Q.414. சகோ. பிரன்ஹாமே, ஒரு பெண் பிரசங்கியின் கட்டுக்குள் இருக்கும் ஒரு சபைக்கு என் இரண்டு
பிள்ளைகளும் செல்கின்றனர். அவள் வார்த்தையை விட்டு விலகியிருக்கிறாள் என்று எங்களுக்குத்
தெரியும். அவர்கள் இந்த வலுவான ஆதிக்கத்தில் சிக்கிக் கொண்டுள்ளனர். அது தவறென்று நாங்கள்
எவ்விதம் அவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும்?
133. நான் முன்னமே உங்களுக்குக் கூறினேன். அதற்கு நான் பதில் கூறினேன். அதை மிருதுவாக கையாளுங்கள்.
நீங்கள் என்ன கூறுவீர்கள், நான்... அந்த நபர் இங்கு உட்கார்ந்து கொண்டிருப்பதை நானறிவேன். அந்த
ஸ்திரீ யாரென்று எனக்குத் தெரியுமென்று நான் உங்களிடம் கூறினால், நீங்கள் என்ன கூறுவீர்கள்?