (tar)இல்லாத புகை இருக்க முடியாது என்று அவர்கள் கூறினர், உங்களால்... உங்களுக்கு புகை இருந்தால் உங்களுக்கு “தாரும்” கூட இருக்கும். அவர்கள், “வடிகட்டப்பட்ட சிகரெட்டுகளின் விஷயத்தில் யாரும் உங்களை ஏமாற்றாதபடிக்கு ஜாக்கிரதையாயிருங்கள், ஏனெனில் சிகரெட் பிடிக்கும் திருப்தி உங்களுக்கு தேவையானால், சாதாரண சிகரெட் ஒன்று புகைப்பதற்கு பதிலாக, இரண்டு அல்லது மூன்று வடிகட்டப்பட்ட சிகரெட்டுகளை நீங்கள் புகைக்க வேண்டும்” என்றனர். அது பொது ஜனங்களை ஏமாற்றும் ஒரு சூழ்ச்சி, வானொலியிலும் தொலை பேசியிலும் கூறப்படும் ஏமாற்றக்கூடிய ஒரு தகவல்.
128. ஆனால், புகையிலை ஸ்தலத்தில் பணி புரிவதும், புகையிலை பயிரிடுவதுமான விஷயத்தில். இந்த புகையிலையைப் பயிரிடும் கென்டக்கி சகோதரராகிய நீங்கள்... நல்லது. ஒரு காரியத்தை உங்களுக்கு கூற விரும்புகிறேன். நீங்கள் அவ்விதம் செய்வது உங்களைக் குற்றப்படுத்துமானால், அதை செய்யாதீர்கள், ஏனெனில் யாரையும் மரணத்துக்கு கொண்டு செல்லும் என்று நான் அறிந்துள்ள எந்த ஒரு காரியத்தையும் நான் செய்ய விரும்ப மாட்டேன். என் அயலானுக்கு போதை உண்டாக்கும் குடியைக் கொடுப்பது தவறானால், அந்த குடியை உண்டாக்குவதும் தவறாகும். ஆனால் வேறொன்றை நான் கூற விரும்புகிறேன். இப்பொழுது, அதை பயிரிடும் விஷயத்தில்...
129. புகையிலையிலுள்ள நிகோடின் மருத்துவத்திலும் உபயோகப்படுத்தப்படுகிறதென்று உங்களுக்குத் தெரியும். நீங்கள் பயிரிடும் சோளம், கோதுமை, பார்லி” இவைகளிலிருந்து விஸ்கி தயாரிக்கப்படுகிறதென்று உங்களுக்குத் தெரியுமா? அது சரிதானா? சரி. பாருங்கள்? அதை எதற்காக உபயோகப்படுத்தப் போகிறார்களென்று உங்களுக்குத் தெரியாது.
130. ஆனால் இப்பொழுது, நாம் சோளம் பயிரிடுகிறோம், நாம் சோளம் பயிரிடும் போது, அது சோளச் சீவல் (cornflakes) செய்யவும், ஜனங்களுக்கு ஆகாரமாயிருக்கவும், சோள ரொட்டி செய்யவும் பயன்படுத்தப்படுகிறதென்று நாம் நினைத்துக் கொள்கிறோம். ஆனால் அவர்கள் அதிலிருந்து போதை தரும் மதுவையும் தயாரிக்கின்றனர் (பாருங்கள்?), எனவே உங்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
131. நீங்கள் லீலிப் புஷ்பம் வளர்த்து லீலிப் புஷ்பம் தோட்டத்தை வைத்திருக்கிறீர்கள். அவர்கள் லீலிப் புஷ்பத்தைக் கொண்டு என்ன செய்கின்றனர் தெரியுமா? அவர்கள் அதிலிருந்து அபினி என்றும் லாகிரி வஸ்துவை தயாரிக்கின்றனர். அவர்கள் “லெட்டூஸ்” கீரையைக் கொண்டு என்ன செய்கின்றனர் தெரியுமா? அவர்கள் அதே காரியத்தையே செய்கின்றனர். அபினி “லெட்டூஸ்” கீரையிலும் உள்ளது. நீங்கள் “லெட்டூஸ்” கீரையை தின்றுவிட்ட பிறகு சற்று நேரம் அமைதியான உணர்வைக் கொண்டிருப்பதை கவனித்திருக்கிறீர்களா? அதிலுள்ள அபின் தான் அதற்கு காரணம். வெங்காயத்திலும் அது உள்ளதென்று உங்களுக்குத் தெரியுமா? நிச்சயமாக, எனவே எதற்காக நீங்கள் அதைச் செய்கிறீர்கள் என்பதை அது பொறுத்தது.
132. ஆனால் ஒரு கிறிஸ்தவ சகோதரன் மற்றொரு கிறிஸ்தவ சகோதரனுக்கு ஆலோசனை கூறும் வகையில் இதை கூற முற்படுகிறேன்; உங்களுக்கு புகையிலை தோட்டம் இருக்குமானால், அதை வேறெவருக்காவது விற்று விட்டு, சோளம் பயிரிட நோக்குங்கள். அது நல்லதாயிருக்கும் என்று நினைக்கிறேன், (பாருங்கள்?) ஏனெனில் சந்தேகமின்றி, அவர்கள் பயிரிடும் அதை...
என் கணவர் குடிகாரியான விபச்சாரி ஒருத்தியை விவாகம் செய்திருந்தார்...
அதற்கு நான் பதில் கூறி விட்டேன். அது எங்கிருந்து வந்ததென்று நான் உங்களிடம் கூறினேன். அது இங்கு தொலைவில் உள்ள ஒரு இடத்திலிருந்து. இந்த கேள்விக்கு பதில் கூறி விட்டேன். இப்பொழுது பார்ப்போம்.
வெளிப்படுத்தல் 12ம் அதிகாரத்தில் உரைக்கப்பட்டுள்ள ஸ்திரீ...
இதற்கும் நான் பதில் கூறி விட்டேன். ஆம், இந்த மொத்தமான கேள்விகளுக்கு நான் பதில் கூறி முடித்து விட்டேன். அது வெளிப்படுத்தல் 12ம் அதிகாரத்தின் பேரில், அந்த ஸ்திரீ யாரென்று. நாம் பார்ப்போம்.