139. நல்லது. அது ஒரு நல்ல கேள்வி. நீங்கள் பாம்புகளைக் கையாளுகிறவர்களின் மத்தியில் இருந்து. அவர்கள் மாற்கு 16 என்று கூறுவார்களானால்... நிச்சயமாக! வேதம் என்ன கூறியுள்ளதோ, அதை அந்த அர்த்தத்தில் தான் கூறியுள்ளது என்று நான் விசுவாசிக்கிறேன். ஆனால் நாம் தேவனை ஏதாவதொன்றில் பரீட்சை பார்க்க முற்பட்டால், நமக்கு தீங்கு உண்டாகும் என்பது என் கருத்து. ஒரு குப்பி ஆர்செனிக் விஷத்தை நீங்கள் என்னிடம் கொண்டு வந்து. அதை நான் குடித்து விட்டு எனக்கு விசுவாசம் உண்டென்பதை நிரூபிப்பதை நீங்கள் காண முடியுமா என்று தேவன் ஒரு போதும் சித்தம் கொண்டதில்லை; அதே விதமாக நீங்கள் ஒரு பாம்பை என்னிடம் கொண்டு வந்து. அதை நான் கையிலெடுத்து, விஷத்தை மேற்கொள்ள எனக்கு விசுவாசம் உண்டு என்று உங்களுக்குக் காண்பிப்பது தவறாகும். அது அவ்விதம் இல்லை என்று நான் நம்புகிறேன்.
140. நான் நம்புவது என்னவெனில், நான் தண்ணீரில் ஞானஸ்நானம் கொடுக்க நேர்ந்து, அல்லது கர்த்தருடைய ஊழியத்தை செய்து கொண்டிருக்கும் போது, அல்லது காடுகளுக்கு நான் சென்றுள்ள போது. பாம்பு என்னைக் கடிக்குமானால், நான் கர்த்தருடைய நாமத்தில் நடந்து சென்று கொண்டிருப்பேன். பாருங்கள்? அதுதான் அதன் அர்த்தம் என்று நான் நம்புகிறேன்:
141. இப்பொழுது, நீங்கள் பாம்பைக் கையாள வேண்டுமானால்... அதைக் குறித்து என்ன செய்கிறீர்கள் என்று பாருங்கள், அருமை நபரே, அது யாராயிருந்தாலும்... இதை ஞாபகம் கொள்ளுங்கள். பாருங்கள். அதைக் குறித்து வேதம் என்ன செய்தது என்பதைக் கவனியுங்கள். நான் நம்பவில்லை, நீங்கள் “மகிமை, மகிமை, மகிமை” என்று கூறிக் கொண்டேயிருக்க முயன்றால்... அந்நிய பாஷையில் பேசுவதற்காக தேவனை பரீட்சை பாராதிருங்கள். ஆவியானவர் உங்கள் மூலம் பேச இடம் கொடுங்கள். பாருங்கள்?
142. இப்பொழுது, தேவனை பரீட்சை பார்ப்பதில், அல்லது எதையும் உந்திப் பெற்றுக் கொள்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் சற்று முன்பு கூறினது போல, ஆவியானவர். நாம் ஆவியானவருக்கு காத்திருக்கிறோம்; அவர் அதை செய்கிறார்.
143. இப்பொழுது கவனியுங்கள், பவுல் கிரேத்தாதீவில் விறகுகளை பொறுக்கிக் கொண்டிருந்தான், அது கிரேத்தா தீவு என்று தான் நினைக்கிறேன் (மெலித்தா தீவு - தமிழாக்கியோன்) அவன் சங்கிலிகளால் கட்டப்பட்டிருந்தான், அப்பொழுது ஒரு பாம்பு, ஒருக்கால் அது “மம்பா” என்னும் விஷப் பாம்பாக இருக்கக் கூடும். அது மரணக்கடி; அவன் உடனே கீழே விழுந்து மரித்திருக்க வேண்டும். மம்பாவைத் தவிர உடனே கொல்லக் கூடிய வேறெந்த பாம்பும் கிடையாது.
144. எனவே அவன் இந்த மம்பாவை கையிலெடுத்தான் என்று நாம் வைத்துக் கொள்வோம். அது மரணத்தை விளைவிக்கும் கடி; அதன் பிறகு உங்களால் ஒரு சில மூச்சுகளே விடக்கூடும். மம்பா உங்களைக் கடிக்குமானால்...”அல்லது நாகப் பாம்பு, கறுப்பு நாகப் பாம்பு உங்களைக் கடிக்குமானால், அதற்கு ஊசி போட்டாலும், நீங்கள் உயிர் வாழ்வதற்கு ஐம்பது சதவிகிதம் வாய்ப்பே இருக்கும். மஞ்சள் நாகப் பாம்பு கடித்தால், நீங்கள் - இறந்து போக 80% வாய்ப்பும், உயிரோடிருக்க 20% வாய்ப்பும் இருக்கும். ஆனால் மகிபா கடித்தால், உயிரோடிருக்க எந்த சத விகித வாய்ப்பும் உங்களுக்கு கிடையாது. நீங்கள் இறந்து விடுவீர்கள், அவ்வளவுதான், ஏனெனில் அதன் பிறகு உங்களால் ஒரு சில மூச்சுகளே விட முடியும், அது உங்கள் நரம்புகளையும், இரத்தக் குழாய்களையும், மற்றெல்லாவற்றையும் இயங்காமல் செய்து விடுகிறது. நீங்கள் இறந்து விடுவீர்கள். பாருங்கள்?
