134. இன்று காலையில் அதற்கு நான் பதில் கூறினேன். பாருங்கள்? அது ஆயிரம் ஆண்டுகள். சரி.
சகோ. பிரன்ஹாமே, பிரச்சினை என்னவெனில்... - ஆம். அதற்கு நான் பதில் கூறிவிட்டேன். கோதுமையும் களைகளும். அதற்கு பதில் கூறினது உங்களுக்கு ஞாபகமிருக்கும்.
இப்பொழுது நாம் வரிசைக்கிரமமாக கீழே வந்து விட்டோம். இந்த கேள்விகளை நான் ஒருக்கால் மீண்டும் உறையில் போட்டிருக்கக் கூடும். நாம் பார்ப்போம். அதே காரியம்.
பிரன்ஹாமே, நான் ஆறு அருமையான பிள்ளைகளுக்குத் தாய், பண உதவி செய்வதற்காக என் கணவர் என்னை வேலைக்குச் செல்லும்படி கூறுகிறார். நான் போகலாமா? மேலும், ஆபிரகாம், தானியேல், எபிரேய பிள்ளைகள் ஆகியோருக்கு இருந்ததைப் போன்ற விசுவாசத்தை தேவன் எனக்கு அருளுமாறு எனக்காக ஜெபிக்கும்படி விரும்புகிறேன். ஒரு கிறிஸ்தவன் புகையிலை பயிரிடலாமா? இதற்கு நாம் பதில் கூறினோம்...