145. இந்த மம்பா பவுலைக் கையில் கவ்வின போது, அவர்கள் “இந்த மனிதன் துன்மார்க்கன், இவன் ஒருக்கால் கொலைக்காரனாயிருக்கக் கூடும். இவன் கடலில் உயிர் தப்பி வந்த போதிலும், இவனால் மரணத்திலிருந்து தப்ப முடியவில்லை. இவன் கொலைகாரனாதலால், தேவன் இவனைப் பழிவாங்குகிறார்” என்றனர்.
146. பவுல் நோக்கினான், இந்த பாம்பு அவனுடைய கையில் தொங்கிக் கொண்டிருந்து, அவன் அதை உதறி விட்டான். அவன் பயந்து போய், “ஓ, கர்த்தாவே, எனக்குதவி செய்யும்” என்று சொல்லவில்லை. இல்லை! அவன் அதை உற்று நோக்கி, அதை தீயில் உதறி விட்டு, ஒன்றுமே நடக்காதது போல் விறகுகளைத் தொடர்ந்து பொறுக்கிக் கொண்டிருந்தான்.
அவர்கள், “இவன் இன்னும் ஒரு நிமிடத்தில் இறந்து விடுவான். ஏனெனில் அந்த பாம்பு கடிக்குமானால், நீங்கள் இறந்து விடுவீர்கள்” என்றனர். நேரம் சிறிது கிடந்தது, பவுலுக்கு வீக்கம் எதுவும் ஏற்படவில்லை, அவன் மரிக்கவில்லை, அவனை அது பாதிக்கவேயில்லை. அவர்கள் உடனே தங்கள் கருத்தை மாற்றிக் கொண்டு, “இவன் வானத்திலிருந்து மனித ரூபத்தில் இறங்கி வந்த தேவன்” என்றனர்.
147. அவன், “அந்த பாம்பை என்னிடம் கொண்டு வாருங்கள்” என்று சொல்லவில்லை. அந்த பாம்பு அவனை எதேச்சையாக கடித்தது. அவன் தேவனை பரீட்சை பார்க்கவில்லை, ஆனால் பாம்புக் கடியை மேற்கொள்ள அவனுக்கு. தேவனிடம் விசுவாசம் இருந்தது. நான் கூறுவது உங்களுக்கு விளங்குகிறதா?
148. எனவே பாம்புகளைக் கையாளுகிறவர்கள் மத்தியில் இருக்கிற நீங்கள் யாராயிருந்தாலும், நான்... இப்பொழுது, அவர்கள் பாம்புகளைக் கையாள விரும்பினால், அது அவர்களைப் பொறுத்தது. நான் அந்த விதத்தில் இதை காணவில்லை.
149. இப்பொழுது, நீங்கள், “நல்லது, அந்த ஜனங்களுக்கு விசுவாசம் உள்ளது எனலாம். அவர்களுக்கு விசுவாசம் இல்லை என்று நான் சொல்லவில்லை, அவர்கள் அக்கினியினால் தங்களை எரித்துக் கொள்கின்றனர், அப்படிப்பட்ட காரியங்களைச் செய்கின்றனர், ஆனால் பாருங்கள். அது அப்பொழுதும் தேவனை நிரூபிப்பதில்லை.
150. இந்தியர்கள் நாற்பது கெஜம் நீளம் மூன்று அடி அகலமுள்ள குழியில், இலைகளைப் போட்டு, அது வெண்தழல் ஆகும் வரைக்கும் காற்று வீசி (விசேஷித்த மனிதர் அல்ல, குடியானவர்கள்), தங்கள் காலணிகளைக் கழற்றி (பூசாரிகள் அவர்கள் மேல் வெள்ளாட்டின் இரத்தம் தெளித்து அவர்களை ஆசீர்வதிக்க), அவர்கள் மீன்பிடிக்கும் தூண்டில் முள்களை எடுத்து வாயில் குத்திக்கொண்டு, அழகாக வர்ணமிடப்பட்ட குடங்களில் தண்ணீர் நிரப்பிக் கொண்டு இவ்வளவு நீளமுள்ள பெரிய மீன் தூண்டில் முள்கள் தங்கள் சதைகளில் குத்தப்பட்டு (அது உள்ளேயிருந்து வெளியே நீட்டிக் கொண்டிருந்தால் எப்படியிருக்கும் என்று உங்களுக்குத் தெரியும்), அப்படி நின்று கொண்டு, அந்த தீயின் வழியாக நடந்து சென்று, (அது வெண்தழல், சிகப்பையும் கடந்த வெண்தழல்) அந்த தீயின் வழியாக நடந்து சென்று, திரும்பி, மறுபடியும் அதன் வழியாக நடந்து வந்து, அவர்கள் பாதங்கள் சிறிதும் வெந்து போகாததை நான் கண்டிருக்கிறேன். அவர்கள் நமது தேவனை சிறிதும் கூட விசுவாசிப்பதில்லை. அவர்கள் பிசாசை வழிபடுகின்றனர். “பாருங்கள்? எனவே இவை ஒன்றுமில்லை. அதிலிருந்து விலகியிருங்கள்... நீங்கள் உண்மையும் இனிமையும் தாழ்மையும் கொண்ட கிறிஸ்தவர்களாயிருந்து. அப்படிப்பட்ட வாழ்க்கை வாழுங்கள். அப்பொழுது தேவன் மற்றவைகளைக் கவனித்துக் கொள்வார்.